karaikalindia.com

karaikalindia.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from karaikalindia.com, Arts and entertainment, karaikal.

26/11/2024

26.11.24 இரவு 9:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் 300 மிமீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கக்கூடிய #இலங்கை யின் #அம்பாறை மாவட்டத்தை சார்ந்த நண்பர்கள் யாராவது இருந்தால் அவர்கள் சற்று பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்... ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சற்று முன்னேறி உங்களுக்கு வடக்கே இருக்க கூடிய கடல் பகுதிகளுக்கு கிழக்கே நிலை கொண்டிருக்கிறது... இனி அந்த சுழற்சியால் அம்பாறைக்கு தொடர் கனமழை வாய்ப்புகள் கிடையாது.. ஆனபொழுதும் நாளை சில இடங்களில் மழையானது பதிவாகலாம் ஆனால் அச்சப்படத் தேவையில்லை... இந்த நிலை #யாழ்ப்பாணம் மாகாணத்துக்கு பொருந்தாது... இனிதான் அங்கு தொடர் கனமழைக்கு வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கிறது...

#நாகப்பட்டினம் AWS இல் இதுவரையில் 128 மிமீ அளவு மழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்க வந்திருக்கிறது... அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களிலும் #நாகப்பட்டினம் , #காரைக்கால் , #வேதாரண்யம் , #சீர்காழி , #தரங்கம்பாடி , #பூம்புகார் , #திருவாரூர் , #முத்துப்பேட்டை சுற்றுவட்ட பகுதிகள் உட்பட டெல்டாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இடங்களில் கன மழை தொடரும்... நள்ளிரவு/அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரங்களில் மழையின் தீவிரத் தன்மை மென்மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.. நாளையும் டெல்டாவில் மழை உண்டு.. இது தொடர்பாக ஏற்கனவே நிறைய தகவல்களை போதும் போதும் என்கிற அளவிற்கு நாம் பகிர்ந்து விட்டோம்...

#பரங்கிப்பேட்டை , #கடலூர் , #புதுச்சேரி , #சிதம்பரம் , #பண்ருட்டி சுற்றுவட்ட பகுதிகள் உட்பட கடலூர் , விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களிலும் ஆங்காங்கே கனமழை வாய்ப்புகள் தாராளமாக உள்ளது.. #சென்னை மாநகர் மற்றும் அதனுடைய புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டுவிட்டு வலுவான மழை பதிவாகலாம்.. #சென்னை - #புதுச்சேரி இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளுக்கும் புறவழிச்சாலை பகுதிகளுக்கும் கனமழை சாத்திய கூறுகள் அதிகம் உண்டு...

இதுவரையில் மழை பதிவாகி இருக்கக்கூடிய சில பகுதிகளில் நிலவரம் நாகப்பட்டினம் AWS பகுதியை தவிர்த்து
===============
திருவாரூர் AWS - 83 மிமீ
கடலூர் - 72 மிமீ
காரைக்கால் - 60 மிமீ
#சிதம்பரம் AWS - 58 மிமீ
#அதிராம்பட்டினம் - 59 மிமீ
#மீனம்பாக்கம் - 46 மிமீ
#நுங்கம்பாக்கம் - 46 மிமீ
புதுச்சேரி - 34 மிமீ

சுழற்சி நகர்வுகள் மற்றும் வானிலை தொடர்பாக மேலும் பல தகவல்களை இரவு நேர குரல் பதிவில் உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்...

30/05/2024

30.5.24 இது உங்கள் " #புதுச்சேரி_வெதர்மன்" #இம்மானுவேல் வழங்கும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது தொடர்பான அறிக்கை
========================
👉ஒருவழியாக தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டு விட்டது.

👉 #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட #திருவள்ளூர் , #செங்கல்பட்டு , #காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலவி வந்த வெப்ப அலை ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு மெல்ல மெல்ல தனிய தொடங்கும் மூன்றாம் தேதிக்கு பிறகு வரக்கூடிய நாட்களில் இயல்பான வெப்பநிலை நிலவக்கூடும்.

