காதல்

காதல் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from காதல், magudanchavadi, Salem.

03/05/2019

தயவு செய்து பொறுமையா படிங்க நண்பர்களே!
என்னை கவர்ந்த கவிதை.........................
"..பெண்ணல்ல நீ எனக்கு..".
நாள் தவறி போனதே என
நீ வெட்கத்தோடு உரைத்ததும்..
மார்பில் முகம் புதைத்ததும்
மேடிட்ட வயிறு கண்டு
முத்தமிட்டு சிரித்ததும்..
புளிப்பு மாங்காய் வேண்டுமென
காதோரம் சொன்னதும்
கண்ணுக்குள் ஆடுதடி..
மூன்றாம் மாதம் முதல்
நீர் இறைக்க தடை போட்டேன்..
ஐந்தாம் மாதம் முதல்
கனம் தூக்க தடை போட்டேன்..
ஏழாம் மாதம் தனில்
சீமந்தம் செய்தார்கள்..
மஞ்சள் பூசி, வளவி இட்டு
திருஷ்டி சுற்றி போட்டாலும்
போய்விடுமா உன் அழகு தாய்மையில்..
ஆண்டவன் இருந்திருந்தால்
அப்பொழுதே கேட்டிருப்பேன்
ஏன் படைத்தாய்
ஆண் எனவே மண்ணில் என்னை?
தினமும் மாலை கை கோர்த்து
நடை பயின்று..
இரவெல்லாம்
கண் விழித்து மடி மீது
உறங்க வைத்தேன் தாயென்றே உனை..
நாட்கள் நெருங்க, நெருங்க
கலவரம் கண் மறைத்து
நம்பிக்கை கை பற்றி
மார்பனைப்பேன் என் உயிரே..!
இறுதியாய் பல் கடித்து
வலியென நீ புலம்புகையில்
ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை
வரும் முன்னே
வியர்த்தொழுகும் முகமெல்லாம்..
சில நொடி பொழுதுகளில்
வந்தனரே உன் தாயும், என் தாயும்
உறவினரும் நண்பருமாய்..
தனியறைக்குள் நீ செல்ல
கதறும் ஒலி கேட்டு தாங்கவும்
முடியாமல் தனியிடம்
அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல்
நினைவெல்லாம் உன் பிம்பம்..
அவசரமாய் தாதி பெண் எனை அழைக்க
ஓடி வந்தேன்
உள் வர சொன்னாயாம்..
சொல்லி விட்டு போய் விட்டால் மின்னல் கீற்று போல..
பல் கடித்து வேதனையில்
பக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனை
அழைத்து கைபற்றி கொண்டாய்..
இறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்
இருந்தும் என்ன செய்ய இயலவில்லை
உன் வலி நான் பெறவே,
ஆர்ப்பரித்து அடங்கியதும்
அரை நினைவில் நீ சிரித்தாய்
பிஞ்சு முகம் காணும் முன்னே
நெற்றி ஒதுக்கி முத்தமிட்டேன்
ம்ம்ம்.. நீ எனக்கு உயிரடி..!!
பெண் குழந்தை நீ பெற்றாய்
பேரின்பம் நான் பெற்றென்..
முகமெல்லாம் உன் வடிவம்
நிறம் மட்டும் பொன் எழிலாய்
நீ கொஞ்சம் கண்ணயர்ந்த வேளையில்
வெளியே வந்தேன்..
அதுவரை கட்டி வைத்த
கண்ணீர் எல்லாம் கரை தாண்டும்
காரணம் நான் அறியேன்
புரியவில்லை அக்கணம்..
வாரி எடுக்க வந்தார்கள்
உன் தாயும் என் தாயும்
யாரிடம் கொடுக்க?
யாரிடமும் வேண்டாம்
முதல் சொந்தம் அவளுக்கே
சொல்லி விட்டேன் என் முடிவை..
30 வினாடிகள்
கண் விழித்து தேடினாய்
மகளை அல்ல என்னை
கை பற்றி மூத்த மிட்டாய்
பின் ஏந்தினாய் பெண் பூவை..
பெருமையாய் பார்த்தாள் என் தாய்
பொறாமையாய் பார்த்தாள் உன் தாய்..
இருவரும் பெற்றதில்லை
இந்த பாக்கியம் என..
அவனைவரும் இனிப்பு கேட்டு
வாங்கி கொடுத்த பின்
கலைந்தது கூட்டம்..
தனியே நீயும், நானும்
எனக்கு எங்கே இனிப்பென்று
நான் கேட்க .. இறுக கரம் பற்றி
இதழோடு இதழ் பொருத்தினாய்..
ம்ம்ம்.. இதை விட பேரின்பம்
பெறுவேனோ சொர்க்கமதில்..???
"..பெண்ணல்ல நீ எனக்கு.."
குல தெய்வம் அல்லவோ..!!

