14/02/2022
இன்றைய தினம் மாலை அளவில் கர்ப்பிணி தாய் பசு ஒன்று புகையிரத்தில் மோதுண்டு மிகவும் கவலை தரும் வகையில் உயிரிழந்தது..
உணவு தேடி வந்த அதற்கு புகையிரதம் மோதி உயிரிழப்பேன் என தெரியாது...
தனது வயிற்றினுள் இருக்கும் குட்டி இறந்து விடும் என்று தெரியாது...
தான் விபத்தில் உயிரிழந்த பின் தனது உடலை தனது உரிமையாளருக்கு பார்வையிட கூட விட்டு வைக்காது ஒரு சில மனித மாமிச விலங்குகள் பங்கு கொண்டு,பல உயிர்களை காவு கொண்ட புகையிரதவீதியில் விபத்தில் சிக்கி இறைச்சியாய் மாறி கிடக்கும் தன்னை கறி சமைத்து உட்கொள்ளுங்கள் என்றும் தெரியாது ....
அன்பாக பாசமாக வளர்த்த நாம்தான் அவற்றினை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்...
இதனை நான் பகிர்வதால் எனக்கு எந்த இலாபமும் இல்லை... என்பதையும் தாம் அறிவீர்...
இதனை படிக்கும் ஒவ்வொருத்தரும் வீட்டில் குறைந்தது ஒரு நாய்க்குட்டி என்றாலும் வளர்ப்பவராக தான் இருப்பீர்கள்....
ஆதலால் தயவு செய்து உங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு மாடு நாய் பூனை போன்ற செல்லப்பிராணிகளை ஆபத்தான இடங்களிற்கு செல்வதற்கு விட வேண்டாம் ... புகையிரத வீதி மட்டும் அல்ல வாகனங்கள் செல்லும் வீதிகள் மற்றும்
மாடுகள் ஆடுகள் என்பவற்றை வெறும் இறைச்சியாக மட்டும் எண்ணி திருடி கொன்று இறைச்சியாக்கி விற்பனைசெய்பவர்கள் போன்றவர்கள் நடமாடும் இடங்கள் அனைத்தும் உள்ளடங்கலாகவே ....
உங்கள் செல்லப்பிராணிகளின் மதிப்பு அவ் உணர்வற்ற பொருட்களுக்கு தெரியாது...
அவ்வாறு தாங்கள் அவற்றிற்கு பாதுகாப்பு வழங்காத வேளையில் தாங்கள் குடும்ப உறுப்பினரை போல சேர்ந்தே வாழ்ந்து சேர்ந்தே வளர்ந்த தங்கள் பாசமிகு உறவுகளை இறுதியில் இவ்வாறான பரிதாபமான கோலத்திலேயே பார்க்க நேரிடும்...
ஒரு சில விடயங்கள் இழந்த பின்பு பெற்று கொள்ள முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆகும் ..
அது போல தான் உங்கள் சொல்லப்பிராணிகளின் உயிர்களும் என்பதை ஒவ்வொரு கணமும் சிந்தித்த படி அவைகளை பராமரியுங்கள்........
வேறு எந்த விடயமும் இல்லை நீட்டி செல்வதானால் சொல்ல வார்த்தைகள் இல்லை ..
அதற்கு தேவையும் இல்லை
இந்த பதிவானது பார்வையிடும் /படிக்கும் உங்களின் ஒரு சிலரினுடய வளர்ப்பு பிராணிகளை என்றாலும் நிச்சயம் ஆபத்தை நோக்கி அனுமதிக்காது என்று திருப்தி கொண்டு நிறைவு செய்கிறேன் நன்றி.. ❣️