Mind relief inner meditation

Mind relief inner meditation We help to tension -relief mind -free and relaxation, through meditation, all genders , weelend classes and regular classes available. cal919841525108

சாதனைப்பெண் கவிதா
08/03/2026

சாதனைப்பெண் கவிதா

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

தலைவர் கலைஞர் என் தந்தை மீது அளவுகடந்த அன்பு வச்சுருந்தாருங்க ❤️
25/08/2025

தலைவர் கலைஞர் என் தந்தை மீது அளவுகடந்த அன்பு வச்சுருந்தாருங்க ❤️

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் இன்று
10/08/2025

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் இன்று

தலைவரின் நினைவு தினத்தில்  என் தந்தையும் நினைவுக்குள் வந்து விடுகிறார் காரணம் தலைவர் என் தந்தை மீது வைத்திருந்த அன்பும் ...
07/08/2025

தலைவரின் நினைவு தினத்தில் என் தந்தையும் நினைவுக்குள் வந்து விடுகிறார் காரணம் தலைவர் என் தந்தை மீது வைத்திருந்த அன்பும் என் தந்தை தலைவர் மீது வைத்திருந்த பேரன்பும் அளவிட முடியாதது.

என் தந்தை திராவிட முன்னேற்ற கழகத்தின் மிக ஆரம்பகட்ட உறுப்பினர்(1957_இல் உறுப்பினர் எண்_90114) ஏதோ ஒன்றை வீட்டில் தேடிக் கொண்டிருந்த பொழுது இந்த உறுப்பினர் அட்டை என் கையில் கிடைத்தது அதுவும் இன்று தலைவரின் நினைவு தினம் வேறு மனம் உடனே பின்னோக்கி மதுரையை சுற்ற ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது தான் சென்னை திரும்பினேன் நினைவு சுற்றலுக்கு எந்த( E pass) யும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

என் நினைவு சுற்றலில் தலைவரை சந்தித்த நொடிப்பொழுது கடந்த அனுபவத்தை இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்வு கொள்கிறேன்

சிறுவயதில் தலைவரை வெகு தொலைவிலும் மிக அருகிலும் பார்த்து ரசித்திருக்கிறேன் மதுரை மண்ணில் இரவ முழுவதும் கண்விழித்து அதிகாலை அவர் அவர் பேசும்" என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என்ற வார்த்தைக்காக தவமிருந்திருக்கிறேன். தமிழின் ஆற்றலையும் சக்தியையும் உணர்ந்த தருணம் அன்று.

தலைவர் மதுரை வரும்போதெல்லாம் என் தந்தை கலைஞரை சென்று பார்ப்பது பல வருட வழக்கம்( என் தந்தை காவல்துறையில் பணியாற்றி கொண்டிருந்ததால் ஒரு கட்சி தலைவரை பார்ப்பது என்பது எளிதான காரியமல்ல) ஆனாலும் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தலைவரை சென்று சந்திப்பதை அவர் ஒருபோதும் நிறுத்தவில்லை


என் தந்தை தலைவரை சந்திக்கும்போதெல்லாம் கட்சி வளர்ச்சி நிதியாக ரூபாய்10 யை தலைவர் கையில் கொடுப்பார் அதை வாங்கி தன் பையில் வைத்து விட்டு புன்னகையால் என் தந்தையை வழியனுப்பி வைப்பார் அதுமட்டுமல்ல தலைவர் சென்னை வந்தவுடன் தி.க. முத்தையா மதுரை கழக வளர்ச்சி நிதி ரூபாய் .10 என்று முரசொலியில் வந்துவிடும் இந்த வளர்ச்சி நிதியை தலைவர் மதுரை வரும்போதெல்லாம் என் தந்தை 30 வருடங்களுக்கு மேலாகவே கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்

ஒரு முறை தலைவர் மதுரை வந்திருந்த பொழுது என்னையும் என் சகோதரர்களையும் தலைவரைப் பார்க்க என் தந்தை கூட்டி சென்றார் தலைவர் மதுரை வரும்போதெல்லாம் பாண்டியன் ஹோட்டலில்தான் தங்குவார் அது ஒரு மத்தியான வேளை தலைவர் உணவு அருந்தி விட்டு ஓய்வெடுக்கும் நேரம் அப்பொழுது தலைவருக்கு மெய்க்காப்பாளராக இருந்த திருமங்கலம் கோபால் அவர்கள் எங்களை உள்ளே விட மறுத்து அவருக்கும் என் தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது
கதவின் இடுக்கின் வழியாக தலைவரின் காதில் விழ உள்ளேயிருந்து ஒரு குரல் அங்கே என்ன சத்தம் என்ற வெங்கலக் குரல் எங்களை உள்ளே அழைத்துச் சென்றது .

முதல்முறையாக அன்றுதான் நான் தலைவரை மிக அருகில் பார்த்தேன் கட்டம் போட்ட லுங்கி கைலி கட்டியிருந்தார் புன்னகை மன்னன் கமல் போட்டிருந்தது போல் கை வைக்காத வெள்ளை பனியன் அணிந்திருந்தார்

என்னய்யா நான் சாப்பிட்டதுக்கு அப்புறம் யாரையும் பார்க்க மாட்டேன்னு உனக்கு தெரியாதா என்று சொல்லிவிட்டு சரி சரி சொல்லு என்ன விஷயம் என்று கேட்டார்

ஒன்னுமில்லிங்க பிள்ளைங்க உங்களை பார்க்க ஆசை பட்டாங்க அதுதான் கூட்டிட்டு வந்தேன் என்றார்

அப்படியா என்று எங்களைப் பார்த்தார் உடனே என் தந்தை வரிசையாக எங்கள் பெயர் சொல்லி தலைவருக்கு அறிமுகப்படுத்தினார் அவர் தன் இருகரங்களையும் கூப்பி எங்களுக்கு வணக்கம் வைத்தார்.

தலைவரிடம் என் தந்தை ஐயா எனக்கு மொத்தம் ஆறு பிள்ளைங்க என்றார்

உடனே எங்களையெல்லாம் திரும்பி பார்த்துக்கொண்டே என் தந்தையிடம் உன் ஆற்றலை பாராட்டுகிறேன் என்றார்

தலைவரின் முகத்தில் ஒரு புதுமையான சிரிப்பையும் என் தந்தையின் முகத்தில் ஒரு வெட்கத்தையும் பார்த்தேன் .

தலைவருக்கும் என் தந்தைக்குமான உறவு என்பது ஒரு தலைவருக்கும் அடிமட்ட தொண்டனுக்குமான காதல் என்று தான் சொல்ல வேண்டும்

தலைவரே உங்களை நினைவு கூறுவதில் என் தந்தையும் உங்களுக்குள் ஒளிந்திருக்கிறார் என்பதால் நான் பெரும் மகிழ்வு கொள்கிறேன்

பின்குறிப்பு( என் தந்தை போட்டோ எடுத்துக் கொள்வதில் விருப்பம் இல்லாதவரால் கடைசிவரை என் தந்தை தலைவருடன் போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை .மேலும் எங்களை தலைவரை பார்க்கவிடாமல் தடுத்த தலைவரின் மெய்க்காப்பாளர் திருமங்கலம் கோபால் அவர்கள் தலைவர் என் தந்தை மீது வைத்திருந்த அன்பில் வியந்து பிற்காலத்தில் என் தந்தையின் நெருங்கிய நண்பராகவிட்டார்.

01/07/2025

Address

Ramapuram

Telephone

+919841525108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mind relief inner meditation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share