Service Doctors and PostGraduates Association-SDPGA

  • Home
  • India
  • Salem
  • Service Doctors and PostGraduates Association-SDPGA

Service Doctors and PostGraduates Association-SDPGA SDPGA is a registered association to protect the rights of service doctors and post graduates in tam

'தாய்மாமன்' தங்க மோதிரம் திட்டம்: டாக்டர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை https://www.etvbharat.com/ta/state/doctors-associ...
25/08/2026

'தாய்மாமன்' தங்க மோதிரம் திட்டம்: டாக்டர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை https://www.etvbharat.com/ta/state/doctors-association-urges-implementation-of-thai-maman-gold-ring-scheme-through-banks-tns26082502849
اردو
ETV Bharat / state

'தாய்மாமன்' தங்க மோதிரம் திட்டம்: டாக்டர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 25, 2026 at 6:00 PM IST

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மோதிரங்களை மருத்துவர்கள் வாயிலாக அல்லாமல் வங்கிகள் வாயிலாக வழங்க வேண்டும் மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக ஆளும் தவெக அரசு தாய்மான் தங்க மோதிரம் திட்டத்தை செயலாக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இதன் வாயிலாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு தங்க மோதிரம் வழங்க உள்ளது. ஜுன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. ஆகையால், ஜுன் மாதத்திலிருந்து நான்கு மாதங்களுக்கு தேவையான 1 லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்க இரண்டு தங்க நகை விற்பனையாளர்களை அரசு தேர்வு செய்துள்ளது.

இந்த நிலையில், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் அளிக்கும் திட்டத்தை அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் மனப்பூர்வமாக வரவேற்கின்றது. அரசு மருத்துவமனையில் பிரசவங்களை ஊக்குவிக்கவும் குறைந்து வரும் மக்கள்தொகையை சரி செய்ய அரசு ஏற்படுத்தி வரும் இந்த தங்க மோதிரம் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதேசமயம், மருத்துவமனை மூலமாகவே பயனாளிகளுக்கு வழங்கப்படும் திட்டத்தில் ஏற்படக்கூடிய சில பாதகங்களை தெரிவிக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. தங்கம் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு அதற்கு 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவலாளிகள் வைக்கப்பட வேண்டும். சிசிடிவி பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

மேலும், இதற்கு தனியாக ஒரு அலுவலர் பொறுப்பாக நியமிக்கப்பட வேண்டும். மருத்துவ கல்லூரியில் அல்லது மாவட்ட மருத்துவமனையில் தலைமை மருத்துவர் அதனை ஒவ்வொரு நாளும் திறந்து கணக்கு எடுத்து அதனை பிரசவ அறை அருகில் உள்ள மோதிரம் வழங்கும் இடத்திற்கு சென்று அங்குள்ள பொறுப்பதிகாரிகள் உடன் பயனாளிகளை சரி பார்த்து அன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

மேலும், அந்த மாவட்டத்தில் உள்ள சராசரியாக 5 முதல் 20 அரசு மருத்துவமனைக்கு இங்கிருந்து ஆயுதம் தாங்கிய வண்டியில் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ஒரு அலுவலர், ஒரு ஆயுதம் தாங்கிய காவலாளியுடன் மோதிரங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு சென்று மருத்துவ பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஒரு பொறுப்பு அதிகாரியிடம் கொடுக்கப்பட வேண்டும். அதனை அங்கு சிசிடிவி முன்னிலையில் மற்ற ஆதார் மற்றும் பிக்மி எண் மூலமாக பயனாளிகளை அடையாளம் கண்ட அன்றே வழங்கப்பட வேண்டும்.

இந்த செயல் திட்டத்தால் ஒவ்வொரு நாளும் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டியது கட்டாயமாகி உள்ளது. அதுமட்டுமின்றி, இதற்காக புதிதாக பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படுவதுடன், ஆயுதம் தாங்கிய காவலாளிகள், சிசிடிவி மற்றும் அதை கண்காணிப்பு செய்வதற்கு காவலர் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது.

