Namma Ooru Namma Mannu Madurai

Namma Ooru Namma Mannu Madurai மதுரை நகரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள

அருமையான யோசனை 😍🙏மதுரையின் புகழும் வெளிப்படும், தேவையற்ற போஸ்டர்கள் இடம்பெறாதுஇடம் - ஊமச்சிகுளம் பாலம்
08/11/2020

அருமையான யோசனை 😍🙏

மதுரையின் புகழும் வெளிப்படும், தேவையற்ற போஸ்டர்கள் இடம்பெறாது
இடம் - ஊமச்சிகுளம் பாலம்

60 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெறும் சங்ககாலக் கூடழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம்மதுரையில் 60 ஆண்களுக்குப் பிறகு ...
21/08/2020

60 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெறும் சங்ககாலக் கூடழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம்

மதுரையில் 60 ஆண்களுக்குப் பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு டவுன்ஹால் ரோடு கூடழகர் பெருமாள் கோயில் தெப்பகுளம் மீட்கப்படுகிறது.

மதுரை புகழ் விசிறி தாத்தாக்கு இன்று பிறந்த நாள் 😍 மதுரை மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👍🙏மதுரை மக்களின் அன்பு என்றைக்கும் ...
19/08/2020

மதுரை புகழ் விசிறி தாத்தாக்கு இன்று பிறந்த நாள் 😍 மதுரை மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👍🙏

மதுரை மக்களின் அன்பு என்றைக்கும் உங்களிடத்தில் இருக்கும் 😍

நம்ம மதுரைல விரைவில் வருகிறது ! Stay tuned for more offers and discounts.😉PS: keep your whatsapp ready 😋
27/07/2020

நம்ம மதுரைல விரைவில் வருகிறது ! Stay tuned for more offers and discounts.😉

PS: keep your whatsapp ready 😋

26/06/2020
மதுரை ஒத்தக்கடை யானைமலை
06/06/2020

மதுரை ஒத்தக்கடை யானைமலை

29/05/2020

மதுரை வந்த வைகை தாய் ...
தெப்பக்குளத்தில் சேகரிக்கப்படுகிறது..

Warning ⚠️
28/05/2020

Warning ⚠️

அதிகப்படியான ரசாயணக் கழிவுகளால் நுரை பொங்கிய திருப்பரங்குன்றம் கண்மாய் - கண்மாய் மீன்கள் செத்து மடிந்தன.. 😦😩கொரோனா மாதிர...
16/05/2020

அதிகப்படியான ரசாயணக் கழிவுகளால் நுரை பொங்கிய திருப்பரங்குன்றம் கண்மாய் - கண்மாய் மீன்கள் செத்து மடிந்தன.. 😦😩

கொரோனா மாதிரி எத்தன வைரஸ் வந்தாலும் உங்கள திருத்தவே முடியாது வெண்ணைய்களா.. 😠😠

படம்: WishToHelp
16 மே 2020

மதுரை.. மீனாட்சி அம்மன் கோயிலின் ஒரு பக்க அழகு !!😍😲😲
12/05/2020

மதுரை.. மீனாட்சி அம்மன் கோயிலின் ஒரு பக்க அழகு !!😍😲😲

மதுரையில் நாளை முதல் (11.05.2020) இயங்க உள்ள பணிகள் குறித்தும், கடைகள் திறக்கப்படும் நேரங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்...
10/05/2020

மதுரையில் நாளை முதல் (11.05.2020) இயங்க உள்ள பணிகள் குறித்தும், கடைகள் திறக்கப்படும் நேரங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள அறிவிப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன்கீழ், ஊரடங்கு உத்தரவு 24.03.2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர) தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி கீழ்க்காணும் பணிகள் நாளை(11.05.2020) முதல் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

1) அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

2) பெட்ரோல் பம்புகள் காலை 6.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

3) தேசியமற்றும் மாநில நெடுஞ்சாலைகளில உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படஅனுமதிக்கப்படுகிறது.

4) அனைத்து நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் 10.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கீழ்க்கண்ட பிற தனிக்கடைகள் 10.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

1)டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
2)பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
3)உணவகங்கள் (பார்சல் மட்டும்)
4)பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
5)கட்டுமானப் பொருடகள் விற்கும் கடைகள்
6)சிமெண்ட், ஹார்டுவேர்,சானிடரிவேர் விற்கும் கடைகள்
7)மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
8)மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
9)கணினி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
10)வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டுஉபயோகபொருட்கள் விற்கும் கடைகள்
11)மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
12)கண் கண்ணாடி மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
13)சிறிய நகைக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை)
14)சிறிய ஜவுளிக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரகபகுதிகளில் மட்டும்
15)மிக்ஸி,கிரைண்டர் பழுதுநீக்கும்கடைகள்
16)டிவி விற்பனை மற்றும் டிவி பழுதுநீக்கும் கடைகள்
17)பெட்டிகடைகள்
18)பர்னிச்சர் கடைகள்
19)சாலையோர தள்ளுவண்டி கடைகள்
20)உலர் சலவையகங்கள்
21)கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
22)லாரி புக்கிங் சர்வீஸ்
23)ஜெராக்ஸ் கடைகள்
24)இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
25)இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுதுநீக்கும் கடைகள்
26)நாட்டு மருந்து விற்பனை கடைகள்
27)விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சிமருந்து விற்பனை கடைகள்
28)டைல்ஸ் கடைகள்
29)பெயிண்ட் கடைகள்
30)எலக்ட்ரிகல் கடைகள்
31)ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனைகடைகள்
32)நர்சரிகார்டன்கள்
33)மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
34)மரம் அறுக்கும் கடைகள்.

