Kavithai

Kavithai Enaku piditha Kavithaigal....

06/05/2021

DM ur Kavithai on the topic "கொரோனா விழிப்புணர்வு" . We'll post it in our page🖌️

20/05/2020

கொரோனாவால் தனித்து குடும்பத்தோடு இருக்கும் இவ்வேளையில் ஒவ்வொருவர் மனதிலும் எழும் சிந்தனைகள் பல..!
சுயசார்பு, தற்சார்பு பொருளாதாரம் என பேசுகிறோம் ... ஆனால் இப்பொதுமுடக்க நாளிலும் , இயல்பு வேளையிலும் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு விஷயங்களிலும் உலகமயமாக்கலின் பங்கு இருக்கின்றது.. பிறரை சார்ந்து இயங்கும் நிலையில் உள்ளோம்..கைபேசியில் Youtube, Facebook, Whatsapp, Instagram, Swiggy, Google, Ola, Amazon, Tiktok,etc. என நாம் பயன்படுத்தும் அத்தனை செயலிகளும் நம் தினசரி தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம்..இவை அனைத்தும் பிற நாட்டு நிறுவனங்கள். இப்பொழுது இதை நாம் பயன்படுத்துவதற்கு காரணகர்த்தா உலகமயமாக்கலே.. அதன் பயனை இன்று நாம் அனுபவிக்கின்றோம்.
அவற்றை முற்றிலுமாக மாற்ற இயலா நிலை தான் இன்று..
சுயசார்பு பேசும் நாட்டின் பிரதமரும், நம் இளைஞர்களும் அதிகம் சார்ந்திருப்பது தனியாரையே... ! தவறல்ல , வேறு வழியில்லாமல் சிலர்.. நல்வழி அதுவே என சிலர்.. அவ்வளவே !!!
தனியாரை, பிற நாட்டு நிறுவனங்களை வெறுப்பது ஏன்??
வகுக்கப்பட்ட வரையறைக்குள் தான் தன் பணியை செவ்வனே ஆற்றினால் நல்வழியே..!
அதனால் வெறுப்பர் பலர்!
காலமுறை சரியாக பின்பற்றியே தீர வேண்டும்..!
அதனால் வெறுப்பர் பலர்!
காலத்திற்கேற்றார் போல் அறிவும் புதுப்பிக்கப்பட்டு பட்டைதீட்டாவிடில் பணிநீக்கம் உறுதி!
அதனால் வெறுப்பர் பலர்!
இவ்வளவும் தாண்டி பணி குறித்த சமயம் நடந்தேறும் அங்கு..!
அதனால் வெறுப்பர் பலர்
நன்மையென மேற்கூறியவை இருந்தால்
அங்கு மனம் நோகும் தீங்கும் உண்டு
முதலாளித்துவமும் ஓங்கும் என்ற நினைப்பு..!
தொழிலாளர் நலன் பாதிப்படையும் தன்மை - விளைவு Communism,Marxism பேசுவர்.
தொழிலாளர் சட்டமைப்பு, சங்கம் உருவாக்கம்..!
விளைவு இருபுறமும்
குரூரமாய் மனிதத்தன்மையற்ற, விசுவாசத்தை பயன்படுத்தும் முதலாளிகளும் உண்டு
அவர்களை இதன்மூலம் அடக்கலாம்!
மறுபுறம் தொழிலாளர் நலச்சங்கங்களை அற்ப விசயங்களுக்காக பயன்படுத்தி தொழில்முடக்கம் ஏற்படுத்தும் பலர்..!
இருவரும் உண்டு இங்கு...!இவர்களால் பாதிப்படைந்தவரே தற்சார்பு, சுயசார்பு பேசி வருவர்..!
அவ்வாறானால் தனியாரை, பிறநாட்டு நிறுவனங்களை விரும்புவது ஏன்??
அரசு பொதுத்துறை மேல் உள்ள வெறுப்பு!
காலதாமதம் அவர்களின் பணிச்சிறப்பு!
அதிகாரம் அவரவர் விருப்பத்திற்கு பயன்படுத்தும் முறை!
சாதிகளின் மொத்த விளைவிடம் அரசுபொதுத்துறை!
மக்கள் பணி மோசம், மக்களின் காசு விரையம் இவையே மிச்சம் இங்கு!
தற்பெருமை பேசுமிடம்..!
மக்களின் வரிக்காசு 70% இக்கவுரவப் பணியாளர்களுக்கு...!
பணியோ அதில் பாதிதான் நிறைவு
நேர்மைக்கு தீண்டாமை தான் பரிசு அங்கு..!
ஆட்சியாளர்களோ ஒருபடி மேலே சென்று இவற்றை களையெடுக்க தனியாரை கையிலெடுத்தது..!
விளைவு தினசரி பொதுத்துறை ஏலம் !
(தனியாரிலும், அரசுத்துறையிலும் நேர்மையாய் பணியாற்றுபவரை இங்கு நான் குறிப்பிடவில்லை)
பிறகு தற்சார்பு என்பது என்ன..
தனக்கான தேவையை தானே பூர்த்தி செய்து கொள்வது..
தன் திறமைகளை மேம்படுத்துதல், அதன்மூலம் வருவாய் ஈட்ட முயல்.
செய்யும் தொழில் வைத்து மனிதருள் பாகுபாடு கொண்டு சுயசார்பு கொண்டு பண்டமாற்று முறையில் வாழ்ந்தவர் நாம்...
அவ்வாறே இன்றும் இருந்திருந்தால் அவரவர் அந்தந்த தொழிலில் முடிசூடா மன்னராய் இருந்திருப்போம்..
அவற்றிலும் கொண்டு வந்தனர் தாழ்ச்சி முறையை... விளைவு இன்றளவும்..!
ஆங்கிலேயன் கொண்டு வந்தான் சூழ்ச்சி முறையை கல்வி மூலமாக..!
Industrialization - இந்த முறை இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் விட்டு ஊர் சென்று பிழைப்புக்காக நாடோடி வாழ்க்கையின் அடித்தளம்..!
கூர்ந்து நோக்கினால் இவையனைத்தும்
நம்மால் தான்..!
ஆம்
மனிதன்!
நம் மனம்!

