Muganool Fm 91.5

Muganool Fm 91.5 News Media
Infotainment Media
Technology
Hear the entertainment,
Feel the FM

அவன பாக்க வந்து எதுக்கு செ*த்தாங்க னு தெரியாத 50பேர் க்கு  சட்ட மன்றதுல மௌன அஞ்சலி  பண்ணனும் தெரியுல ...பொண்டாட்டி புள்ள...
20/05/2026

அவன பாக்க வந்து எதுக்கு செ*த்தாங்க னு தெரியாத 50பேர் க்கு சட்ட மன்றதுல மௌன அஞ்சலி பண்ணனும் தெரியுல ...

பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு முன் வரிசையில ஒருத்திய கூட்டிட்டு வந்து உட்கார வச்சு பதவி எஏதுத்து புரியல

21 dalit M.L.A பொது தொகுதி நின்னு ஜெயிச்சாங்கனு பொய் பரபரப்புன்னது தெரியல

2crore சொத்து கணக்கு காமிச்சுட்டு கால்ல செருப்பு போடாத M.L.A னு பொய் சொன்னது தெரியல

பெரியார் திடல் போய் பெரியார் வாழ்கனு சொல்லிட்டு அடுத்த நாள் ஜோசியகாரனுக்கு Special ஆபிசர்னு posting போட்டது உருத்தல

இதல்லாம் எதிர்த்து கேள்வி கேட்டா..?

விஜய்ன்னா எதிர்க்கறத்து நிப்பாட்டுங்கனு முந்திட்டு வந்து 4 பக்கத்துக்கு write up போட்டு இருக்க

யாரா நீங்க எல்லாம் எந்த உலகத்திலயா வாழ்றீங்க.

தனியார் நிகழ்ச்சி வீடியோக்களில் ஒன்றைப் பார்த்தேன், அதில் ஒரு இளம்பெண்ணிடம், அவளுடைய பெற்றோருக்கு போன் செய்து "நான் உங்க...
20/05/2026

தனியார் நிகழ்ச்சி வீடியோக்களில் ஒன்றைப் பார்த்தேன், அதில் ஒரு இளம்பெண்ணிடம், அவளுடைய பெற்றோருக்கு போன் செய்து "நான் உங்களை நேசிக்கிறேன்" என்று சொல்லச் சொன்னார்கள்.

அவள் முதலில் தன் அம்மாவுக்கு போன் செய்தாள், அந்த அம்மா உடனடியாக, "நானும் உன்னை நேசிக்கிறேன்" என்று தன் அன்பை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாகப் பதிலளித்தார்.

பிறகு அவள் அப்பாவுக்கு போன் செய்தாள், அவள் "நான் உங்களை நேசிக்கிறேன்" என்று சொன்ன அந்த நொடியில் அப்பா ஒரு கணம் தயங்கினார்.

அவள், "அப்பா? நான் சொன்னது உங்களுக்குக் கேட்டதா?" என்று கேட்டாள்.

அந்த மனிதர், "நீ நலமாக இருக்கிறாயா? என்ன பிரச்சனை?" என்று கேட்டார். அவள், "நான் நலமாக இருக்கிறேன் அப்பா, நான் உங்களை நேசிக்கிறேன் என்று உங்களிடம் சொல்லத்தான் வந்தேன்" என்றாள்.

தந்தை வற்புறுத்திக் கேட்டார், “உனக்கு பிரச்சனை ஒன்றும் இல்லையே?”

அவரது குரலிலிருந்தே அவர் ஏற்கெனவே பதற்றமடைந்திருப்பதை உணர முடிந்தது. தன் மகள் ஏதோ ஆபத்தில் இருக்கிறாளோ என்று அவர் பயந்தார்.

உடனடியாக வந்து அவளை அழைத்துச் செல்வதற்காக, அவள் எங்கே இருக்கிறாள் என்று கேட்டார்.

அவரது மகள் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறாள் என்று தந்தையை நம்பவைக்க, அந்த நிகழ்ச்சியை உருவாக்குபவருக்குத்தான் நேரம் பிடித்தது.

அந்தப் பெண்ணின் மனநிலை மாறியது; அவள் தன் தந்தையை எவ்வளவு தூரம் புறக்கணித்துவிட்டாள் என்பதை அப்போதுதான் உணர்ந்தாள் என்பது தெரிந்தது.