மருத்துவமனையின் நிர்வாக இடத்தில் இருந்து பிரசவ இடத்திற்கு செல்ல தேவையான காவல் நடவடிக்கைகள், அந்த மாவட்டத்தில் உள்ள அன்று பிரசவம் நடந்த இடத்திற்கு செல்ல தேவையான காவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வண்டி இவை அனைத்தும் புதிதாக நிறுவப்பட வேண்டும். இவ்வாறு செய்வதினால் மருத்துவ சிகிச்சையில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

அத்துடன், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 0.66 சதவீதம் மட்டுமே நிர்வாகச் செலவுகளுக்காக ஒதுக்கி உள்ளது. ஆனால் கணக்கிட்டு பார்த்தால் கூடுதலாக ஏறக்குறைய 2 சதவீதம் வரை செலவழிக்கப்பட வேண்டி இருக்கின்றது. அதுமட்டுமின்றி உயிர் காக்கும் பணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் இந்த வேலைக்கு தினம் தினம் நேரம் ஒதுக்கி பணியை மேற்பார்வை செய்ய வேண்டும்.

இதற்கான செலவினங்கள் முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை அளித்து பெறப்படும் தொகையில் செய்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் மருத்துவமனைக்கு செலவிடப்படும் நிதி ஆதாரம் பாதிக்கப்படும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருக்கும் ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களை தங்க மோதிர திட்டத்தின் பொறுப்பாளர்களாக உட்படுத்தும்போது சுகாதார மற்றும் மருத்துவ சேவையில் தொய்வு ஏற்படும்.


12/08/2026

The following decisions were taken during an online EC meeting conducted on Sunday..
1) TMTMT issue: SDPGA welcomes the gold ring scheme announced by the govt for the babies born in Govt Hospitals. This will definitely encourage the institutional deliveries and reduce the out of pocket expenses for the public when they seek MCH care in private hospitals. We are ready to identify the beneficiaries and to make the flagship program successful. The methodology of procuring the gold from TNMSC and keeping it at Govt Hospitals will be practically not possible in several aspects.
* _First identifying a safe place with round the clock security and police protection is very difficult._
* _As the footfall of patients visiting govt hospitals is increasing day by day, managing the crowd has become a nightmare as thefts of vehicles, mobile phones and other valuables of both patients and health care providers are happening daily._
* _Because of the shortage of manpower coupled with increasing footfall, already govt drs are very much straining in giving quality health care, teaching students, implementing schemes etc. TMTMT scheme will strain the administration further._

SDPGA suggests the following to the govt to implement the scheme successfully.
1) Hospital administration will prepare the list of babies born in govt hospitals.
2) The gold rings will be kept in state-run Cooperative banks or Treasury
3) The beneficiaries will get the gold ring by producing the necessary documents The social welfare dept will coordinate

2) SDPGA demands the govt to stop the redeployment of manpower. We will pressurise by involving all the cadres through Federation and to meet Hon Health Minister within a week and plan for some form of attention seeking event

3) In the forthcoming inter and intra directorate transfer counselling, SDPGA demands the govt to include course completing service PGs both regular and post diploma candidates. SDPGA requests to allow the MRB candidates who are completing the one year regularisation period after the service PG counselling. SDPGA demands the govt to show all the non service PG occupying places as vacant.

31/07/2026

*🛡️30.07.2026🛡️*

THe plan to induct Administrative officers in the cadre of DME is dropped as of Now due to opposition by us and other Fraternal Associations.

*SDPGA thanks Honourable Health Minister for not Posting Administrative cadre as DME*

But this is not the end of everything. There are morethings to stop and rectify under this new Government.

SDPGA had stopped the Extension of Contract of
Director KKSSH in June of 2026

SDPGA is against Extension or Contractural Appointments of *Retired Doctors*,
*Non service Doctors*
*Non Doctors*
in
Health Department
NHM,
TNHSP,
TRANSTAN,
MRB etc etc
as Consultants or whatever nomenclature
they use by portraying In-Service Doctors in bad light as though we are not Capable or Qualified.