எங்கோ யாரோ ஒருவன் நினைத்திருந்தால் மாறி இருக்கும் இன்றைய நிலை.. !
உண்மைதான்..!
அதே யாரோ ஒருவன் போல் நீயும் இராதே இனியும்..!
வடக்கன் , அந்நிய நாடு போன்றவற்றை மற...
மனிதனென நினை..!
நினைத்திருந்தால் நடைபயணமாய் செல்ல அனுமதி அளித்திருக்க மாட்டீர் பல ஆயிரம் கிலோமீட்டருக்கு...!

உதவி செய்ய மனமிருந்தும் கற்ற பாடத்தினால் குரூரமாய் அவனுக்கு உதவுவதாய் எண்ணி அம்மனிதனுக்கு உணவு தருவதை selfie எடுப்பதும்,

அவன் புறத்தோற்றம் கண்டு பருகும் குடுவை இருந்தும், பழைய plastic bottle இல் தண்ணீர் தள்ளி நின்று தருவது நவீன தீண்டாமையின் உச்சம்..!

பணத்தையும் பணிநிரந்தரத்தன்மையையும் மேற்கோள்காட்டி பொதுமுடக்கம் என தெரிந்தும் பணியிலிருக்கும் இக்காலத்தவரை விசுவாசமாய் பணி புரிபவரைக்கூட எப்படியாவது பணியிடத்திற்கு வந்தே தீர வேண்டும் என நிர்பந்தத்திற்கு தள்ளும் மனிதத்தன்மையற்ற தனியார் நிறுவனங்கள்!

பணிக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை தாரா அதனை வாங்கியதாய் ஊழல் செய்யும் அரசு.

எல்லாமே நாம் தான் நம்மால் தான் என்று அறியவும்.

கொரோனா கொடிய நோய் அல்ல
வஞ்சம், பொறாமை, மனிதத்தன்மையற்றத்தன்மை ,தன்னலம் மட்டுமே அறிந்த மனம் கொண்ட நாம் தான் கொடிய நோய் இவ்வுலகுக்கு, பிறருக்கு..!

தன் உறவுகளுடன் இனிய தருணங்களை பரிமாறி, அன்பு தங்கள் மனதை இளகச் செய்து , மனம் முழுதும் அன்பே ஆட்கொண்டு ,நல் மனிதனாய் மாறி Quarantineக்குப் பிறகு தன்னலம் பிறர்நலம் அறிந்து எப்பணியிலும் ( தனியாரானாலும், அரசு சார்ந்த பணியானாலும், முதலாளியானாலும்,தற்சார்பானாலும்) நேர்மையாய், முழுமனதுடன் பணிபரிந்து இருக்க இடம் , உடுக்க உடை, மூவேளை உணவுக்கு அளவான செல்வம் சேர்த்து உங்களவர்களுடன் நிதானித்து வாழ்க்கையை இனிதாய் கடக்க என்னாலான பகிர்தல் இது எழுத்து மூலமாக....!!!!!

மனிதனாய் இருப்பதே சாலச் சிறந்தது!

