JET TAMIL MEDIA

JET TAMIL MEDIA 1000

12/08/2024
விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருவதை நாம் அனைவரும் அறிவோம். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தை லலித்...
10/07/2023

விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருவதை நாம் அனைவரும் அறிவோம். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முன்னணி நடிகை திரிஷா நடித்துள்ளார். இந்த ஜோடி 13 வருடங்களுக்கு பின் லியோ படத்தில் தான் இணைந்துள்ளது.
இந்த ஜோடியை திரையில் காணவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். நடிகை திரிஷா தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் செம பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

லியோ படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் திரிஷா தான் கதாநாயகி என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளிவந்தது.

ஆனால், விடாமுயற்சியின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போய் கொண்டே இருப்பதினால், இப்படத்திற்காக கொடுக்க வைத்திருந்த கால்ஷீட்டை வேறொரு படத்திற்காக கொடுத்துவிட்டாராம் நடிகை திரிஷா.

இதனால் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா நடிக்க வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் விஜய்யின் லியோ படத்திற்கு ஓகே சொல்லிவிட்டு, அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு நோ சொல்லிவிட்டாரே என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
ஆனாலும், படக்குழு கண்டிப்பாக திரிஷாவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம். பொறுத்திருந்து பார்ப்போம் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் திரிஷா நடிக்க போகிறாரா இல்லையா என்று..

மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒ...
10/07/2023

மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்ட...
10/07/2023

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்தமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தின் அதிவேக பயணமும், சாரதியின் கவனக்குறைவுமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பேருந்து விபத்தினால் காணாமல் போனவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்பதை கண்டறியும் வகையில், பேரூந்து ஆற்றில் விழுந்த இடத்தில் நீர்மூழ்கிக் குழுவினர் தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, விபத்துக்குள்ளான பேருந்து நேற்று இரவு கிரேன் உதவியுடன் ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது...!

கனடாவில் சினிமா பாணியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.றொரன்ரோவின் டொன்லாட்ஸ் பகுதியில் இந்த தாக்குதல் நட...
08/07/2023

கனடாவில் சினிமா பாணியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
றொரன்ரோவின் டொன்லாட்ஸ் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சுத்தியலைக் கொண்டு இந்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டொன்லாட்ஸ் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சுமார் 30 வயது மதிக்கத் தக்க நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் நடத்திய நபர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சுத்தியல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்...!

நாட்டில் அண்மைக்காலமாக சத்திரசிகிச்சையின் போது ஏற்படும் மரணங்கள் மயக்க மருந்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவ...
07/07/2023

நாட்டில் அண்மைக்காலமாக சத்திரசிகிச்சையின் போது ஏற்படும் மரணங்கள் மயக்க மருந்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கண் சத்திரசிகிச்சையின் போது நோயுற்ற பெண்ணொருவர் தேசிய கண் வைத்தியசாலையில் உயிரிழந்தமை, பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை உயிரிழந்தமை போன்ற சம்பவங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய சுகாதார நிர்வாகத்திற்கு நோயுற்றவர்களின் உயிருடன் விளையாடுவதற்கு தார்மீக உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் ஏற்படும் சாதாரண மரணங்கள் கூட தரக்குறைவான மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளால் ஏற்படுவதாக சமூகத்தில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அந்த சந்தேகம் நியாயமாகி வருவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டிற்குள் வருவது, மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் மருந்துகளை ஆய்வுக்கூட பரிசோதனைகள் இன்றி வெளியிடுவது மற்றும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் தரம் குறைந்தவை என சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டமை ஆகியன மக்கள் மனதில் பதியாமல் இல்லை.

இந்நிலையில் வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள சுகாதார அமைப்பு தொடர்பில் ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்...!