👉மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இடங்களில் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் மழை வாய்ப்புகள் உண்டு.

👉தமிழக வட உள் மாவட்ட பகுதிகள் உட்பட வடமேற்கு உள் மாவட்ட பகுதிகள் உட்பட உட் பகுதிகளிலும் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நண்பகலுக்கு பின்னர் பிற்பகல் , மாலை மற்றும் இரவு நேரங்களில் அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு.

இந்த காலகட்டத்தில் அதிக தகவல்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யும் பொழுது அதனை முழுவதுமாக படிப்பவர்களின் எண்ணிக்கையும் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது.அதனால் தான் பெரிய அறிக்கையாக பதிவிடாமல் மேலோட்டமாக பதிவிட்டு வருகிறேன். உங்களுக்கு சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கமெண்ட் செய்யுங்கள் உங்களுடைய கேள்விகளுக்கு குரல் பதிவுகளில் விளக்கங்கள் வழங்குகிறேன்.

தொடர்ந்து நமது பக்கத்துடன் இணைந்திருங்கள்... என்றும் உங்களுடன் உங்கள் #புதுச்சேரி_வெதர்மேன் #இம்மானுவேல்🙏

14/08/2022

முரசறைவாய் !
அனைவருக்கும் எனது முன்கூட்டிய விடுதலை திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏

05/07/2022
18/05/2022

18.5.22 கடந்த 24 மணி நேரத்தில் 4 பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கிறது.

அடுத்த 24 மணி நேரத்திலும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதன் தெற்கு கடலோர மாவட்ட பகுதிகள். கேரள மாநில வடக்கு கடலோர பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பதிவாகலாம்.

அடுத்த 24 மணிநேரத்தில் பெங்களூர் சுற்றுவட்டார பகுதிகள் மைசூர் சுற்றுவட்டார பகுதிகளில் தரமான சிறப்பான சம்பவங்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கிறது.

தமிழகத்தில் இன்றும் கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் வேலூர் மாவட்ட பகுதிகளிலும் மழை பதிவாகலாம் வட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது இவை தவிர்த்து மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவு ஆகலாம். அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவுல நாம் தெளிவாக விவாதிக்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=====================
விரிஞ்சிபுரம் KVK ARG (வேலூர்) 144.5மிமீ

சங்கரிதுர்க் (சேலம்) 133மிமீ

பள்ளிகொண்டா (வேலூர்) 112மிமீ

ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 100மிமீ

ஓசூர் (கிருஷ்ணகிரி) 88மிமீ

அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 74மிமீ

எடப்பாடி (சேலம்) 72மிமீ

ஒகேனக்கல் (தர்மபுரி) 62மிமீ

ஓசூர் AWS (கிருஷ்ணகிரி) 56மிமீ

திருப்பட்டூர் PTO (திருப்பத்தூர்) 53.4மிமீ

ஓமலூர் (சேலம்), ஏற்காடு (சேலம்) 53மிமீ

தம்மம்பட்டி (சேலம்) 50மிமீ

தேவாலா (நீலகிரி),பில்லூர் (நீலகிரி) 47மிமீ

வரட்டுபள்ளம் (ஈரோடு) 46.2மிமீ

மாக்கினாம்பட்டி (திருப்பூர்) 46மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 44.2மிமீ

ஆலங்காயம் (திருப்பத்தூர்), கீழ் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 44மிமீ

சோழவரம் (திருவள்ளூர்) 42மிமீ

சந்தியூர் KVK ARG (சேலம்) 41மிமீ

சேலம் (சேலம்) 39.2மிமீ

பாலமோர் (கன்னியாகுமரி) 36.4மிமீ

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), கொடுமுடி (ஈரோடு) 32மிமீ

பென்னாகரம் (தர்மபுரி) 31மிமீ

காரியாக்கோவில் அணை (சேலம்), பூந்தமல்லி (திருவள்ளூர்),தனிஷ்பேட் (சேலம்) 30மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி) 28.4மிமீ