24/09/2018

மண்ணை பார்த்து நடக்கும்
அவள் #அழகைக் கண்டு
பூமியும் கூட அவளை
காதலித்துவிடுமோ
என்று அஞ்சினேன்...😢😢😢

நல்லவேளை உயிர்
பிழைத்தேன்
பூமியும் ஒரு #பெண்
என்பதால்💞💞💞

24/09/2018

பிரபஞ்சத்தை ஒற்றை முடியில்
சுருக்கிலிட முயல்கிறேன்.

ஊசித் துளைக்குள் உள் நுழைந்து
கொண்டிருக்கிறேன்.

பிஞ்சிக் காதுகளில் பாம்பெடமென
தொங்கிக் கொண்டிருக்கிறேன்.

விண் கற்கள் கொண்டு
மேக அஸ்திவாரத்தில்
மாளிகை ஒன்றை
எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.

காற்றுக் குமிழிகளுக்குள்
உள் நுழைந்து துயில்
கொள்ள எத்தனிக்கிறேன்.

சூரியக் குடும்பத்தில் இருந்து
பூமிப் பந்தை பிரித்தெடுத்து
கால் பந்து விளையாட
விழைகிறேன்.

செவ்வாயின் சிகப்பு
வண்ணமெடுத்து பால்
வீதியில் வர்ணம் தீட்ட
முற்படுகிறேன்.

சனியின் துனைகோள்
வளைவில்
நர்த்தனமாட ஆசை
கொள்கிறென்.

இத்தனையும்,ஒரு நொடியோ,
இல்லை ஒரு யுகமோ

உன்னிடம் பேசிக் கொண்டிருக்கும்
அந்த நிமிடங்களில்
சாத்தியாமாகித் தொலைத்து
விடுகிறது....

10/03/2018

வேர்த்துக் கொட்டியது....
உடைகள் மெல்ல வியர்வை துளியில் சரசமாகின...
அடி வயிற்றில்..
ஏதோ ஒரு வித வலி....
கால் நகங்கள் கூசின...
கண்களிருந்து.... கண்ணீர்.....
என்னையும் அறியாது....
எனது பத்து விரல்களும்...
அந்த......
விரலின் அழுத்த்தில்....!!!!!!!!!
நேரம் ஆக....
ஆக.....
படபடப்பு.... என்னை ஆட்கொள்ள........!!!!!..
அவள்......
என் மனைவியின்...
நெற்றிப்பொட்டில்...
என் முத்தங்கள் அவளை ஆறுதல் படுத்தியதோ?...
எனக்கு தெரியவில்லை...
என் பயத்தை மறைக்க நான் மேட்கொண்ட வழியாக...............
"என்னங்க! ".. என.. கண்களை மூடி...... என் கைகளை அவள் பற்றிய போது....
உணர்ந்தேன்.....
அவள் மீதான காதலை.....!!!!!!!!
என் மீசைக்குள் மறைக்க முயன்றும்....
அப்பட்டமாக காட்டியது...
என் கண்ணீர்....
என் பிடியிலிருந்து அவளை...
இழுத்துச் சொன்றனர்........ .
என் மனைவியின் தலைப்பிரசவம்.... ..
"சுக பிரசவம் "..
என்று பேசிக் கொண்டார்கள்... ..
"என்ன.. இதற்கு பெயர் தான் சுகபிரசவமா? "......
இன்னும் குழப்பத்தில் நான்....

08/03/2018

விலக்க இயலா
விருப்பக்கூண்டினை
தன்னகத்தே
தரித்து தனித்துவம்
கொண்டவள்
பெண்மை...!
அழகின் வடிவாய் நின்று
சொல்லுக்குள் அடங்கா
சுகமதின் அட்சயம் .!
உணர்வின் ஊற்றாய்
உய்யும் இவளன்றி
உய்யாதே உலகு.!
ஆணின் முகவரியானவள்
அகிலத்தின் உயிர்ப்பானவள்
தேடலின் வடிவானவள்.!
அன்பின் ஊற்றானவள்
அன்பே நினைவானவள்.!

