05/06/2025
அளவற்ற அருளளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
அகிலத்தைப் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், படைப்புகளில் சிறந்த முஹம்மது (ஸல்) நபியின் மீதும் பரிசுத்த அஹ்லுல் பைத்தினர் மீதும் உத்த சஹாபாக்களின் மீதும் அவர்களைப் பின்பற்றுவோர்களின் மீது மறுமை வரை சாலாத்தும் சலாமும் உண்டாவதாக!
ஹஜ் என்பது முஃமின்களின் பேராசை, ஆவலுடையவர்களின் திருநாள் மற்றும் அதிர்ஷ்டசாலிகளின் ஆன்மீக அருட்கொடையாகும். மேலும் அதன் மர்மான ஆழத்தை அறிந்து அதனை செயற்படுத்தும் சமயத்தில், அது இஸ்லாமிய சமூயாத்தின் வலிகளுக்கு மத்திரமல்ல, அனைத்து மனிதகுலத்திற்கும் அருமருந்தாக அமையும்.
ஹஜ் பயணம் என்பது வணிகம் அல்லது சுற்றுலா அல்லது பல்வேறு நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் பிற பயணங்களைப் போன்றது அல்ல மற்றும் அப்பயணங்களின் போது இபாதத்கள் அல்லது ஏனைய நற்காரியங்கள் செய்யப்படும் செய்யப்படும் பயணங்களைப் போன்றது அல்ல. மாறாக, ஹஜ் பயணம், சாதாரண வாழ்க்கை விட்டு விரும்பதக்க ஒரு தௌஹீதிய வாழ்வுக்கு இடமாற்றத்தை ஏற்படுத்தும் பயணமாகும்.
சத்தியத்தின் அச்சில் தொடர்ந்து சுத்தும் , சிரமமான மலைதொடர்களுக்கு மத்தியில் தொடர்ந்து ஓடும் தொங்கோட்டோம் (சஃயி), தீய ஷைத்தானுக்கு கல்லெரியும் செயற்பாடு (ரமீ), திக்ர் மற்றும் இறையச்சத்தோடு தரித்தல் (வுகூப் ), ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உணவளித்தல், நிறம், இனம், மொழி மற்றும் புவியயலை கருத்தில் கொள்ளமல் அனைவரையும் சமமாக பார்த்தல், எப்போதும் சேவை செய்ய தயாராக இருத்தல், அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுதல், யதார்த்தத்தை பாதுகாத்தல் என்பவைகள் அப்பயணத்தினதும் விரும்பத்தக்க வாழ்வின் மூலக் கூறுகளாகும்.
இந்த ஹஜ் யாத்திரிகை இவ்வாழ்வின் சின்னங்களின் ஒன்றாக காணப்படுகிறது. இது யாத்ரீகரை தன்னை அறிமுகப்படுத்தி அவ்வாழ்க்கையின் பக்கம் அவரை அழைக்கிறது. எனவே இவ்வழைப்புக்கு காது தாழ்த்த வேண்டும், எமது உள்ளரங்கத்தையும் வெளிரங்கத்தையும் இதற்கு தயார் படுத்த வேண்டும். ஒருவர் இவ்வாழ்க்கை கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் கற்ற இந்த பாடங்களை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஓவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு இவ்வழியில் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அறிஞர்கள் , புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் சமூகஅந்தஸ்துள்ளவர்கள் இவ்வழியில் ஏனையவர்களை அதிக பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இஸ்லாமிய உலகம் இவ்வகை பாடங்களை முன்பை விட இப்போது அதிகமாக நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். தற்போது நடைபெறும் இந்த ஹஜ், காஸா மற்றும் மேற்கு ஆசியாவில் நடக்கும் பேரழிவுகளுடன் சமகாலத்துடைய இரண்டாவது ஹஜ் யாத்திரிகையாகும்.
ஏற்க முடியாத அளவுக்கு தொடூரத்தயும் துயரத்தையும் கொண்டுள்ள சியோனிஸம் காஸாவில் கற்பனை செய்து பார்க்க முடியாதளவுக்கு பேரிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது பலஸ்தீன குழந்தைகள் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் மாத்திரமல்லாமல் தாகம் மற்றும் பசியினாலும் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான இழப்புக்களை இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வாறான மனித பேரழிவுக்கு எதிராக யார் முன்நிற்க்க வேண்டும்?
இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்த கடமைக்கு முதன்மையனாவர்கள் என்பது சந்தேகமற்ற யதார்த்தமாகும். முஸ்லிம் ஆட்சியாளர்களும் இஸ்லாமிய நாடுகளும் பல்வேறு அரசியல் விடயங்களில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் இது அவர்களை காஸாவின் விடயத்தில் ஒற்றுமையாக செயற்படுதிலும் ஏகோபித்த கருத்துடையவர்களாக ஆகுவதையும் தற்காலத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதையும் தடுப்பதாக இருக்கக் கூடாது.
இஸ்லாமிய அரசுகள் சியோனிஸத்திற்கு உதவும் அனைத்து வழிகளையும் அடைத்து, காஸாவில் அவர்கள் செய்யும் கொடூரத்தை தொடரவிடாமல் தடுக்க வேண்டும்.
சியோனிஸத்தின் அனைத்து கொடூரங்களுக்கும் அசைக்க முடியாத பங்காளியாக அமெரிக்க இருக்கிறது. இந்த பிராந்தியாத்திலும் ஏனைய இஸ்லாமிய பிராந்தியங்களிலுள்ள அமெரிக்காவுடனான நற்பு நாடுங்கள், பாதிக்கப்பட்ட மக்களை காப்பற்ற அழைக்கும் குர்ஆனின் அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டும் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தை இந்த கொடூரமான அநீதியை நிறுத்த நிர்பந்திக்க வேண்டும். ஹஜ்ஜில் பறைச்சாற்றும் பராஅத் என்ற இபாதத், இவ்வழியில் எடுத்ததுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான படியாகும்.
குhஸா மக்களின் ஆச்சரியமான எதிர்ப்பு, பலஸ்தீன விடயத்தை இஸ்லாமிய உலகுக்கும் சுதந்திரமான மக்களுக்கும் முக்கியமாகவும் அதிகமாகவும் கருத்தில் கொள்ள வேண்டிய விடயமாக மாற்றியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவ வேண்டும்.
பலஸ்தீனத்தையும் அதில் நடக்கும் கொடூரங்களையும் மறக்கடிக்க சியோனிஸ்ட்களும் அவர்களின் ஆதரவாளர்களும் முயன்றும், அவர்களின் கொடூர மற்றும் முட்டாள்தனமான செயற்பாடுகளினாலும் அரசியலினாலும், இன்று பலஸ்தீனத்தின் பெயரும் முன்பை விட தற்போது மிகவும் பிரகாசமாகிக் கொண்டிருப்பதோடு, சியோனிஸ்ட்களின் மீதும் அவர்களின் ஆதரவாளர்களின் மீதான மக்களின் வெறுப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது இஸ்லாமிய உலகிற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
பேச்சாளர்களும் சமூகப்பதவிகளை வகிப்பவர்களும் தம் மக்களை பலஸ்தீன விடயத்திலும் அம்மக்களின் கோரிக்கை விடயத்திலும் விழிப்புள்ளவர்களாகவும் உணர்வுள்ளவர்களாகவும் மாற்ற வேண்டும்.
புhக்கியம் பெற்ற ஹாஜீகள் பலஸ்தீனர்களுக்காக அல்லாஹ்விடம் தூஆ செய்வதிலும் அவனிடம் உதவி கோருவதிலும் கவனக்குறைவாக இல்லாமல், சியோனிஸ்ட்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் மீது பலஸ்தீனர்கள் வெற்றி பெற்றிட அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள்.
சுலாத்தும் சலாமும் முஹம்மது நபியின் மீதும் அவரின் பரிசுத்த குடும்பத்தினர் மீதும் இமாம் மஹ்தீ (அலை) அவர்களின் மீது உண்டாவதாக!
அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மத்துல்லாஹ் வபரகாத்துகு
செய்யித் அலீ காமெனயீ
2025/05/30