முல்லாங்கினாவிளை (கன்னியாகுமரி) 27.4மிமீ

களியல் (கன்னியாகுமரி) 26.2மிமீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), பொன்னேரி (திருவள்ளூர்) 26மிமீ

தளி (கிருஷ்ணகிரி) 25மிமீ

அம்மாப்பேட்டை (ஈரோடு) 24.8மிமீ

குமாரபாளையம் (நாமக்கல்) 24.4மிமீ

ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) 24மிமீ

PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்),பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 23.2மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 22.7மிமீ

TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), பொன்னை அணை (வேலூர்), செங்குன்றம் (திருவள்ளூர்),கோழிபோர்விளை (கன்னியாகுமரி), மொடக்குறிச்சி (ஈரோடு) 21மிமீ

சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 20.2மிமீ

பஞ்சபட்டி (கரூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்),சுருளக்கோடு (கன்னியாகுமரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), காட்பாடி (வேலூர்), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்), 20மிமீ

லால்குடி (திருச்சி) 19.4மிமீ

சத்தியமங்கலம் (ஈரோடு), உசிலம்பட்டி (மதுரை),அடையாமடை (கன்னியாகுமரி), ஈரோடு (ஈரோடு) 19மிமீ

செங்கம் (திருவண்ணாமலை), காங்கேயம் (திருப்பூர்) 18.8மிமீ

தக்கலை (கன்னியாகுமரி) 18.3மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 18மிமீ

சிவலோகம் (கன்னியாகுமரி) 17.4மிமீ

மூலனூர் (திருப்பூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) 17மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி),ஆனைகிடங்கு (கன்னியாகுமரி) 16.4மிமீ

VCS MILL அம்முண்டி (வேலூர்) 16.2மிமீ

வாணியம்பாடி (திருப்பத்தூர்), மேல் ஆலத்தூர் (வேலூர்), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 16மிமீ

வேலூர் (வேலூர்) 15.1மிமீ

கொப்பம்பட்டி‌(திருச்சி), கொடிவேரி அணை (ஈரோடு), குடியாத்தம் (வேலூர்) 15மிமீ

அப்பர் பவானி (நீலகிரி), குன்னூர் (நீலகிரி) 14மிமீ

வால்பாறை Pap (கோயம்புத்தூர்),ஜீ பஜார் (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 13மிமீ

மணப்பாறை (திருச்சி) 12.8மிமீ

கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 12.7மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி), குன்னூர் PTO (நீலகிரி) 12.2மிமீ

செங்கல்பட்டு (செங்கல்பட்டு), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),கெத்தி (நீலகிரி),தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 12மிமீ

இரணியல் (கன்னியாகுமரி) 11.2மிமீ

பவானி (ஈரோடு), KCS MILL-1 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 11மிமீ

ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 10.6மிமீ

குருந்தான்கோடு (கன்னியாகுமரி) 10.4மிமீ

சேரங்கோடு (நீலகிரி) 10.2மிமீ

திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 10.1மிமீ

தர்மபுரி (தர்மபுரி),மணக்கடவூ (கோயம்புத்தூர்),அடார் எஸ்டேட் (நீலகிரி),பார்வுட் (நீலகிரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), உதகமண்டலம் AWS (நீலகிரி) 10மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 9.8மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி), உதகமண்டலம் (நீலகிரி) 9.6மிமீ

பாலக்கோடு (தர்மபுரி) 9.4மிமீ

ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), பல்லடம் (திருப்பூர்), திருச்செங்கோடு (நாமக்கல்), அரூர் (தர்மபுரி) 9மிமீ

அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 8.6மிமீ

பாப்பாரப்பட்டி KVK ARG (தர்மபுரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்ண) 8.5மிமீ

பெரியார் (தேனி) 8.4மிமீ

KCS MILL-2 மோரப்பாளையம் (கள்ளக்குறிச்சி), ஆவடி (திருவள்ளூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), மறநடஹள்ளி (தர்மபுரி),காட்டுபாக்கம் KVK ARG (காஞ்சிபுரம்),பீத்தாம்பட்டி (திருப்பூர்) 8மிமீ

