கவிதைகள்.கொம்

கவிதைகள்.கொம் உள்ளத்தில் உதித்திட்ட எண்ணங்களை சிந்துகிறேன் கவித் தூரலாய்....

சரீனா உவைஸ்✍️

தாமரை இலை......,....................தாமரை இலை இதிலேதவறியும்  ஒட்டாதுதண்ணீர்...தடாகத்தின் ஆழம்அதிகமென்று அஞ்சிஅது வளர்வதை...
08/08/2026

தாமரை இலை......,....................

தாமரை இலை இதிலே
தவறியும் ஒட்டாது
தண்ணீர்...

தடாகத்தின் ஆழம்
அதிகமென்று அஞ்சி
அது வளர்வதை
நிறுத்திக்கொள்வதில்லை...

அறிவாயோ மானிடா...
தண்ணீரின் உயரம்தான்
தாமரையின் உயரமாம்....

பொறாமை வஞ்சகம்
கள்ளம் கபடம்
மாந்தனின்
இயற்கை குணமடா..

ஆதலால் உன்னை
தூற்றுவோர் தூற்றட்டும்
போற்றுவோம் போற்றப்படும்...

அனைத்தையும்
தாமரை இலையில் விழுந்த
தண்ணீர் துளி போல
உதறிவிட்டு நட...

தூற்றியவர் வியக்கும்படி
வெற்றி நடை போடு...

தன்னம்பிக்கை
முயற்சி இரண்டையும்
பற்றிப்பிடித்துக்கொள்...

வாய்ப்புகளை என்றும்
தவறவிடாதே...

தோல்விகள் கண்டு
துவண்டு வீழ்ந்துவிடாதே..

துணிந்து நில்
எழுந்து நில்

தண்ணீரைத்தாண்டி
வளர்ந்த தாமரையாய்

என்றென்றும்
உயர்ந்து நில்

சரீனா உவைஸ் ✍️
இலங்கை 🇱🇰

இல்லறம்..................இல்லம் வளம் பெறஇல்லத்தினர் இன்புற வாழ்ந்திடஇல்லத்தரசனும்இல்லத்தரசியும்...இணைந்தே திட்டமிட்டுஇன்...
08/08/2026

இல்லறம்..................

இல்லம் வளம் பெற
இல்லத்தினர்
இன்புற வாழ்ந்திட
இல்லத்தரசனும்
இல்லத்தரசியும்...

இணைந்தே திட்டமிட்டு
இன்றைய நாள் வரவு
இன்றைய செலவு
இன்றைய கையிருப்பு

இதிலே எஞ்சியதில்
நாளை என்ன செய்திட
உத்தேசம்...

இப்படியே நாட்கள் கழிய..
மாதம் உருண்டோட

ஊதியம் பெற்றுவந்த
அன்புக்கணவரோடு
அமர்ந்து
பக்கங்கள் நிரம்பிய
குறிப்பு புத்தகம் எடுத்து...

மாத வருமானம்
மாத செலவு
இந்த மாத சேமிப்பு
எல்லாம் சரிபார்க்க...

கை செலவுக்கு தந்த
சிறு தொகையில்
ஒரு தொகையை எடுத்து..

கணவருக்கு தெரியாமல்
சேமித்து
இல்லறத்தில் இக்கட்டான
வேளையில் ....

கணவரிடம் கொடுத்து
மகிழும் மனைவி...
தன் மனைவியை
எண்ணி உள்ளம்
மகிழும் கணவர்...

இதை விட என்ன
வேண்டும்
இல்லறம்
நல்லறமாய் மாற?

திட்டமிட்டு செயல்பட்டால்
இல்லத்தை
வட்டமிட்டு

வலம்வரும்
இன்பம்...

சரீனா உவைஸ் ✍️
இலங்கை 🇱🇰

கருவண்டுக் கண்களை மூடிசீ(நே)ராக வகிடெடுத்துமல்லிகை  அலங்கரித்த கார் கூந்தலும்...கண்டவர் மயங்கும் கன்னி உந்தன் அழகும்...க...
03/07/2026

கருவண்டுக் கண்களை மூடி
சீ(நே)ராக வகிடெடுத்து
மல்லிகை அலங்கரித்த
கார் கூந்தலும்...

கண்டவர் மயங்கும்
கன்னி உந்தன் அழகும்...
காணக்கண் கோடி வேண்டுமடி..

புது ரோசா மொட்டு போல
செவ்விதழ்களில் தவழுது ஓர்
கள்ளப்புன்னகை..

பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா...பழைய
பாடல் செவிகளில் ஒலிக்குதடி...

பார்க்கப் பார்க்க சலிக்காத
பால் முகமடி உனக்கு...

கண்களை மூடி
கால் விரல்கள் தொட்டு பூரிப்புடன்
மயிலே நீ சிந்திப்பதென்னவோ..

கால்களில் மெட்டியை அணிவிக்க
உன் மாமன் வருகையை
எதிர்பார்த்து
அமர்ந்திருக்கின்றாயோ...