மேலும் இவை தவிர்த்து மாவட்ட பேரிடர் மேலாண்மைகுழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கூடுதலாக அனுமதிக்கப்படும் வணிக நிறுவனங்கள் ஃ தொழில்கள் பின்வருமாறு.

1.நோட்டுப்புத்தக உற்பத்தி நிறுவனம்.
2.போர்வெல் இயந்திர செயல்பாடு.
3.பேப்பர் மொத்த வணிகம்.
4.பாத்திரக்கடை.
5.புத்தகக்கடை.
6.போட்டோ ஸ்டுடியோ.
7.எழுது பொருள் விற்பனைக்கடை.

முடிதிருத்தும் நிலையங்கள்(சலூன்கள்), ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்;ககூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்சொன்ன கடைகள், நிறுவனங்களில் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாககடை பிடிக்கவேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள், குளிர்சாதனவசதி இருந்தால் அதை இயக்காமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனிநபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

மீனாக்ஷி சுந்தரேசர் கல்யாணம்போஜனம்மீனாக்ஷி சுந்தரேசர் கல்யாணத்தில் யார் யார் வந்திருந்தார்கள், என்ன சாப்பாடு பரிமாறினார்...
04/05/2020

மீனாக்ஷி சுந்தரேசர் கல்யாணம்

போஜனம்

மீனாக்ஷி சுந்தரேசர் கல்யாணத்தில் யார் யார் வந்திருந்தார்கள், என்ன சாப்பாடு பரிமாறினார்கள் என்ற பெரிய பட்டியலோடு ஒரு பாடல் இருக்கிறது அது தான் இந்த பகிர்வில். பாடலை முடிக்கும்போது, இது எல்லாம் சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் உங்களுக்கு வருவதை நிச்சயமாய் தடுக்க முடியாது! திருப்தியாய் ஒரு கல்யாண போஜனம் செய்ய வாருங்கள்!

பாடல் வரிகள்:

போஜனம் செய்ய வாருங்கள்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்

வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து
மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்
நாட்டிய கூடம் பச்ச மரகதம்
பதித்த செவர்களும் பசும்பொன் தரையில்
பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்
நட்ட நடுவே குத்து விளக்கேற்றி
தூண்கள் தோறும் தூண்டா விளக்கும்
சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய
பந்திபந்தியாய் பாயை விரித்து
உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்
தலைவாழை இலை போட்டு தப்பாமல் இடம்பண்ணி
போஜனம் செய்ய வாருங்கள்

மும்மூர்த்திகளுடன் முனிவர்கள் தேவர்கள்
யக்ஷகின்னரர் கந்தர்வர்களும்
அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ
அந்தணர்களும் முன்பந்தியிலே
அணிஅணியாக அவரவர் இடத்தில்
அழகாய் இருந்தார்
அகல்யை திரௌபதி சீதை தாரை
மண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி
கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே
முத்திரை மோதிரம் விரலில் கொண்டு
பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து
பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்
போஜனம் செய்ய வாருங்கள்
மாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி
இரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி
விதம்விதமாகவே வற்றல் அப்பளம்
பாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு
சிலாபிஞ்சு கறியும் பலாபிஞ்சு கறியும்
பாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல்
வாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்
குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென
மொத்த பருப்பும் புத்துருக்கு நெய்யும்
போஜனம் செய்ய வாருங்கள்

பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்
வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்
வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்
மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்
பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்
வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்
குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்
சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்
சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்
அக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்
என்னென்ன சுண்டல் வகையான வடை
சுமசாலா வடை வெங்காய வடை
சொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணை வடை
தயிர் வடையும் பால் போளிகளும்
அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்
சேமியா ஹல்வா ஜிலேபி லட்டு
முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு
ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு
பேஷா இருக்கும் பேசரி லாடு
குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு
பளபளவெனருக்கும் பயத்தமா லாடு
மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து
போஜனம் செய்ய வாருங்கள்

பொரிகனி வர்கங்கள் பச்சை நாடாம்பழம்
தேன்கதளி பழம் செவ்வாழை பழம்
நேந்திரம் பழத்துடன் மாம்பழ தினுசுகள்
பலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்
ஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து
பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்
ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்
வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்
பாவக்காய் ஊறுகாய் வேப்பிலைக்கட்டி
கொத்தமல்லிச் சட்னி மிளகாய்ப் பொடியுடன்
மிளகாய் பச்சடி
பந்தியில் பரிமாறினார்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
பார்த்துப் பரிமாறினார்…

Address

Meenakshi Amman Temple
Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Ooru Namma Mannu Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Namma Ooru Namma Mannu Madurai:

Share