IQBAL ART CLUB

IQBAL ART CLUB digit art

மரணம் என்றால் என்ன? இது எல்லோருக்குள்ளும் மிக அடிப்படையான கேள்வி. மரணம் நாம் மூன்றாம் மனிதர் பார்வையிலிருந்தே பார்க்கிறோ...
29/06/2025

மரணம் என்றால் என்ன? இது எல்லோருக்குள்ளும் மிக அடிப்படையான கேள்வி. மரணம் நாம் மூன்றாம் மனிதர் பார்வையிலிருந்தே பார்க்கிறோம். நமக்கும் மரணம் வரும் என்று நினைப்பதே இல்லை. அப்படி நினைக்கும் போதுதான் பயம் ஏற்படுகிறது. அந்த பயத்தைப் புரிதல் போக்கும். புரிதல் உண்டானால் தெளிவு பிறக்கும். அழிந்து போகும் உடலில் எதற்கு இத்தனை உணர்வுகள்? மரணத்திற்கு பிறகு உடல் மண்ணுக்குப் போகிறது ஆனால் ஆன்மா எங்கே போகிறது? பிறப்பு நம் கையில் இல்லை. இறப்பு நம் கட்டுப்பாட்டில் இல்லை. நமக்கும் ஒரு நாள் மரணம் உண்டுதானே! அது வரும் போது வரவேற்கும் துணிச்சல் இருந்தால் போதும். வாழ்ந்த வாழ்க்கை ஒரு அர்த்தம் பெறலாம்!

பெண்களின் மனதை புரிந்துக்கொள்ள முடியாது என்று சொல்வார்கள்.எதனால் எப்படி இப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை.ஆனால் ஒவ்வொ...
28/06/2025

பெண்களின் மனதை புரிந்துக்கொள்ள முடியாது என்று சொல்வார்கள்.

எதனால் எப்படி இப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மனம் விட்டு பேசுவதற்கான வாய்ப்பையும் சூழலையும் அமைத்துக்கொடுத்தால்..

அவர்களின் மனதை எளிதாக புரிந்துக்கொள்ள முடியும்.

பெரும்பாலான பெண்கள் தங்கள் மனதில் இருப்பதை, தங்களுக்கு விருப்பமானதை, தாங்கள் எதிர்பார்ப்பதை எல்லாம் பகிர்ந்துக்கொள்ள அதிகம் தேடுவது ஆண்களை மட்டும்தான்.

அதுவும் தன்னுடைய கணவன் அல்லது தன்னுடைய காதலன் அல்லது தன்னுடைய தோழன் என்ற நிலையில் இருக்கும் ஆண்களிடம்தான் தங்களுக்கான தேடுதல்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புவார்கள்.

ஆண்களிடம் இருக்கும் ஒரு அற்புதமான குணம்..
குறிப்பிட்ட வயது வரை பெரும்பாலான தருணங்களில் தனது மனைவியாகட்டும், தனது காதலியாகட்டும், தனது தோழியாகட்டும், யாராக இருந்தாலும்..

அவர்களை பெண்ணாக ரசிப்பதை, பெண்ணாக நேசிப்பதை, பெண்ணாக கவனிப்பதை என்ற எதிர்பாலின ஈர்ப்பினை தனது இயல்பாக கொண்டிருப்பார்கள்.

எந்தவொரு பெண்ணும் மற்றவர்கள் தன்னை தேவதையாக கொண்டாடப்படவேண்டும் என்று எப்போதும் விரும்புவதில்லை. அப்படி எதிர்பார்ப்பதுமில்லை.

அவளுடைய எண்ணங்கள் எல்லாம்.. தன்னை பெண்ணாக கவனித்து, தன்னை பெண்ணாக உணர்ந்து, தன்னை பெண்ணாக மதித்து..

தன்னை தனக்கேற்ற பெண்ணாக ரசிக்கும், நேசிக்கும் ஆண்களைதான்
தனது மனதினில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாக மட்டும்தான் இருக்கும். அதற்காக காத்திருப்பாள்.

அதுபோன்ற ஒரு ஆண் அவளுடைய வாழ்க்கையில் கிடைக்கும்போது..
அவன் கணவனோ, காதலனோ, தோழனோ எந்த நிலையில் இருந்தாலும் அவனை எக்காரணம் கொண்டும் தொலைக்காமல் இருக்க,
எதையும் தியாகம் செய்ய தயாராக இருப்பாள்.
எதற்கும் துணிந்திட தன்னை தயார்படுத்திக் கொள்வாள்.

