Sivakasi KUTTI JAPAN

Sivakasi KUTTI JAPAN Sivakasi is known for fire works and match work factories that produce 70% of the country's produce.
(417)

சிவகாசி நகரம் ஏறக்குறைய 600 ஆண்டு கால வரலாற்றை கொண்டிருக்கிறது. தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சி பகுதியின் ஒரு பகுதியாக சிவகாசி இருந்திருக்கிறது.

இந்த மன்னர், தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து சிவகாசியில் நிறுவினார்.

காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதா

ல், காசி சிவலிங்கம் பெயராலே சிவகாசி என்று அழைக்கப்படுகிறது. பிற்கால பாண்டிய மன்னர்களும் மற்றும் நாயக்க மன்னரான திருமலை நாயக்கரும் சிவலிங்கம் இருக்கும் கோயிலை மிகப் பெரிய கோயிலாக கட்டினர்.

இந்த கோயில் தற்போது காசி விஸ்வநாத சாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த கோயில் ஆன்மீக பக்தர்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளும் வந்து தரிசித்துவிட்டு அருள் பெரும் முக்கிய ஆன்மீகத் ஸ்தலமாக விளங்குகிறது.

22/06/2022
26/05/2022

இரயில் பயணிகளுக்காக........

சிவகாசி வழியாக, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-
எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு இரயில்(06035/06036) முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.

ஸ்லீப்பர், 3அடுக்கு ஏ/சி, 2அடுக்கு ஏ/சி வகுப்புகள் உள்ளன.

மத்திய கேரளா மற்றும் தமிழகத்தின் கிழக்கு டெல்டா மாவட்ட ஊர்களுக்கு நம் ஊர் வழியாக நேரடி இணைப்பு கிடைத்துள்ளது.

வழி: கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயங்குளம், சாஸ்தான்கோட்டை, கொல்லம், குந்தாரா, கொட்டாரக்கரை, புனலூர், தென்மலை, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம்.

முக்கிய குறிப்பு:
நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி இடையே தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ரயிலானது நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்படும்.இப்பணிகள் முடிந்தவுடன் வேளாங்கண்ணி வரை இயக்கப்படும்

இரயில் பயணிகள் இந்த சிறப்பு இரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

VCS TRUST சென்னை நடத்தும்  வங்கி ரயில்வே பிற அரசு பணிக்கான தேர்வுக்குரிய கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவக்க விழாநாள் ...
13/06/2021

VCS TRUST சென்னை நடத்தும் வங்கி ரயில்வே பிற அரசு பணிக்கான தேர்வுக்குரிய கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவக்க விழா
நாள் 13 06 2021
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி
கூகுள் மீட் வழியாக

ஜூன் 13 முதல் 30 வரை
காலை 9 முதல் 9 40 வரை
இரவு 8 முதல் 8.40 வரை
பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் வழங்கப்படும்
மாதம்தோறும் தேர்வு நடத்தி முதல் மதிப்பெண் பெறுபவருக்கு ரூபாய் 1000 பரிசாக வழங்கப்படும்
பயிற்சி வகுப்பில் இணைய விரும்புவோர் பெயர் கல்வித்தகுதி வசிக்கும் ஊர்
வாட்ஸ்அப் எண்
தகவல்களை நிரப்பி 8825619495 வாட்ஸப் மூலம் அனுப்பவும்

20/06/2020

சிவகாசியில் அனைவரும் மாஸ்க் மற்றும் தனி மனித இடைவெளியை பின்பற்றவும். கொரோனாவை அழிக்க அனைவரும் முயன்றால் மட்டுமே முடியும்...

Always welcome
10/02/2019

Always welcome

04/03/2018

My hospital needs persons for reception job, three vacancies r there. Needs +2 or college degree with knowledge in handling typing and computers, if any person interested kindly ask them to contact our manager Ganeshkumar, SRUTHI HOSPITAL, Gandhi Road , near bus stand ,SIVAKASI , no is ‭99434 84099‬

24/02/2018
02/07/2017

ஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள்
பெருசா ஒன்னுமில்லைங்க நம்ம தாத்தா காலத்து வழிமுறைதான்.

1. வெளியில் செல்லும்போது குடிதண்ணீர் பாட்டிலில் எடுத்து செல்லவும்.

2. பயணத்தின் போது புளி சாதம் , லெமன் சாதம் , வசதி இருந்தால் வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லவும் ( டப்பால கட்டுங்க கவர்ல கட்டின ஜி எஸ் டி வரும் )

3. அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூட இல்லேன்னா மஞ்ச பை எடுத்திட்டு பொய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை ஜாமான் வாங்குங்க .

4. வார இறுதி நாட்களில் வீட்லயே குடும்பத்தோட ஏதவது ஸ்பெசல் உணவு தயார் செய்து சாப்பிடுங்க.

5. திரைப்படத்தை multiplex அல்லாத திரையரங்குகளில் பாருங்க.

6. விடுமுறை நாட்களில் மால் , ஷாப்பிங் னு போகாம பாட்டி தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போலாம் .

7. காலைல நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்க .

9. பழைய பழக்கங்கள் போல , நன்பர்கள் டூர் போனால் , நண்பர்கள் எவராவது ஒரு வீட்டில் தங்குங்கள்.

10. சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து சொந்தமாக வேலையே செய்ய முயற்சி பண்ணலாம் .

இப்படி செய்தால்
உடல் ஆரோக்கியமாகும் .
மிகப்பெரும் பணம் மிச்சமாகும் .
சொந்தம் பெருகும்
மனைவி கணவன் பாசம் , அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும் .
நட்பு வட்டங்கள் உண்மையாகும்.

உண்மையான பழைய இந்திய மீண்டும் பிறக்கும் .

17/04/2017

#சிவகாசி ரயில் நிலையம் அருகே #தீப்பெட்டி தொழிற்சாலையில் #தீ விபத்து

goo.gl/pZz1H5

27/02/2017

சிவகாசி பட்டாசு ஆலை ஸ்டிரைக் 5 லட்சம் தொழிலாளர் வேலையிழப்பு: அரசை கண்டித்து மார்ச் 1ம் தேதி உண்ணாவிரதம்சிவகாசி: பட்டாசு கடைகளுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை கண்டித்து, சிவகாசியில் பட்டாசு ஆலைகளின் வேலைநிறுத்தம் 7வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பட்டாசு கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 புதிய விதிமுறைகள் காரணமாக பட்டாசு விற்பனையாளர்கள், ஆலைகளுக்கு ஆர்டர் தருவதை நிறுத்தி விட்டனர். இந்த புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகாசி பகுதியில் உள்ள 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் கடந்த 20ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கின. இதற்கு ஆதரவாக பட்டாசு விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

7வது நாளாக நேற்றும் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் பட்டாசு மற்றும் அதன் உபதொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு வாரமாக வேலையில்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் சிவகாசியில் பட்டாசு தொழில் கூட்டமைப்பினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, மார்ச் 1ம் தேதி சிவகாசி - திருத்தங்கல் சாலையில் உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் மற்றும் சிவகாசியில் முழு கடையடைப்பு நடத்துவது என முடிெவடுத்துள்ளனர்.

Address

4/45 Kanichari Pudur
Sivakasi
626123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sivakasi KUTTI JAPAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share