14/12/2017

அண்ணன் காதலுக்கு தங்கை துனை போவாள்.
ஆனால் தங்கை காதலித்தால் அண்ணன் எாிந்து விழுவான்

ஏனெனில்
தங்கைக்கு காதலை பற்றி தெறியும்
அண்ணனுக்கு பசங்களை பற்றி தெறியும்

பெண் என்பதால் மட்டும் அவளை நேசிக்காதே ... அவளின் பெண்மையயையும் நேசிக்க  கற்றுக்கொள்..
12/09/2017

பெண் என்பதால் மட்டும் அவளை நேசிக்காதே ...
அவளின் பெண்மையயையும் நேசிக்க கற்றுக்கொள்..

20/08/2017

Wife : எவ்ளோ போன் பண்றேன் எடுக்க மாட்டியா.?
Hus : எதுக்கு Noi Noi னு போன் பண்ற.?
Wife : என் கிட்ட பேசு மாமா Please...
Hus : சண்ட போட்டா கொஞ்சம் நேரம் கூட பேசாம இருக்க மாட்டியா டீ...
Wife : என்னால அப்படி இருக்க முடியல மாமா...
Hus : ஏன் டீ.?
Wife : சின்ன சின்ன சண்ட தான் பிரிவின் ஆரம்பம் மாமா...
அதான் நீ என்ன விட்டு பிரிஞ்சு போய்டினா அத என்னால தாங்க முடியாது மாமா...
Hus : நான் எவ்ளோ கோவப் படுறேன், திட்டுறேன் உனக்கு ஏன் கோபமே வர மாட்டேங்குது அவ்ளோ பிடிக்குமா என்ன...
Wife : எங்க அப்பா, அம்மா கூட காட்டாத பாசம், அன்பு சில நேரத்துல உன் கிட்ட தான் கிடைக்குது அதான் டா...
Hus : Oh அப்படியா.?
Wife : என்ன அப்படியா அப்படித்தான்...
சாமிய பாத்தா எப்படி கை எடுத்து கும்புடுவோமோஅப்படி தான் உன்னையும் கும்புடுவேன்...
Hus : அழுகிறான்...
Wife : ஏன் மாமா அழுகுற.?
Hus : இப்படியெல்லாம் பேசுறியே அதான் டீ..
Wife : கடவுள் தான் ஒரு மனுசனுக்கு சந்தோஷம், துக்கம் ரெண்டுமே குடுப்பார்னா...
நீ தானே எனக்கு கடவுள்...
நீ என் கூட இருந்தா எனக்கு சந்தோஷம்...
நீ என்ன ஒரு செகேண்ட் பிரிஞ்சாலும் செத்துருவேன் டா... ( Crying )
Hus : நீ ஏன் டீ அழுகுற...
நீ இனி அழ கூடாது மா...
I Love You So Much Ma...
Wife : Love You Too Da Mama...

08/06/2017

உனக்காக அர்ச்சனை செய்ய கோவிலுக்கு சென்றேன், அப்போது குருக்கள் கேட்டார்
என்ன நட்சத்திரம் என்று????
பாவம் அவருக்கு எப்படி தெரியும்
நீ நிலா என்று.....!!!!