உன் மொடடு இதழ் திறந்து
மௌனம் உடைத்து

சொல்லடி உன்
உள்ளம் கவர்ந்த
மன்னவன் யாரென்று...

✍🏻சரீனா உவைஸ்

எது மகிழ்வு?.......................பெற்றோரின் அளவில்லா அன்புஆசான் தரும் சீர் கல்விஇவன்  நல்லவன் என்ற ஊரார் போற்றுதல் சான...
26/06/2026

எது மகிழ்வு?.......................

பெற்றோரின்
அளவில்லா அன்பு

ஆசான் தரும்
சீர் கல்வி

இவன் நல்லவன் என்ற
ஊரார் போற்றுதல்

சான்றோன் இவர்
பிள்ளை என
உலகம் புகழ ....

பெற்றோர்
அடையும் பேறு

ஆயுள் உள்ளவரை
ஆரோக்கியம்

மறுமையில் கிடைக்கும்
சுவர்க்கம்...

இதைவிட வையகத்தில்
எது மகிழ்வு?

சரீனா உவைஸ் ✍️ 🇱🇰

நிலாச்சோறு ......................மதிவதனம் பிரகாசிக்க மலர் விழிகள் பூத்திருக்கமணிக்கன்னம் சிவக்கவீரிட்டு நீ அழ துடிதுடிக்...
18/06/2026

நிலாச்சோறு ......................

மதிவதனம் பிரகாசிக்க
மலர் விழிகள் பூத்திருக்க
மணிக்கன்னம் சிவக்க
வீரிட்டு நீ அழ துடிதுடிக்குது
என்னுள்ளம்..

பசித்தழுதாயோ கண்ணே
பதறியடித்து அம்மா
உனக்காக பக்குவமாய்
உணவு தயாரித்தேன்
உன் பசியாற்ற ....

அள்ளி எடுத்து உன்னை
ஆறத்தழுவி முத்தமிட்டு
ஆறடி சேலைத்தலைப்பில்
அழகாக சுற்றி ....

ஆகாயத்தில்
அழகாக வீற்றிருக்கும்
விண்மதியை காட்டி
ஊட்டுகிறேன் நிலாச்சோறு...

ஊட்டச்சத்தோடு அளவில்லா
அன்பையும் சேர்த்தே
ஊட்டுகிறேன் கண்மணியே
ஆரோக்கியமாய் நீ வளர....

வீர மங்கையாய் நீ வளர்ந்து
நல்ல கல்வியும் கற்று
பார் போற்ற வாழ்வாய்...
அன்னையிவள் ஆசி உண்டு
என்றென்றும் உனக்காக..

மகளே நீ
பசியாறி
நிம்மதியாய்
கண்ணுறங்கு...

சரீனா உவைஸ் ✍️ 🇱🇰

இறந்தாலும்இணைவோம்****"" "" "**" "" "****இனியவளே! இணையாக இறைவன் தந்த இணையில்லா நித்திலமேஇளமைக் காதலில்இரு மனம் ஒன்றாகிஇதய...
18/06/2026

இறந்தாலும்
இணைவோம்
****"" "" "**" "" "****

இனியவளே!
இணையாக
இறைவன் தந்த
இணையில்லா நித்திலமே

இளமைக் காதலில்
இரு மனம் ஒன்றாகி
இதய ராகம் பாடி
இன்புற்றோம்...

இல்லத்தார் வாழ்த்துரைக்க
இணந்திட்டோம் திருமணத்தில்...
இறகு விரித்து பறந்தோம்
இரட்டிப்பு மகிழ்ச்சியில்...

இரண்டு செல்வங்களை
இறைவன் தந்தான் பரிசாக
இரவும் பகலும் பாடுபட்டோம்
இல்லறம் செழிக்க.. பிள்ளை
செல்வங்களை வளர்க்க...

இன்று அவர்கள் கைவிட்டபோதும்
இணைந்தே வாழ்கின்றோம்
இளமையின் அதே காதலுடன்

இறந்தாலும்
இணைவோம்
இறைவன் அருளால்
இனிய சுவ(ன)ர்க்கத்தில்.…

சரீனா உவைஸ் ✍️ 🇱🇰

தானங்கள் பல வகைஅதிலே சிறந்தது அன்னதானமாம்... உயிர்க்கொடையாம்உதிரக்கொடை***********"********"**"" "ஓருயிரை படைப்பவன் இறைவன...
18/06/2026

தானங்கள் பல வகை
அதிலே சிறந்தது
அன்னதானமாம்...

உயிர்க்கொடையாம்
உதிரக்கொடை
***********"********"**"" "

ஓருயிரை படைப்பவன்
இறைவன்...
அவ்வுயிரையே
காத்திடுமே குருதி தானம்...

உயிர் காக்கும்
உதிரக்கொடைக்கு இணையாக
உண்டோ உலகில்
இன்னொரு தானம்?