அதே நேரத்தில் தான் மேற்கொள்ளும் தியாகத்திற்கு இணையாக அவனை சந்தேகப்படவும் செய்வாள். சண்டை போட்டுக்கொண்டும் இருப்பாள்.

இதனை புரிந்துக்கொண்டு அவளுடன் தொடர்ந்து பயணிக்கும் அந்த ஆண் அதிர்ஷ்டசாலியாகிறான்.
புரிந்துக்கொள்ளாமல் விலகிச் செல்லும் ஆண் சராசரி மனிதனாகி விடுகிறான்.

மொத்தத்தில் பெண் என்பவள் புரிந்துக்கொள்ள முடியாத அகராதி எல்லாம் இல்லை..
பெரும்பாலான ஆண்களால் படிக்க நேரம் ஒதுக்க முடியாத, அர்த்தங்கள் பல பொதிந்த ஒரு வாழ்வியல் புத்தகம்.

வாழ்வியல் புத்தகத்தின் அருமையை உணர்ந்து ரசித்து நேசித்து ஒவ்வொரு பக்கத்தையும் அதற்குரிய ரசனைகளோடு புரட்டி முழுமையாக படித்தால்,

எளிதில் புரிந்துக்கொள்ள முடிந்த சராசரி மனுசிதான் பெண்..

30 ஆண்டுகளுக்கு பிறகு எனது வகுப்பு தோழனை அன்று சந்தித்தேன்.நான் அவரை ஒரு ஹோட்டல் லாபியில் மீண்டும் பார்த்தபோது, அவர் எளி...
28/06/2025

30 ஆண்டுகளுக்கு பிறகு எனது வகுப்பு தோழனை அன்று சந்தித்தேன்.
நான் அவரை ஒரு ஹோட்டல் லாபியில் மீண்டும் பார்த்தபோது, அவர் எளிமையாக இருந்தார்.

அவர் எளிய உடைகளை அணிந்திருந்தார்.
நான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தேன்.

அவர் என்னிடம் நடந்து வந்து என்னை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். என்னுடன் ஒப்பிடுகையில் என்னைவிட கொஞ்சம் வசதி குறைவாகவே தெரிந்தது.

நாங்கள் தொலைபேசி எண்களையும், தொடர்பு விவரங்களையும் பரிமாறிக்கொண்டோம்.
என்னுடையதை கொடுத்தபோது அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைக் காண முடிந்தது.

பெருமிதத்துடன் எனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவரில் அவரை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்று அவரிடம் சொல்லி அதை அவரிடம் காட்டினேன்.
அவர் மறுத்து, அவர் ஏற்கனவே தனது காரை வரச்சொல்லி இருப்பதாக கூறினார்.
அது பழையதாகத் தோன்றியது.

'2001 ஹோண்டா'
மறுநாள் அவரை என் வீட்டில் மதிய உணவுக்கு அழைத்தேன்.
எனது வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அவருக்குக் காட்ட வேண்டும்.
நான் வசித்த பார்க்வியூவுக்கு அவர் காரில் வந்தார்.
எனது வீட்டைப் பார்த்து அவர் ஈர்க்கப்பட்டார்.

அந்த வீட்டை லோன் போட்டு கடனில் தான் வாங்கி இருந்தேன்.
நாங்கள் மதிய உணவு சாப்பிட்டோம்.
அவர் சிறு வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் இருப்பதாக என்னிடம் கூறினார்.

நான் அவருக்கு எப்படி உதவுவது என்று கேட்டேன்.
அவர் நலமாக இருப்பதாக கூறி மறுத்து விட்டார்.
ஆர்வமிருந்தால் கொஞ்சம் கடனை அடைக்க உதவுகிறேன் என்று கூட சொன்னேன்...

அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.
அவர் என்னை விரைவில் அவரது வீட்டிற்கு அழைப்பதாக என்னிடம் கூறினார்.

அவருடைய பழைய கார் வந்தது. என்னிடம் இருப்பவற்றிற்கு நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன்.

“விரல்கள் அனைத்தும் சமமாக இல்லை” என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்
நான் அதிர்ஷ்டசாலி.

நான் நல்ல கம்பெனியில் வேலை செய்கிறேன்.
இரண்டு வாரங்கள் கழித்து, அவரைப் பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்.
அந்த நண்பனின் அந்தஸ்தில் அவள் ஈர்க்கப்படாததால் கூட வர தயங்கினாள்.