சக மனிதனாய் மாற முயலும்
அசோக்

😇

14/04/2018

இயற்கை அளித்த வரங்களை பகிர்ந்து வாழ மறுக்கும் மனிதர்கள், செயற்கை வளங்கள் உருவாக்க மதிப்புள்ள காகிதத்திற்கு மயங்கி அற்ப மானிடர் அவர்தம் தலைமுறையினரின் விலைமதிப்பற்ற உயிர், இயற்கை வளங்கள், உணவளிக்கும் வாழும் கடவுள்கள் , இவையெல்லாம் பணயம் வைக்கும் நல்லுலகு, தூணிலும், துரும்பிலும் உள்ள இதுவரை காணா கடவுளுக்கும் சாதி, மதம் பிரித்து, உயர்ந்தது என்கடவுள் என மூடனாய்! அல்ல! அல்ல! மூர்க்கனாய் உருமாறி கடவுளுக்கு சமமான பிஞ்சு குழந்தையை தேக வெறிக்கு இரையாக்கும் உலகம், இக்கொடியவுலகில் வாழும் நாம் இன்னும் பெருமையாய் உரைக்கிறோம் உலகின் மூத்தகுடி தமிழனென்று, புரிந்துகொள் தமிழா, முதலில் நீ மனிதன் என்று...! மாற்றம் வேண்டும்! முதலில் நம்மிடம், பின்பு மற்றவரிடம்...! நம்மில் மாற்றம் வரும், இனி வரும் நாட்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் நன்மை பயக்கும் நாட்களாக அமையும்.. எனது மனமார்ந்த சித்திரைத் திருநாள், தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 😊

05/07/2017

காதலர்களாக சுற்றி தெரிந்த வேளையில்
முதல் முதலாக ஒரு முத்தம்
கொடுத்த பொழுது அவள் சொன்னால்
சி அசிங்கம் என்று

கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக
இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னால்
எப்ப பார்த்தாலும் இது தானா என்றால்

இரண்டு குழந்தைகள் பெற்ற பின்
அடுப்பு வீட்டில் யாரும் கவனிக்காத போது அவள் கழுத்துக்கு கீழ்
ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னால்
என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு
என்றால்

சில காலத்திற்கு பிறகு
கன்னத்தில் சுருக்கு விழுந்து
பழைய நினைவுகலுடன்
ஒரு முத்தம் கொடுத்தேன் அப்போது அவள்
சொன்னால்
வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா
என்றால் அவள்

கடைசியாக அவளை என் வீட்டு
[ #முத்தத்தில்]முற்றத்தில்
ஊரார் குளிப்பாட்டி திருமண பட்டுஉடுத்தி
படுக்கையில் கிடந்தவளை முத்தமிட்டேன்
அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தால்
கிழவனுக்கு வேர வேலையே இல்லை என்பதுபோல்

இறுதிவரை நேசியுங்கள்
அவள் வழி துணையாக வந்தவள் அல்ல
அவள் வாழ்க்கை துணையாக வந்தவள்

10/01/2017
25/12/2016

என்னவள்..
அவள் எனக்கானவள்..
எனக்கு பிடித்த குழந்தைகளில்
என்றும் அவள் அதிசயம்..
சற்றே வளர்ந்த குழந்தைதான்
நான் மட்டுமறிந்த ரகசியம்..
தனிமையில் நான் தவிக்கையில் - அவள்
தாய்பாசம் என் உள்ளிறங்கும்..
தலையணைகள் பல இருந்தும் - என்
தாலாட்டில்தான் அவள் கண்ணுறங்கும்..
என் அருகாமை இல்லா நொடிகளில்
பட்டென அவளுக்கு வியர்த்துவிடும்..
அவள் அசந்து உறங்கும் அழகினில்
பல மழலைகள்கூட தோற்றுவிடும்..
ஊடலுக்கு இரு நாளாயினும்
கூடலுக்கு இரு நிமிடம்..
தேடலுக்கு பஞ்சமேயில்லை
தேவதைகள் அவளின் ரகம்..
உடனிருந்து உயிரளிப்பாள்
அவளன்பில் மூச்சும் முட்டும்..
உயிர்பிரிந்தும் பிரிந்திடாது
பிடித்துகொண்ட கைகள் மட்டும்..
மனம் மட்டுமல்ல
மனசாட்சியும் தலையசைக்கும்
அவள் அசைவுக்கு மட்டும்..
அவள் அசைவுக்கு மட்டும்..
என்னவள்..
அவள் எனக்கே எனக்கானவள்..

09/12/2016

நீயும் நானும் நிறத்தில்
பொருத்தமில்லை
உனக்குப் பிடித்தபடம்
எனக்குப் பிடிக்கவில்லை
எனக்குப் பிடித்த உணவு
உனக்கு பிடிக்கவில்லை...
நீயறிந்த மொழிகள்
நானறியவில்லை
நீ முன்கோபி
நான் கோபம் தொலைத்தவள்....

நீ உரக்க பேசுபவன்
நான் மௌனமாய் மொழிபவள்
உன் குணமும் என் குணமும்
நேர் மாறாய்....
உன் ரசனையும் என் ரசனையும்
வேவ்வேறு திசைகளில்...
பின் எப்படி உன்னை
எனக்குப் பிடித்திருக்கிறது....

(ப...பி)

கண்மணி

Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when Kavithai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Kavithai:

Share