கனடாவில் லோடு செய்யப்பட்ட இரண்டு கைதுப்பாக்குகளுடன் வாகனம் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்து...
06/07/2023

கனடாவில் லோடு செய்யப்பட்ட இரண்டு கைதுப்பாக்குகளுடன் வாகனம் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த பெண்ணின் வாகனத்தில் பல்வேறு வகையான போதை பொருட்களும் மீட்கப்பட்டதாக யோ போலீசார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளை நிற பிக்கப் பன்றி ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து சந்தேகம் எழுந்த பொலிசார் குறித்த வாகனத்தை சோதனை இட்டுள்ளனர்.இதன்போது இரண்டு லோட் செய்யப்பட்ட தானியங்கி கை துப்பாக்கிகளும் துப்பாக்கி தோட்டாக்களும் போதை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

33 வயதான அமாடா லொலென்டா காமாகோசோ என்ற பெண்ணே இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண்ணுக்கு எதிராக போலீசார் 23 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...!

அரசாங்கத்தால் நீண்ட காலத்திற்கு செயற்கையான வகையில் நாணய மாற்றத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தி...
06/07/2023

அரசாங்கத்தால் நீண்ட காலத்திற்கு செயற்கையான வகையில் நாணய மாற்றத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்...!

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,''இலங்கையின் வரலாற்றில் பொருளாதார பெறுமதி 11 வீதம் மறை பெறுமதியை அடைந்ததில்லை. மேலும் எமக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் உள்ளன.இதனால் பல துறைகள் பாதிப்படைந்துள்ளன.இதேவேளை கடன்களை மீள செலுத்த ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு ஆண்டுகளிலும் 4 தொடக்கம் 5 பில்லியன் டொலர் தேவைப்படும். அது சாதாரண தொகை அல்ல.

எனவே கடன்பட்டு கடன் செலுத்த வேண்டிய கட்டத்தில் தான் நாங்கள் உள்ளோம்.

இவை அனைத்தும் நிச்சயமாக ரூபாவின் மீது கடும் அழுத்தத்தை கொடுத்து ரூபாவின் பெறுமதியை குறைவடைய செய்வதுடன் டொலரின் பெறுமதியை அதிகரிக்க செய்யும்.

இதற்கு எந்த வகையான செயன்முறைகளை அரசாங்கம் செய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.'' என கூறியுள்ளார்.

இன்றைய நன்னாளில் புதியன புனைவோம் என்ற கோட்பாட்டில் புதிதாக உருவாகி இருக்கும் "புஷ்பக 27" முழு நீள திரைப்படத்தின் டீசர் [...
05/07/2023

இன்றைய நன்னாளில் புதியன புனைவோம் என்ற கோட்பாட்டில் புதிதாக உருவாகி இருக்கும் "புஷ்பக 27" முழு நீள திரைப்படத்தின் டீசர் [Teaser] இன்றைய தினம் 05.07.2023 மாலை 06 மணிக்கு வெளியீட்டு நிகழ்வுகளுடன் அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகிறது தகவல் - படகுழு

கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலையை 10 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்க...
05/07/2023

கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலையை 10 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் பலனை வாடிக்கையாளருக்கு வழங்கும் வகையில் கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலையை குறைக்க உணவகம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்...!

சீரற்ற காலநிலை காரணமாக, தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப...
05/07/2023

சீரற்ற காலநிலை காரணமாக, தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

அதாவது நாட்டின் எப்பகுதியிலாவது சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்த முடியாத நிலைமை இருந்தால், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதா? இல்லையா? ஏன்பதை தீர்மானிக்க முடியும் என கூறியுள்ளார்.

உங்கள் ஆசிகளுடன்   தமிழ் மீடியாஉங்களது பிரதேசங்களில் இடம்பெறுகின்ற செய்திகள் மற்றும் நிகழ்வுகளினை Jettamilmedia222@gmail...
30/06/2023

உங்கள் ஆசிகளுடன் தமிழ் மீடியா
உங்களது பிரதேசங்களில் இடம்பெறுகின்ற செய்திகள் மற்றும் நிகழ்வுகளினை [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி. தங்கள் பிரதேசங்களில். இடம்பெறும் செய்திகள் நிகழ்வுகளினை அனைவரும் அறிந்திட, பகிர்ந்திட உங்கள் பங்களிப்பினை வழங்குவதோடு, தமிழோடும் தரணியெங்கும் பயணித்திடுவோம்...!

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when JET TAMIL MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share