கல்லூரியில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதை சொல்லி என்னால் அவளை எளிதில் சமாதானப்படுத்த முடிந்தது.
எஸ்டேட்டைப் பார்த்தோம்.

அவரது வீட்டிற்குச் செல்லும் வழியைக் கேட்டோம்.
எங்களை வழிநடத்துபவர்கள் அவருடைய பெயரை கேட்டவுடன் மரியாதையுடன் பேசினார்கள்.

அது ஒரு எளிய ஆனால் அழகான வீடு. ஒரு 4 படுக்கையறை பங்களா. முன்னால் 4 கார்கள் நிற்பதைப் பார்த்தேன்.
நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம்.

அது உள்ளே மனதை தொடும் அழகுடன் எளிமையாக நேர்த்தியாக இருந்தது. எங்களை அன்புடன் வரவேற்றார்.
மதிய உணவு நன்றாக பரிமாறப்பட்டது.
மதிய உணவின் போது, அவர் எனது எம்.டி பற்றி கேட்டார்.
அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறினார்.

அருகில் இருந்த அவரது டேபிள் ஒன்றில் கம்பெனி கிஃப்ட் ஒன்றைப் பார்த்தேன். நான் பணிபுரிந்த கம்பெனியின், சுமார் 38% பங்குகளை அந்த கம்பெனி வைத்திருந்தது.
அவரிடம் இதுபற்றி விசாரித்தேன். அவர் சிரித்தார் . அவர் என்னிடம், அந்த கம்பெனி தன்னுடையது என்று சொன்னார்.
இந்த பெரிய தோட்டமும் அவருக்குச் சொந்தமானது என்றார்.
எப்போது "சார்" என்று கூப்பிட்டேன் என்று தெரியவில்லை...
எனக்கும் அவர் மீது பிரமிப்பு ஏற்பட்டது.

பணிவு பற்றி நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்.
ஒரு பெரிய பாடம்.
தோற்றம் ஏமாற்றும்.
என் அசௌகரியத்தை அவர் கவனித்தார்.
வீட்டிற்குத் திரும்பும்போது நான் மிகவும் அமைதியாக இருந்தேன்.
என் மனைவி பணிவாகவும் மிகவும் அமைதியாகவும் இருந்தாள்.
அவள் மனதில் உள்ள எண்ணங்களை என்னால் உணர முடிந்தது.
கார் கண்ணாடியில் நான் என்னையே பார்த்தேன்.

கடன்கள், அதிக சுமைகள் ஆகியவற்றில் வாழ்கிறேன், ஆனால் எனக்குச் சம்பளம் கொடுப்பவர் மிகவும் அமைதியானவர், எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்..!

உண்மையில் ஆழமான ஆறுகள் அமைதியாக ஓடுகின்றன..!
மற்றவர்கள் பெருமையாக பேசவேண்டும் என்று வாழ்வதைவிட, உங்கள் நிம்மதிக்காக வாழுங்கள்.......♥️

கோர்ட்டில். ஒரு குற்ற வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்ததுஅப்போது  அந்த ஊர்லயே வயசான ஒரு கிழ...
31/10/2024

கோர்ட்டில். ஒரு குற்ற வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது
அப்போது
அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...
வக்கீல் :
"பாட்டி உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..."
பாட்டி :
"என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ?
உன்னைப்பத்தி சொல்லவா ?
நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே...
அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே..
ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..
அதிர்ந்து போனார் வக்கீல்.
மெல்ல சமாளிச்சிகிட்டு,
சரி பாட்டி.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ? ன்னு கேட்டார்.
பாட்டி :
தெரியுமாவா ? இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான்.
சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு...
இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் .
ஜட்ஜ் : (மேஜையை தட்டி)
"அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார்.
அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் பின் வருமாறு கூறினார் :
"கோர்ட் மறுபடியும் தொடங்கியதும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்தக் கிழவிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"

ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட.. சில காலம் கழித்து அவ...
30/10/2024

ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட.. சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான். அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்..
"அற்புதம்" என்றார் மேலாளர்... "இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை. உடனே காரை உருவாக்குவோம்" என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்.
முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல் கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி..
காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்.. இளைஞன் சோர்ந்தான்..
தன்னையே நொந்து கொண்டான்.. ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்.. வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்..
பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்..
காரை கஷ்டப்பட்டு இதே வாயில் வழியே எடுத்து செல்லலாம்..
மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்..
முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை..
அனைவருக்கும் குழப்பம்..
முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும்... இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை வெளியே கொண்டு செல்ல முடியலையே...
இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி முதலாளியிடம் "ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?" என்றார்... அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன சொல்லப் போகிறான் என்று..
ம்..ம்..ம்.. சொல்லு..... சொல்லு......
வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்.. காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக் கொள்ளலாம்..
அடடே.. எவ்வளவு சுலபமான வழி..
எந்த சேதமும் இன்றி....
வாழ்க்கை மிக சுலபமானது..
வாழ்வது ஒரு முறை.. அதை அனுபவியுங்கள்.. ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச் கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றை கழட்டி விடுவதைப்போல் கழட்டி எறியலாம் தானே...
ஒருவரின் தோற்றம் மற்றும் நிலையை வைத்து அவர் சொல்ல வரும் நல்ல விசயங்களை இழந்து விடாதீர்கள். அது எங்கேனும் உங்களுக்கு வாழ்க்கையில் உதவலாம். அடுத்தவர் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள்.. அது உங்கள் எண்ணங்கள் உயர வழி வகுக்கும்...
வாழ்க்கை மிக அழகானது... அதில் கோபம் குரோதம் பிடிவாதம் போன்றவற்றால் நிரப்பி அதன் பொலிவைக் கெடுத்து இன்னலில் சிக்கி தவிக்க வேண்டாமே...
செல்லும் வழி எங்கும் அன்பினை விதைப்போம்... சொல்லும் மொழியதனில் அன்பினை வளர்ப்போம்...

28/10/2024
தனியொரு விளையாட்டு வீரன் நினைத்தால் ஒரு கிராமத்தையே மாற்ற முடியும் என்பதற்க்கு சாட்சி தான் செனகலை சேர்ந்த இந்த கால்பந்து...
18/10/2024

தனியொரு விளையாட்டு வீரன் நினைத்தால் ஒரு கிராமத்தையே மாற்ற முடியும் என்பதற்க்கு சாட்சி தான் செனகலை சேர்ந்த இந்த கால்பந்து வீரர் சாடியோ மானே..!!💜

புழுதி பறக்க தன் கால்கள் நடனமாடிய தன் கிராமம் முன்னேற்றம் அடையாததை கண்டு வேதனையடைந்த அவர் இரண்டு லட்சத்து எழுபது ஆயிரம் யூரோ செலவில் ஒரு பள்ளியை தன் கிராமத்தில் கட்டினார்.
ஐந்து லட்சத்து முப்பதாயிரம் யூரோ செலவில் இலவச மருத்துவமனை ஒன்றை தன் கிராமத்து மக்களுக்காக கட்டினார்.
ஆரஞ்ச் நிறுவனத்திடம் இனைந்து தன் கிராமத்துக்கு 4G நெட் வொர்க்கை கொண்டு வந்தார்.
ஒரு எரிவாயு நிலையம் ஒன்றை அமைத்து கொடுத்தார் .
இது போக ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்துக்கு 70 யூரோக்கள் தன் சம்பளத்தில் இருந்து கொடுக்கிறார். தன்னை உருவாக்கி விட்ட இடத்துக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இது என்கிறார் மானே..!!

ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக மூடப்பட இருந்த ரயில் நிலையத்தை அந்த மாணவியின் படிப்பு முடியும் வரை திறந்து வைத்த நெகிழ்ச்சியான ...
18/10/2024

ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக மூடப்பட இருந்த ரயில் நிலையத்தை அந்த மாணவியின் படிப்பு முடியும் வரை திறந்து வைத்த நெகிழ்ச்சியான உண்மை சம்பவம் தான் இது..!!💜