கிளன்மோர்கன் (நீலகிரி) 7.4மிமீ

ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 7.2மிமீ

வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 7.1மிமீ

திருச்சி TOWN (திருச்சி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி),தேக்கடி (தேனி),ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), திருமூர்த்தி IB (திருப்பூர்) 7மிமீ

குளச்சல் (கன்னியாகுமரி) 6.8மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 6.2மிமீ

சூளகிரி (கிருஷ்ணகிரி),நடுவட்டம் (நீலகிரி), TNAU CRIஏதாபூர் (சேலம்),விரகனூர் (சேலம்) 6மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு) 5.8மிமீ

அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), தாளவாடி (ஈரோடு) 5.4மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி),மைலாடி (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி) 5.2மிமீ

தட்டயங்பேட்டை (திருச்சி),ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஆம்பூர் (திருப்பத்தூர்),பார்சன் வாலி (நீலகிரி), நம்பியூர் (ஈரோடு), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),சாணியுள்ளா (நீலகிரி) 5மிமீ

சிட்டாம்பட்டி (மதுரை) 4.6மிமீ

மதுரை AWS (மதுரை), அன்னூர் (கோயம்புத்தூர்) 4.5மிமீ

பரூர் (கிருஷ்ணகிரி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), பேரையூர் (மதுரை) 4.2மிமீ

DSCL கீழபாடி (கள்ளக்குறிச்சி),நவமலை (கோயம்புத்தூர்), அம்பத்தூர் (சென்னை), சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி), சேர்வலாறு (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி),முக்கூத்தி அணை (நீலகிரி), மங்கலாபுரம் (நாமக்கல்),காடம்பாறை (கோயம்புத்தூர்) 4மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 3.8மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி), மதுரை வடக்கு (மதுரை) 3.6மிமீ

சிருகமணி (திருச்சி) 3.5மிமீ

KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்),இடையாபட்டி (மதுரை), பெருந்துறை (ஈரோடு),ஆனைமடுவு அணை (சேலம்) 3மிமீ

ராசிபுரம் (நாமக்கல்), உத்தமபாளையம் (தேனி) 2.4மிமீ

கூடலூர் (தேனி), திண்டுக்கல் (திண்டுக்கல்), கவுந்தப்பாடி (ஈரோடு) 2.2மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்),புலிபட்டி (மதுரை), எம்ரேல்டு (நீலகிரி), சென்னிமலை (ஈரோடு),போர்முண்டு (நீலகிரி),நிலப்பாறை (கன்னியாகுமரி), கல்லட்டி (நீலகிரி), மேலூர் (மதுரை),பைகாரா (நீலகிரி),தள்ளாகுளம் (மதுரை),அவலாஞ்சி (நீலகிரி) 2மிமீ

ஆத்தூர் (சேலம்) 1.6மிமீ

பையூர் kvk ARG (கிருஷ்ணகிரி) 1.5மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு) 1.4மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி),கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 1.2மிமீ

தாராபுரம் (திருப்பூர்), கள்ளந்திரி (மதுரை),கெத்தை அணை (நீலகிரி), நத்தம் (திண்டுக்கல்),தனியாமங்கலம் (மதுரை) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏

15/05/2022

15.5.22 நேரம் இரவு 11 மணி புதுச்சேரி கடலூர் நண்பர்கள் மழையை அனுபவித்து இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். தற்சமயம் #தர்மபுரி மாவட்டம் #மரண்டஹல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பான தரமான தீவிரமான மழை மேகங்கள் பதிவாகிக் கொண்டிருக்கிறது. மேலும் #பாலக்கோடு ,தேன்கனிக்கோட்டை , கீழமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகிக் கொண்டிருக்கிறது.

ஓசூர் - கிருஷ்ணகிரி இடைப்பட்டு இருக்கக்கூடிய சாலையிலும் பரவலாகவே மழை மேகங்கள் பதிவாகிக் கொண்டிருக்கிறது.