சரீனா உவைஸ் 🇱🇰✍️

மகிழ்ந்திரு....................மலர்களின் வாசனையில் மயங்கித்துயிலும் அழகுமஞ்ஞையே.. மங்கையே! வண்(ர்)ண ரோசாக்களின்மத்தியிலே...
13/06/2026

மகிழ்ந்திரு....................

மலர்களின் வாசனையில்
மயங்கித்துயிலும் அழகு
மஞ்ஞையே..
மங்கையே!

வண்(ர்)ண ரோசாக்களின்
மத்தியிலே அமர்ந்து நீயும்
மதி மயங்கி விழி மூடி
மெளனமாய் சிந்திப்பதென்னவோ?

மன்னவன் வரும் வேளை
என்னென்ன பேசலாம் என
மனக்கணக்கு போட்டு வைத்து...
வந்ததும் ....

நாணத்தில் மொளனிக்க
திட்டமோ... கேளடி கண்மணியே
நீண்ட மெளனம் வேண்டாம்
நினைத்ததை பேசிவிடு...

நிம்மதியை உணர்ந்திடு...
இணை பிரியா
இணையாக என்றும்
மகிழ்ந்தே வாழ்ந்திடு..

சரீனா உவைஸ் ✍️
🇱🇰 இலங்கை

நான் வாழ வழிவிடுங்கள் :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::உத்தரவாதமில்லா உயிருக்கு உத்தரவாதம் தருகிறேன்...
13/06/2026

நான் வாழ வழிவிடுங்கள்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

உத்தரவாதமில்லா உயிருக்கு
உத்தரவாதம் தருகிறேன்
சுவாசிக்க சுத்தமான
வளியை தந்து....

உறையுள் இல்லா மாந்தர்க்கும்
கூடில்லாத பறவைக்கும்
வசிப்பிடம் தந்தேன்...

நீர் நிலைகள் வற்றாமல்
பாதுகாத்தேன்
ஓய்வெடுக்க நிழலும் தந்தேன்

அத்தனை உயிர்களுக்கும்
உணவானேன்..
ஊராரை ஊட்டி
வளர்த்தேன்...

சுகபோகமாக களிப்புற
தளபாடங்கள் தந்தேன்
நான் தீயில் பொசுங்கி
ஈமத்திலும் உதவினேன்

கற்றலுக்காய்
காகிதமும் தந்தேன்..

அகவையுற்றது முதல்
ஈமம் வரை உதவிய என்னை
ஆணி வேருடன் சாய்தே
கட்டிடம் அமைத்தான் மனிதன்

புத்தியில்லா மாந்தரின்
புத்தியற்ற செயலால்
புவி அன்னை வரண்டு
பசுமை இழந்தாள்...

நன்றிகெட்ட மனிதா
சிந்தித்துப்பார்...
நானின்றி வாழ
இயலுமோ உன்னால்...
ஆகவே ...

நான் வாழ வழிவிடுங்கள்
நீங்கள் வாழ துணையிருப்பேன்

எல்லா உயிர்களையும்
காத்திடுவேன் அன்னை போல..

உன் அடுத்த சந்ததிக்கும்
நல்வாழ்வு நீ நாடினால்
மரங்களை நட்டு பல்லுயிர்
காத்திடு....

சரீனா உவைஸ் ✍️
இலங்கை 🇱🇰

செவிலியர் &&&&&&&&&&&செவிலியர் என்னும் சேவகிசெவ்வனே செய்யும் சேவையும்....இன்னொரு தாயாய் மாறிபிணியாளர்க்கு செய்திடும் பணி...
16/05/2026

செவிலியர்
&&&&&&&&&&&

செவிலியர் என்னும் சேவகி
செவ்வனே செய்யும் சேவையும்....

இன்னொரு தாயாய் மாறி
பிணியாளர்க்கு செய்திடும்
பணிவிடைகளும்....

தன்னலம் கருதாது
பிறர் நலம் காக்கும் தன்மையும்...

தன் தூக்கம் தொலைத்து
உணவையும் மறந்து
நோயாளியை பராமரிக்கும்
கடமை உணர்வும்...

சாதாரண மாந்தர் முதல்
பித்துப்பிடித்தவர் வரை
அத்தனை பிணியாளரையும்
அசால்ட்டாக தன் ...

கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்து மருந்து
புகட்டும் பக்குவமும்....

அசிங்கம் அருவெறுப்பு
சாதி மதம் தராதரம் பராமல்
கடமையை செவ்வனே
செய்திடும் நற்பண்பும்...

இத்தரைமீது தாய்க்குப்பின்
எவருக்கு உண்டு....

தரணி போற்றி சிலைவடிக்க
தாய்க்குப் பின் தகுதியானவர்
தாதியர் எனும் செவிலியர்
தவிர வேறெவரும்
வையகத்தில் உண்டோ...

தாதியல்ல அவள்
இன்னொரு தாய்...

வெண்ணிற ஆடையில்
மிளிரும் தாரகை அவளை
போற்றுவோம் இந்நாளில்..

சரீனா உவைஸ் ✍️

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when கவிதைகள்.கொம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category