06/02/2026
பெண்:எல்லா ஆண்களும் ஒரே மாதிரிதானே இருக்கீங்க?
ஆண்: காலேஜ் படிக்கும்போது சனி, ஞாயிறு லீவுக்கு எங்க போவ?
பெண்: நாங்க மாலுக்குப் போவோம், தியேட்டருக்குப் போவோம்...!!
ஆண்: நீங்க போற அதே மால்லையும், தியேட்டர்ல இருக்கிற கார் பார்க்கிங்லையும், பைக் பார்க்கிங்லையும் உங்கள மாதிரியே படிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு பையன் பார்ட் டைமா செக்யூரிட்டி வேலை பாத்துக்கிட்டு இருப்பான். அவன என்னைக்காவது பார்த்திருக்கீங்களா?
பெண்: இல்லையே...
ஆண்: பார்த்திருக்க மாட்டீங்க...
நீங்க இந்த 10,000 ரூபாய்க்கு ஃபேஷன் டிசைனிங் பண்ணி ஒரு கவுனை மாட்டிக்கிட்டு கல்யாணத்துக்கோ, பர்த்டே ஃபங்ஷனுக்கோ போவீங்க. அங்க உங்கள மாதிரியே படிச்சுக்கிட்டு பார்ட் டைமா கேட்டரிங் சர்வீஸ் பண்ணிக்கிட்டு இருக்கிற ஒரு பையன் இருப்பான். அவன பார்த்திருக்கீங்களா?
பெண்: இல்ல..
ஆண்: பார்த்திருக்க மாட்டீங்க. உங்க வீட்ல வாங்கி கொடுத்த பைக்க எடுத்துக்கிட்டு பெட்ரோல் போடப் போவீங்க. அங்க பெட்ரோல் போடுற வேலையை பார்ட் டைமா ஒருத்தன் படிச்சுக்கிட்டே பார்த்துக்கிட்டு இருப்பான். அவன பார்த்திருக்கீங்களா?
பெண்: இல்ல..
ஆண்: பார்த்திருக்க மாட்டீங்க. இப்படி எல்லாத்துலயும் வேலை பார்த்து, கஷ்டப்பட்டு, கூடவே சேர்ந்து படிச்சுக்கிட்டு, நிரந்தரமா 10,000 ரூபாய் ஒரு வேலைக்குப் போய் உட்கார்ந்து, அந்த வேலையில சின்சியரா இருந்து, 20,000 ரூபாயா மாறி, 40,000 ரூபாயா மாறி வாங்குற சம்பளத்துலையும் தனக்குன்னு எதுவும் பண்ணிக்காம, தன்னோட சந்தோஷத்தை ஒரு பக்கம் ஒதுக்கி வைச்சுக்கிட்டு, தன் குடும்பம் கஷ்டப்பட்டுக் கூடாது அப்படின்னு இத்தனை வருஷமா ஒரு சைக்கிளை மிதிச்சு எனக்காக வேலை பார்த்த அப்பாவிற்கு ஒரு டிவிஎஸ் bike வாங்கித் தர மாட்டேனான்னு யோசிக்கிற பையன் உங்களுக்கு தெரியவே மாட்டான்...!!!
ஆனா, அதே குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல, என் சந்தோஷம்தான் முக்கியம்னு படிச்சுக்கிட்டு இருக்கப்பவே 3 லட்சம் ரூபாய், 4 லட்சம் ரூபாய்க்கு எனக்கு பைக் வேணும்னு 'ஸொர்ர்ர்னு' போவான்ல... அவன்தான் உங்க கண்ணுக்குத் தெரிவான். நீங்க பழகுறது பூரா அந்த மாதிரி பையனா இருக்கிறதுனால எல்லா ஆண்களும் உங்களுக்கு ஒரே மாதிரிதான் தெரிவாங்க...