SDPGA requests to post Regular panel
DME,DMS instead of continuing this FAC model.

*Together we win*

*SDPGA🔖*


🛡️30.7.26🛡️உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கான 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் மத்திய...
30/07/2026

🛡️30.7.26🛡️
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கான 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் மத்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

SDPGA-வின் தொடர் முயற்சிகளும், எங்கள் உறுப்பினர்களின் உறுதியான ஆதரவும் காரணமாக, அரசுடன் இணைந்து மேற்கொண்ட சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்று, GO 462 மூலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் பணியிலிருப்போருக்கான ஒதுக்கீட்டை நீண்ட காலத்திற்கு முன்பே பாதுகாத்தோம். தற்போது, நிரப்பப்படாமல் உள்ள அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை மத்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்குமாறு உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் நமது அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

இது மாநில அரசின் சட்டப் போராட்டத்தின் தோல்வி அல்ல. மாறாக, தமிழ்நாட்டின் அடுத்தடுத்த அரசுகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி DM/MCh பயின்ற மருத்துவ பணியிடங்களை போதுமான அளவில் உருவாக்கத் தவறியதன் மூலம், அரசு மருத்துவர்களை அந்தப் படிப்புகளைத் தேர்வு செய்யாமல் இருக்கச் செய்துள்ளன.

இதுவே உண்மையான குறைபாடு.

ஒரு MD/MS மருத்துவர் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டு, பின்னர் இணைப் பேராசிரியர், பேராசிரியர், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் (DMER) டீன் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு பதவி உயர்வு பெற முடிகிறது.

ஆனால், மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ சேவையை வழங்கும் நோக்கில் கூடுதல் திறனைப் பெற DM/MCh படிப்புகளை முடித்த மருத்துவர்களுக்கு, பேராசிரியர், டீன் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் (DME) போன்ற பதவிகளை அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன.

போதுமான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், பதவி உயர்வு வாய்ப்புகள் மற்றும் உரிய ஊதியச் சலுகைகள் இருந்திருந்தால், அரசு மருத்துவர்கள் DM/MCh படிப்புகளில் அதிகமாக சேர்ந்திருப்பார்கள். அப்போது இந்த இடங்களை மத்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்க வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்காது.

இந்த முரண்பாட்டைச் சரிசெய்ய GO 354-ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று SDPGA தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், முந்தைய அரசுகள் இதை கவனிக்கத் தவறிவிட்டன.

35 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தெற்காசியாவின் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்த பெருமை தமிழ்நாட்டுக்கே இருந்தது. இன்று, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையைக்கூட சீராக மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கிறோம்.

ஒரு காலத்தில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக இருந்த தமிழ்நாடு, தற்போது மகாராஷ்டிராவிற்கு அடுத்த இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அதிகாரிகள், அரசு சுகாதார அமைப்பை திட்டமிட்டு படிபடியாக முறையாக பலவீனப்படுத்தி, தனியார் மருத்துவத் துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆட்சி செய்த அரசுகள், தங்களது முன்னோடிகள் உருவாக்கிய உலகப் புகழ்பெற்ற தமிழ்நாடு சுகாதார அமைப்பின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லத் தேவையான தொலைநோக்கு பார்வையை வெளிப்படுத்தவில்லை.

எனவே, சுகாதாரத் துறையில் மேலும் IAS அதிகாரிகளை நியமிப்பதை விட, சுகாதார சேவையை சமூகத்திற்கான செலவாக அல்ல, முதலீடாகக் கருதி, அதன் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு தற்போதைய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

SDPGA 🔖



28/07/2026

Dear all

_Men may come Men may go IAS go on forever_

ஆட்சிகள் மாறலாம்
காட்சிகள் மாறவில்லை.

When we have been suffering from less manpower, poor pay, 24 hrs duty, delayed promotions, targets, review meetings etc now we are threatened with two new issues.