15/01/2017

என்னை நீ பார்த்திருக்க நியாயமில்லை,
உன்னையும் நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை,
ஆனாலும், தினமும் சந்தித்துக் கொள்கிறோம்,
உனது எழுத்துகளை நான் வாசித்தும்,
எனது எழுத்துகளை நீ நேசித்தும்
பேசிக் கொண்டேயிருக்கிறோம்.
ஒற்றைப் புள்ளியில், உனக்காக நானும், எனக்காக நீயும்
இறக்கைகளை இணைத்துக் கொண்டு
பறப்பதற்காக முயற்சிக்கிறோம்.
இரைதேடும் பறவைகள் போன்றே
எதையாவது தேடிக் கொண்டே திரிகிறோம்.
இளைப்பாறும் இடங்களில், உனது புன்னகையும்,
எனது புன்னகையும்
கோடிட்ட இடங்களை நிரப்பி விடுகின்றன.
சற்றுமுன் என்னைக் கடந்துப்போனது நீயாகவும் ,
வழி ஒதுக்கி நின்றது நானாகவும் கூட இருக்கலாம்.
அல்லது, என்னை முறைத்துவிட்டுப் போனதும்,
நான் எரிச்சலோடு நகர்ந்ததும், நாம் இருவராகவும் இருக்கலாம்.
ஆனாலும், வார்த்தைகளின் பக்கங்களில்
வசப்பட்டுக் கொண்டே நாம் நடக்கிறோம்,
எழுத்துகள் இடம் மாற்றிவைத்த இதயத்திற்கு
உருவங்கள் தேவையில்லையென்பதும்
கவிதைகளின் மொழியாகத்தான் இருக்கின்றது.

#நட்புடன்... # உங்கள்........கி.ஈஸ்வரன்

நியமான உண்மைBoy : Heyஎன்ன கல்யாணம்பண்ணிக்குரியா ??Girl : எனக்குஉன்ன பிடிக்கலையேBoy : இப்போ நடக்குற கல்யாணம்எல்லாம் ரெண்ட...
15/01/2017

நியமான உண்மை

Boy : Hey
என்ன கல்யாணம்
பண்ணிக்குரியா ??
Girl : எனக்கு
உன்ன பிடிக்கலையே
Boy : இப்போ நடக்குற கல்யாணம்
எல்லாம் ரெண்டு பேருக்கும்
புடிச்சா நடக்குது...
Adjust..பண்ணி கட்டிக்கோ Plzzz
Girl : Hey comedy
பண்றியா ?????
Boy : காதல்ல யாராவது comedy
பண்ணுவாங்கள ???
சரி.. எனக்கும் ஒரு பொண்ண One side
ah love பண்ணனும்ன்னு ரொம்ப
நாலா ஆசை...
Plz plz என் love ah இப்போ Accept
பண்ணாத....
Girl : அப்படி என்ன இருக்கு இந்த
one side love.ல ???
Boy : என்ன இருக்காவா ???
* Double side love
பண்ணா கட்டி பிடிச்சுட்டு இருந்தா கூட
எந்த feel um வரது but one side ah
love பண்ண உன்னோட சுண்டு விரல்
உனக்கே தெரியாம என்ன
சீண்டிடு போனா அது ஒரு மாசத்துக்கு மறக்காது
* double Side ah
love பண்ண ஒரு நாளைக்கு ஆயிரம்
முறை I Love
u சொல்லணும்...
but one side love ல
நீ ஒரு முறை I
Hate u சொன்னாலும்
அவ்ளோ சுகமா இருக்கும்...
* பக்கத்துல உக்காந்து பேசினா கூட
வராத feel உன்ன bus stand
ஓரமா உனக்கே தெரியாம பார்க்கிறதுல
வரும்
* உன்ன பார்க்குறதுக்காக ஒரு நாள்
முழுக்கவும் Wait பண்ணலாம்
ன்னு தோணும்.
எவ்ளோ தான் Wait பண்ணினாலும் உன்
மேல கோவமே வராது..Love தான்
அதிகரிக்குமே தவிர
ஒரு நாளும்
குறையாது ஆனா இது Double side
Love ல இல்ல....
* ஒரு நாளைக்கு
எத்தன phone
எத்தன msg வந்தாலும் உன் number ல
இருந்து ஒரு missed call ஒரு empty
msg வராதான்னு wait
பண்ணி ஏங்குறது எவ்ளோ சுகம்ன்னு தெரியும்
aa?
இன்னும் நெறைய இருக்கு எனக்கு one
side love தான் வேணும்....
Girl : நான் இப்பவே உனக்கு addict
ஆகிட்டேன் da ok Ur wish
போதும்ங்குற அளவுக்கு one side ah
love பண்ணு.. But சீக்கிரம் aa
என்கிட்டே சொல்லு.... உன்ன Love
பண்ண எனக்கும் ரொம்ப
ஆசையா இருக்கு....
# பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட்
பண்ணுங்கள் #

Address

Magudanchavadi
Salem
637103

Alerts

Be the first to know and let us send you an email when காதல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to காதல்:

Share