இதுவரையில் மழை பதிவாகி இருக்கக்கூடிய சில பகுதிகளின் நிலவரங்கள்
=================
திரூர் - 59 mm
கலவை - 59 mm
விருத்தாச்சலம் KVK - 38 mm
புதுச்சேரி நகரம் - 36 mm
புதுச்சேரி AWS - 32 mm
கடலூர் மாநகர் - 29 mm
நெய்வேலி AWS - 28 mm
#உழவர்கரை நகராட்சி, புதுச்சேரி - 25 mm
திருவண்ணாமலை AWS - 20 mm
திருத்தணி AWS - 19 mm
விரிஞ்சிபுரம் KVK - 10 mm

07/05/2022

7.5.22 நேரம் இரவு 7:45 மணி தற்போது #எடப்பாடி , #எடகானசாலை , #மேட்டூர் , #இளம்பிள்ளை , #தாரமங்கலம் , #அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் உட்பட #சேலம் மாவட்ட மேற்கு பகுதிகளில் மிகப்பரவலாக தீவிரமான வலுவான மழை மேகங்கள் பதிவாகி கொண்டிருப்பதை நம்மால் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள இயலுகிறது நிச்சயமாக அந்த இடங்களில் செய்கை தரமாக இருக்கும் என்று உறுதியாகவே நம்பலாம்....

அடுத்த சில மணி நேரங்களில் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளிலும் தரமான செய்கைக்கு வாய்ப்புகள் உண்டு..........

24/04/2022
01/12/2021

1.12.21 அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் சுழற்சி அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்க உள்ளது.

👉மத்திய அந்தமான கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்.

👉டிசம்பர் 2 ஆம் தேதி ஆகிய நாளை அது வங்கக்கடல் பகுதிகளில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது புயல் என்கிற நிலையை அடையலாம்.

👉அவ்வாறு அது ஒரு புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அதற்கு ( #ஜாவத்)என்கிற பெயர் சூட்டப்படும்.

👉அதன் பின் அது மேலும் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கத்திய கலக்கத்தின் தாக்கத்தால் ஆந்திரம் அல்லது ஓடிசாவின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம்.

👉இதனால் தமிழகத்துக்கு நேரடியான பாதிப்புகள் மற்றும் மழை வாய்ப்புகள் கிடையாது.

வீண் வதந்திகளை நம்பி கவலைப்பட தேவையில்லை....

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட் பகுதிகள் , தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.

எந்தெந்த குறிப்பிட்ட இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது. தொடர்பாக பிற்பகல் நேர குரல் பதிவில் நாம் நமது Youtube பக்கத்தில் விவாதிக்கலாம் - http://www.youtube.com/c/tamilweathervlog

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
வந்தவாசி - 86 மி.மீ
சோளிங்கர் - 69 மி.மீ
திருவண்ணாமலை - 52 மி.மீ
வீரபாண்டி - 52 மி.மீ
கின்னக்கோரை - 52 மி.மீ
கொடைக்கானல் - 52 மி.மீ
காட்பாடி - 47 மி.மீ
ஆவடி - 47 மி.மீ
ஆர்.கே.பேட் - 46 மி.மீ
கொடைக்கானல் - 45 மி.மீ

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்

07/11/2021

7.11.2021 இன்றும் இரவு / நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கலாம் வங்கக்கடலில் நிலவும் சுழற்சி நீடிக்கும் வரையில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை தொடரும்.

காலை நேர நிகழ்நேர தகவல்களை குரல் பதிவில் கேட்டுக்கொள்ளுங்கள் - https://youtu.be/MHgoM7BY2jw

👉இரவு/நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மட்டும் அல்லாது #புதுச்சேரி , #கடலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு. #புதுச்சேரி - #சென்னை இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகள் கவனிக்கப்பட வேண்டியவை.

👉 #மதுரை , #சிவகங்கை , #தேனி மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திலும் மழை வாய்ப்புகள் உண்டு.