First one is redeployment of existing posts from one hospital to another hospital. Already we are deficient in numbers as per IPHS with respect to patient load. We need 35000 doctors but at present 18,000 and so we do two people's work. Now redeployment salt rubs our wounds. Officials consider we are all surplus and they translocate the posts from one hospital to another where it's demanded instead of creating new posts. That's why we demand Review of GO354. ஒவ்வொரு நாளும் நமது பணியிடம் நமக்கு தான் உள்ளதா என்பது கேள்விக்குறி.

Second, the government feels we are not performing well and not capable of doing administration. So they want to replace our Directors with IAS people and post DRO in Hospitals. So they ask us only to treat patients and teach students. Already they made us to beg them for salary. Now we need to toe them for attendance, leaves, increments, arrears, promotions etc. மொத்தத்தில் கொத்தடிமையாய் இருக்க சொல்கிறார்கள்.

*Our position is bleak*
*Our dignity is at stake.*

Dark days ahead. We need to stand straight, stay united and raise our voice. We have shown our strength previously to obtain DACP salary and to retain the service quota. Now it's time to protect our dignified profession.

*United we survive*

SDPGA 🔖



20.07.2026The health condition of the fasting warrior   has deteriorated. Though he was forcefully hospitalised by Delhi...
21/07/2026

20.07.2026

The health condition of the fasting warrior has deteriorated. Though he was forcefully hospitalised by Delhi police he continues his fasting in hospital.

Cockroach Janatha Party conducted a Dharna at Jantar Mantar and attempted to march towards Parliament house.
Delhi police
1 used Tear Gas shells to disperse the young CJP protestors.

2 Sealed Exit from nearest 5 Delhi Metro stations.

3 A massive 4 hours Traffic jam in Central Delhi.

4 CJP submits memorandum to Honble HM Mr.J.K.Nadda.

5 Parliament main entrance gate closed

6 Rashtrapati bhawan gates closed

7 Rajiv gandhi chowk metro station becomes field for sit in Protest.

Memorandum submitted to.honble HM Mr J.K nadda
(1.Resignation of Education Minister
Mr.Dharmendra Pradhan.
2.Compensation to families of students who died of NEET Exam stress.).

HM requests cooperation of CJP to bring back normalcy

is it Indian youth empowerment?
is India going the Nepal way?
why this happens?
when mainstream opposition parties don't do justice to citizens.
such uprisings are bound to happen.

What's our view on Anti-NEETagitation?
suppression of dissent by Government?

If someone asks what sdpga does, we can proudly say that we ignited this in 2016 and sensitised the public, educationist, social reformers and the govt about the threat of NEET. Now it's burning nationwide in 2026.


.

நேற்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவத்துறை அமைச்சர் ம...
09/07/2026

நேற்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர்களுடன் மருத்துவமனை இயக்குநரை சந்தித்து எந்த வித அதிகார தோரணை இல்லாமல் மிக எளிமையாக அமர்ந்து கலந்துரையாடினார். மருத்துவத்திற்கும் மருத்துவர்கள் மீதும் அவர் கொண்டிருக்கும் மரியாதை வெளிப்படுகிறது. இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் முன்னிலை மாநிலமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் அரசு மருத்துவர்கள் குறைந்தபட்சம் இந்த மரியாதையை தான் மக்களிடமும் அதிகாரிகளிடமும் எதிர்பார்க்கிறார்கள். கண்ணியமான முறையில் இதை உணர்த்திய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அன்பு கலந்த பாராட்டுக்கள்.



07/07/2026

🛡️கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
06-07-26🛡️
SDPGA செய்தி.

கடந்த மே21, அன்று திருவரங்கம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாயின் உறவினர் ஒருவர் சுகப்பிரசவம் தான் செய்யவேண்டும் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அதே நபர் மீண்டும் 27-5-26 அன்று பிரசவித்த தாய்க்கு இரத்தம் செலுத்தும் நிலை இருந்ததால் அதற்கான நடைமுறைகளை துவக்கிய போது,
தாம் ஒரு யு டியுபர் எனக்கூறி வீடியோ எடுத்துள்ளார்.

