Lovely boy kinthu

Lovely boy kinthu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lovely boy kinthu, Arts and entertainment, Silavathi south mullaitivu, Mullaitivu.

27/07/2020
NDB வங்கி வேலைவாய்ப்புக்கள்தகமை : 🚩க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) சித்தி🚩சிறந்த எழுத்து மற்றும் பேச்சாற்றல்🚩குழுவாக வேலை செ...
03/02/2019

NDB வங்கி வேலைவாய்ப்புக்கள்

தகமை :
🚩க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) சித்தி
🚩சிறந்த எழுத்து மற்றும் பேச்சாற்றல்
🚩குழுவாக வேலை செய்யும் திறன்
🚩கணினி அறிவு

இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்றால் Online ஊடாக விண்ணப்பிக்க கீழே NDB என்று Comment செய்க

மேலும் அண்மையில் இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழு முகாமைத்துவ உதவிச் சேவைக்கான சுருக்கெளுத்தாளர் ( சிங்களம் / தமிழ் / ஆங்கிலம் ) தரம் - 3 இற்கான பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் விண்ணப்பங்களையும் எம்மிடம் பெறலாம்

பதவி எண்ணிக்கை : 900

பெற்றுக்கொள்ள "MOL" என type செய்து Whatsapp, Viber ஊடாக 0768556710 என்ற எண்ணுக்கு Message செய்து பெற்றுக்கொள்க
(Terms and Conditions Apply)

 #முல்லைத்தீவு  #செம்மலை  #மகா  #வித்தியாலய  #மாணவன்  #தற்கொலை - காரணம் பாடசாலை அதிபரா? ஆசிரியரா? சமூகமா?இலங்கை பாடசாலை ...
08/12/2018

#முல்லைத்தீவு #செம்மலை #மகா #வித்தியாலய #மாணவன் #தற்கொலை - காரணம் பாடசாலை அதிபரா? ஆசிரியரா? சமூகமா?

இலங்கை பாடசாலை சிறுவன் தற்கொலை பாடசாலை சமூகமா காரணம்? முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பகுதியில் வசித்துவரும் 14 அகவையுடைய பாடசாலை சிறுவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பாடசாலை சமூகமே பெறுப்கு கூறவேண்டும் என சிறுவனின் பெற்றோர்கள் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதுதொடர்பில் மனிதஉரிமை ஆணைக்கழுவில் முறையிடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செம்மலை மகாவித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்விகற்கும் சிறுவன் தற்கொலை செய்துகொண்டமையானது மாணவனை உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியிலும் கல்வி சமூகம் பாதிக்க செய்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாணவன் தற்கொலைக்கு சென்ற காரணம் இதுவரை சரியாக விசாரிக்கப்படவில்லை மாணவன் கொலை தொடர்பில் பாடசாலை சமூகம் இதுவரை சரியான பதிலை பெற்றோர்கள் உறவினர்களுக்கு வழங்கவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்கள். சம்பவம் நடைபெற்ற அன்று மாலை 5.00 மணி ஆகியும் மாணவன் வீடு திரும்பவில்லை என தெரிவித்த தந்தை மாணவனின் இறுதி நிகழ்வின் பின்னரே பாடசாலையில் என்ன நடந்தது என்று பாதிக்கப்பட்ட ஏனைய மாணவர்கள் ஊடாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்துள்ளது என்றும் தெரிவித்து.

மாணவன் உயிரிழப்பிற்கு பாடசாலை சமூகமே பொறுப்புகூறவேண்டும் என நடந்த சம்பவங்களை தந்தை விவரிக்கின்றார். நாங்கள் மாணவனை நல்ல ஒழுக்கத்துடன் வளர்த்து வருகின்றோம் நான் ஒரு ஆசிரியர் எனது பிள்ளை எவ்வாறு இருப்பான் என்பது எனக்கு தெரியும் அதனைவிட அவனை பற்றி பாடசாலையில் உள்ள வகுப்பறை ஆசிரியருக்கு நன்றாக தெரியும். சம்பவ நாள்அன்று தரம் 09 இல் கல்விகற்கும் 3 மாணவர்கள் விளையாட்டு திடலில் மாங்காய் ஆய்ந்து சாப்பிட்டுவிட்டு விளையாட்டு அரங்கிற்கு அருகில் சென்றுள்ளார்கள்.