ஜப்பானின் கியூ ஷீராட்டகி என்கிற ஊரில் தினமும் ஒரே ஒரு ரயில் மட்டும் வந்து செல்லும் ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த ரயில் நிலையத்துக்கு போதிய பயணிகள் வராததால் ஜப்பானிய ரெயில்வே அந்த ரயில் நிலையத்தை 2015 ம் ஆண்டு உடனடியாக மூடி விட முடிவு செய்தது. ரயில் நிலையத்தை மூடும் முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் கன ஹரதா என்கிற ஒரே ஒரு பள்ளி மாணவி மட்டும் தினமும் கியூ ஷிராட்டகி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 35 நிமிடங்கள் பயணம் செய்து மற்றுமோர் ரயில் நிலையத்தை அடைந்து அதன் பின் பள்ளிக்கு செல்வதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ரயில் நிலையத்தை மூடினால் மாணவியின் உயர்பள்ளி படிப்பு பாதிக்கும் என்பதால் அந்த மாணவியின் படிப்பு முடியும் வரை கிட்டதட்ட 15 மாதங்கள் அந்த ரயில் நிலையத்தை திறந்து வைத்து படிப்பு முடிந்த பின் மூடியது ஜப்பானிய ரயில்வே..!!
பொதுவாக ஜப்பானிய மக்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் அது போல விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்றவர்கள் அதை பற்றி பிரிதொரு பதிவில் பார்ப்போம்..!!💜

வரவேற்பு நிகழ்வு...........................................வாழைச்சேனை 206B  கிராம சேவையாளர் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப...
05/09/2024

வரவேற்பு நிகழ்வு...........................................
வாழைச்சேனை 206B கிராம சேவையாளர் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.றிகாஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு 05.09.2024ம் திகதி காலை 10.00 மணிக்கு வாழைச்சேனை இக்பால் சனசமூகத்தில் அதன் தலைவர் ஏ.எல்.எம்.லியாப்தீன் JP அவர்கின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வை வாழைச்சேனை இக்பால் சனசமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வுக்கு பாடசாலை அதிபர்கள்,மகளிர் சங்கத்தினர்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர்கள்,சிவில் பாதுகாப்பு குழுவினர்கள்,வர்த்தக சங்கத்தினர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

06/08/2024

தனக்கென்று ஒரு கை தொழிலை கற்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தையல் பயிற்சி ..................................................................
நவீன தையல் கலை மற்றும் டிசேர்ட், உள்ளாடைகள் தைப்பது அதன் முக்கியததுவம் அதற்கான சந்தை வாய்ப்பு போன்ற வழிகாட்டல் பயிற்சி

கற்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள IQBAL ART CLUB VALAICHCHENAI WhatsApp-0776015270 என்ற இலக்கத்துக்கு வாட்சாப் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.........................................................................
04/06/2024

இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.........................................................................................
தைக்க தெரிந்தவர்களுக்கு தொழில் தகமைச் சான்றிதழ் பெற்றுக் கொள்வது எப்படி ,தனக்கென்று ஒரு கை தொழிலை கற்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த 02.06.2024ம் திகதி ஞாயிறு காலை.10.30மணிக்கு இக்பால் கலைமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எல்.எம்.லியாப்தீன் JP அவர்களின் தலைமையில் இக்பால் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை உத்தியோகத்தர் எம்.நளீம் அவர்கள் கலந்து கொண்டதுடன் உற்பத்தி மற்றும் சந்தைவாய்ப்பு துறையில் அனுபவமிக்க முன்னால் நோலிமிட் முகாமையாளர் எம்.எம்.பழீல் அவர்களும் வாழைச்சேனை AC YMMA தலைவர் ஏ.பி.இர்பான் ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டனர்.

இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த 26.05.2024ம் திகதி பி.ப.4.30மணிக்கு இக்பால் கலைமன்றத்தின் ஏற்பா...
03/06/2024

இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த 26.05.2024ம் திகதி பி.ப.4.30மணிக்கு இக்பால் கலைமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எல்.எம்.லியாப்தீன் JP அவர்கின் தலைமையில் இக்பால் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தையல் தொழிலின் முக்கியத்துவம்,நவீன தையல் கலை மற்றும் சித்திரத் தையல்,டிசேர்ட்,உள்ளாடைகள் தைப்பது அதன் முக்கியத்துவம் அதற்கான சந்தை வாய்ப்பு போன்ற பல விடயங்கள் பேசப்பட்டு வழிகாட்டப்பட்டன இதற்கான பயிற்சியாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் துறைசார்ந்தவர்கள் அழைக்கப்பட்டதுடன் வளவாளராக ஏ.பி.எம்.இத்ரீஸ் நளீமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதனை ஒருங்கமைத்து தொகுத்து வழங்கியது வாழைச்சேனை AC YMMA பணிப்பாளர் ஏ.பி.எம்.இர்பான் ஆசிரியர் அவர்கள்.

Address

Vc Street
Valaichenai

Website

Alerts

Be the first to know and let us send you an email when IQBAL ART CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category