04/10/2023
ஒரு பிரண்ட்ஸ் கேங் னா...
நேரங்காலம் தெரியாம டாப் அடிக்க வசதியா, ஒரு சொந்த கடை யோ, சொந்த வீடோ இருக்க பையன்,
ஒரு ஜிம் க்கு போற ப்ரண்ட்,
செல், லேப்டாப் பத்தி தெரிஞ்ச ஒரு பிரண்ட்,
ஸ்நாக்ஸ் எடுத்துட்டு/வாங்கிட்டு வர பிரண்ட் ஒருத்தன்,
ஒரு சரக்கு கை, அப்பறம் இங்க போலாமா அங்க போலாமா னு எதாவது டூர் ஐடியா கொடுக்குற பிரண்ட், இந்த திருட்டு மூஞ்சி கும்பல்ல, நீட்டா வேலைக்கு போய்ட்டு நேரா டாப் அடிக்க்குற இடத்துக்கு வர பிரண்ட்,
இவனுக கூட,இடைல இடைல வீ்ட்ல திட்டுவானுக டா/பொண்டாட்டி திட்டுவாடா கிளம்புறேனு 10 நிமிசத்துக்கு ஒரு தடவ பர்மிசன் கேட்டுட்டு இருக்க ஒரு பிரண்ட், பைக்,கார் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுட்டு எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒருத்தன்... இதுக்கு இடைல பொம்பள சோக்கு ஒருத்தன்னு இந்த கலவை எல்லார் பிரண்ட்ஸ் கேங்லயும் கண்டிப்பா இருக்கும்...
இவனுகளுக்குள்ள ஒருத்தன மாத்தி ஒருத்தன் கலாய்ச்சுகிட்டு, ஒருத்தனுக்கு தெரிஞ்சத எல்லாத்துக்கும் சொல்லிட்டு, அதை எல்லாரும் கேட்டு அதுக்கு இடைல கலாய்ச்சுட்டு, அந்த டாபிக்குள்ள இருந்து இன்னொருத்தன கலாய்க்க டாபிக் எடுத்து கலாய்ச்சுட்டு.. இப்படி டெக்னாலஜி, சினிமா, சரக்கு, டூர், கலாய் னு சந்தோசமா எவ்ளோ நேரம்னாலும் பேசுவானுக..
அவன் அவனுக்கு தனிப்பட்ட வாழ்க்கைல, தொழில் ரீதியா ஆயிரம் மண்டக்குடச்சல் இருக்கும்.. அந்த 1-2 மணி நேரம் எத பத்தியும் கவலப்படாம, அவனுகளுக்குள்ள ஸ்டேட்டஸ், Ego னு எந்த ஒரு விசயத்தையும் உள்ள விடாம ஜாலியா ஒருத்தன ஒருத்தன் கலாய்ச்சு, சிரிச்சு பேசிட்டு போவானுக..
வாழ்க்கை கொஞ்ச வருசத்துல இவனுகள எல்லாம் பிச்சு ஆளுக்கு ஒரு திசையா தூக்கி போட்ரும்..அவன் அவன் குடும்பத்தை பாக்க, பொருளாதார தேவைக்கு னு ஓட போய்ருவானுக.. ஆனாலும் இந்த மாதிரி பிரண்ட்ஸ் கேங் எல்லா காலத்துலயும் இருக்க தான் செய்யுது..
எங்கயாவது ஒரு டீ கடை லயோ, சலூன் கடைலயோ இந்த மாதிரி பிரண்ட்ஸ பாக்கும் போது நம்மளையும் அந்த இடத்துல வச்சு பாத்துக்குது மனசு..