விளையாட்டு மைதானத்தில் கடந்த நாட்களில் படையினர் வந்து விளையாட்டு போட்டிகளை வைத்துள்ளார்கள் அவர்கள் அங்கு பாவித்த சிகரட் மிச்சங்கள் அங்கு காணப்பட்டுள்ளன அதிலும் பேப்பரினால் சுற்றப்பட்ட துண்டை எடுத்த மாணவர்கள் அருகில் இருந்த தீப்பெட்டியினையும் எடுத்து பற்றவைத்துள்ளார்கள். அதன்பின்னர் அங்கிருந்து சென்ற மாணவர்களை தரம் 10இல் கல்விகற்ற மாணவர்கள் விசாரித்து என்ன செய்தார்கள் என்று படையினர் பாவித்த சிகரட் துண்டங்களை எடுத்து ஆசிரியரிடம் காட்டியுள்ளார்கள்.

குறித்த மாணவர்களை அழைத்த அதிபர் அந்த சிகரட் துண்டுகளை மேசையில் வைத்துவிட்டு அனைத்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் காட்டியுள்ளார் அது மட்டுமல் இந்த சம்பவம் காலை 11.00 மணிக்கு நடைபெற்றுள்ளது அதன் பின்னர் குறித்த மாணவர்களை அறை ஒன்றிற்குள் பூட்டிவைத்து அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ளார்கள் மாணவன் இவ்வாறு செய்தது தொடர்பில் பெற்றோருக்கு பாடசாலை சமூகத்தினால் தெரியப்படுத்தவில்லை மாலை 5.00 மணி ஆகியும் வீடுவரவில்லை மாலை 5.00 மணிவரை மதிய உணவோ தண்ணீரே இல்லாமல் மாணவர்களை அடைத்து வைத்துள்ளார்கள் பாடசாலை நேரம் முடிந்தும் மாணவர்களை பாடசாலைக்குள் பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் வைத்திருந்தது பாடசாலை சமூகத்தின் தவறு.

மாணவன் விட்ட பிளைக்கு அதிபர்,ஆசிரியர் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றைய தவறு! சக மாணவர்கள் மத்தியில் குறித்த மாணவனை உளவியல்ரீதியில் தாக்கப்படுத்தியமை பாடசாலை சமூகத்தின் தவறு! அதிபர் ஆசிரியர் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயம். எனது மகன் பாடசாலை ஆசிரியர் அதிபரின் உடல்தாக்கத்திற்கும் உளதாக்கத்திற்கும் உள்ளாகியே உயிரிழந்துள்ளார் இதற்கு பாடசாலை சமூகம் பொறுப்பு கூறவேண்டும் இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடக்கவேண்டும் ஒரு பாடசாலை சென்ற மாணவன் வீடு திரும்பாமல் பாடசாலை சீரூடையுடன் சென்று தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவனது மனதை பாதிக்கும் வகையில் பாடசாலை சமூகம் செயற்பட்டுள்ளது.

இதனை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களோ சிறுவர்கள் மீது அக்கறைகொண்டவர்களோ சரியாக விசாரணை செய்து கொள்ளவில்லை எனது மகன் இறந்த பின்னும் அவனுக்கு கெட்டபெயரினையே பாடசாலை சமூகம் கொடுத்துள்ளது இதற்கான நீதி வேண்டும் இதற்காக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக மாணவனின் பெற்றோர்கள் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

04/12/2018

பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து: பிரான்ஸ் அரசு

Address

Silavathi South Mullaitivu
Mullaitivu
IPSIPS

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lovely boy kinthu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share