👉 #திண்டுக்கல் , #கோவை , #திருப்பூர் , #இராமநாதபுரம் , #விருதுநகர் , #தூத்துக்குடி , #நெல்லை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பதிவாகலாம்.

👉 #மயிலாடுதுறை , #காரைக்கால் , #நாகப்பட்டினம் உட்பட #டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை உண்டு குறிப்பாக நள்ளிரவு / அதிகாலை நேரங்களில் மழை பதிவாகலாம்.

விரிவான தகவல்களை பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=============
மயிலாப்பூர் (சென்னை) 241.2மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 214.6மிமீ

அம்பத்தூர் (சென்னை) 205மிமீ

வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 200.1மிமீ

அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 185மிமீ

MRC நகர் (சென்னை) 171மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை) 164மிமீ

நந்தனம் ARG (சென்னை) 157.5மிமீ

புழல் (திருவள்ளூர்) 146.5மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 140.2மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை) 130.3மிமீ

தரமணி ARG (சென்னை) 127.5மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 126.5மிமீ

சிருகமணி KVK ARG (திருச்சி) 123.5மிமீ

மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 113.9மிமீ

எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 112.6மிமீ

ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) 103.5மிமீ

எண்ணூர் AWS (சென்னை) 100மிமீ

திருவாடானை (இராமநாதபுரம்) 94.2மிமீ

சோழவரம் (திருவள்ளூர்) 93.2மிமீ

விராலிமலை (புதுக்கோட்டை) 92மிமீ

வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 90.2மிமீ

மோகனூர் (நாமக்கல்) 87மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 86மிமீ

காரைக்குடி (சிவகங்கை) 75மிமீ

மலையூர் (புதுக்கோட்டை) 74.6மிமீ

பேராவூரணி (தஞ்சாவூர்) 74மிமீ

தீரதண்டாதனம் (இராமநாதபுரம்) 73.2மிமீ

செங்குன்றம் (திருவள்ளூர்) ,திருப்பரங்குன்றம் (மதுரை) 73மிமீ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 72.2மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி),ராசிபுரம் (நாமக்கல்), பஞ்சபட்டி (கரூர்) 72மிமீ

தொண்டி (இராமநாதபுரம்), குளித்தலை (கரூர்), தோகைமலை (கரூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்) 70மிமீ

மணப்பாறை (திருச்சி) 68.6மிமீ

மைலம்பட்டி (கரூர்) 66மிமீ

தேவகோட்டை (சிவகங்கை) 65.6மிமீ

குடுமியான்மலை (புதுக்கோட்டை) 63.8மிமீ

கோவில்பட்டி (திருச்சி) 62.2மிமீ

வம்பன் (புதுக்கோட்டை), கவுந்தப்பாடி (ஈரோடு) 62மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),சூரங்குடி (தூத்துக்குடி) 60மிமீ

பரமக்குடி (இராமநாதபுரம்) 58.2மிமீ

சமயபுரம் (திருச்சி) 57.6மிமீ

பழவிடுதி (கரூர்) 57.4மிமீ

இலுப்பூர் (புதுக்கோட்டை) 56.2மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி) 55.8மிமீ

மாயனூர் (கரூர்), தாம்பரம் (செங்கல்பட்டு) 54மிமீ

சோழிங்கநல்லூர் (சென்னை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 52மிமீ

மீமிசல் (புதுக்கோட்டை) 51.4மிமீ

கரூர் (கரூர்), மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 51மிமீ

கரையூர் (புதுக்கோட்டை) 50.4மிமீ

மருங்காபுரி (திருச்சி) 50.4மிமீ

எருமைபட்டி (நாமக்கல்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 50மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் '

முழுமையான மழை அளவுகள் பட்டியலை www.tamilnaduweather.com இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள் - http://www.tamilnaduweather.com/2021/11/heavy-rain-lashes-chennai-and-its.html



.com

Address

Karaikal
609602

Alerts

Be the first to know and let us send you an email when karaikalindia.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to karaikalindia.com:

Share