இதனை பாதிக்கப்பட்ட மருத்துவர்கள்,புகாராக நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் 03-07-26 அன்று இரவு சுமார் 9மணியளவில் சாலைவிபத்தில்(RTA) காயமடைந்தாக அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்த நபர்களில் ஒருவர் அங்கு நடக்கும் சிகிச்சையை வீடியோ எடுத்துள்ளார்.
இப்படி செய்யக்கூடாது என கூறிய செவிலியரையும், பிறகு அங்கு வந்த பணியில் இருந்த பெண் மருத்துவரையும் வீடியோ எடுத்துள்ளார்.

இதனால் வேதனையுற்ற மருத்துவர்,செவிலியர் மற்றும் பணியாளர்கள் மருத்துவமனை வாயிலுக்கு வந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இப்படி பணியில் இருக்கும் பெண்களை, மருத்துவமனை வளாகத்தில் வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றம் எனவும், இதனால் பெண் ஊழியர்களின் தனிப்பட்ட உரிமை, பாதுகாப்பு குறிப்பாக அவர்களின் பணித்திறன் பாதிக்கப்படுகிறது எனவும், அவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை
தமிழ்நாடு மருத்துவ மனைகள் பாதுகாப்புச்சட்டம் 2008,
BNS பிரிவு 132, BNS பிரிவு 221 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரியும்
இன்று 06-7-26 பிற்பகல் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் வாயிற் கூட்டமும் அதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும்

அனைத்து மருத்துவ துறை ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

நன்றி
மரு.த.அருளீஸ்வரன், மாநிலப் பொருளாளர்,
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம்.(SDPGA)🔖

https://www.facebook.com/share/v/1D8yT9eJF3/

01/07/2026

*🛡️மருத்துவர் தின வாழ்த்துச் செய்தி🛡️*
01-07-2026

மருத்துவர் தினம் கொண்டாடும் இந்நாளில்
வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்ற பணி மாறுதல் &பதவி உயர்வு கலந்தாய்வு
மற்றும்
அரசு மருத்துவமனை வளாகங்களில் சமூக வலைதள காணொளிகள் (Reels) எடுப்பதற்கு தடை அறிவிப்புகளுக்கு, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கும், சுகாதார செயலாளர் அவர்களுக்கும் நன்றியையும் *மருத்துவர் தின வாழ்த்துகளையும்* தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசாணை-113 மூலம் எங்களது தொடர் கோரிக்கையான சிறிய மருத்துவமனைக்களுக்கு தேவையான மருத்துவர் பணியிடங்களை உருவாக்கியமைக்கு நன்றி.
அதே வேளையில் பெரிய மருத்துவமனைகளில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் வழங்குவதோடு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயத்தின் படி *IPHS* புதிய மருத்துவர் பணியிடங்களும், செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவ பணியிடங்களும் உருவாக்க அரசாணை 113ஐ மறுஆய்வு செய்ய கோருகிறோம்.

2012க்கு பிறகு அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்தப்பட வில்லை. மேலும் அரசு மருத்துவர்களின் நீண்ட வருடங்களாக நிலுவையில் உள்ள கோரிக்கையான அரசாணை 354ஐ மறு சீராய்வு குறித்து அறிவிப்பினை வெளியிட,
இந்த மருத்துவர் தினத்தில் கோருகிறோம்.

அரசு மருத்துவர்களின் அயராத பங்களிப்புகள், தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக தேசத்தின் சுகாதார மாதிரி மாநிலமான தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களின் மன அழுத்தம், மருத்துவர் இறப்புகளுக்கு, மருத்துவ சேவை குளறுபடிகளுக்கு காரணமான 24 /36 மணி நேர பணி முறையை ஒழித்திடவும் கோருகிறோம்.

*உறுப்பினர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர் தின வாழ்த்துகள்*

*SDPGA🔖*

Address

Salem

Alerts

Be the first to know and let us send you an email when Service Doctors and PostGraduates Association-SDPGA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Service Doctors and PostGraduates Association-SDPGA:

Shortcuts

Share