ஏனென்றால், “நான் உன்னை நேசிக்கிறேன்” என்பது அம்மாவை உற்சாகப்படுத்திய அதே வேளையில், அது அவளுடைய அப்பாவைப் பயமுறுத்தியது, ஏனெனில் அவர் அதைக் கேட்டுப் பழகியிருக்கவில்லை.

ஏனென்றால், அவர் அவளுடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தபோதிலும், தன் மகள் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்வதைக் கேட்பது அவருக்குப் புதிதாக இருந்தது.

அது அவரைப் பயமுறுத்தியது.

நண்பர்களே..உங்கள் பெற்றோரை நேசியுங்கள்.. அதை அவ்வப்போது வெளிப்படுத்துங்கள். வெளிப்படுத்தா காதலும், மௌனமான ராகமும் ஒன்றே...

படித்ததில் பிடித்தது..

1998 Coco Cola Cup Sharjah தனது முதல் ஓவர் முதல் பாலில் சச்சின் டெண்டுல்கரை போல்ட் ஆக்கினார் சிம்பாப்வே வீரர் ஹென்றி ஓலங...
20/05/2026

1998 Coco Cola Cup Sharjah

தனது முதல் ஓவர் முதல் பாலில் சச்சின் டெண்டுல்கரை போல்ட் ஆக்கினார் சிம்பாப்வே வீரர் ஹென்றி ஓலங்கா.

மிகப்பெரிய வீரர் என புகழப்பட்ட சச்சின் புதிய ஆளிடம் ஒரு பாலுக்கு கூட தாக்கு பிடிக்க முடியவில்லை என உலகமே கிண்டல் செய்தது

சச்சின் அவுட்டானதுக்கு காரணம் சச்சின் திறமை இல்லாதவர் என்பதோ ஹென்றி ஓலங்கா மிக திறமையான பவுலர் என்பதோ காரணம் அல்ல.

ஹென்றி ஓலங்கா கொண்டு வந்த புதிய டெக்னிக் சச்சினுக்கு அப்போது புரியவில்லை என்பது மட்டுமே அவரது தோல்விக்கு காரணமா இருந்தது.

இந்த சம்பவம் கழிச்சு ரெண்டு நாளில் final match. அதே சிம்பாப்வே உடன்.

இந்த மேட்சில் ஹென்றி ஓலங்காவால் சச்சினை அவுட் ஆக்க முடியவில்லை. சச்சின் 92 பாலில் 124 நாட் அவுட். இந்தியா வென்றது.

முதல் முறை வித்தியாசமான டெக்னிக் உபயோகித்து ஜெயித்ததால் மட்டுமே ஹென்றி ஓலங்கா பெரிய வீரர் ஆகிவிடவில்லை. அந்த புது டெக்னிக் புரியாமல் அவுட் ஆன சச்சின் கேலிக்கு உரியவரும் இல்லை.

டெக்னிக் என்ன என தெரிந்தபிறகு ரெண்டாவது நாளே அவரை வெச்சு வெளுத்து விட்ட சச்சின் கடைசி வரை சூப்பர் ஹீரோ தான். அதிரடி காட்டிய ஹென்றி ஓலங்கா பிறகு என்ன ஆனார் என தெரியவே இல்லை.

அதனால் நான் என்ன சொல்ல வர்றேன்னா ..

புதுசா ஒரு டெக்னிக் வெச்சு ஜெயிக்கிறது எல்லாம் விஷயமே இல்லை.. அதனாலேயே ஒரு சூப்பர் ஹீரோ வரலாற்றில் மொத்தமா முடிஞ்சிட மாட்டார்

களமும் விளையாட்டும் தெரிந்த சூப்பர் ஹீரோ திரும்பவும் வீரியமா எழ முடியும். புது ஆட்களால் நிலைத்து இருக்க கூட முடியாது.

புரியுதா நண்பா??

நார்வே நிருபர்:இந்தியாவில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுபறிக்கப்படுகிறதே? நார்வே ஏன் இந்தியாவை நம்ப வேண்டும்?இந்திய வெளி ...
20/05/2026

நார்வே நிருபர்:
இந்தியாவில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு
பறிக்கப்படுகிறதே? நார்வே ஏன் இந்தியாவை நம்ப வேண்டும்?
இந்திய வெளி உறவுத்துறை அதிகாரி:
எங்களிடம் காந்தி இருக்கிறார்.
அரசியல் அமைப்பு சட்டம் இருக்கிறது. அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

நார்வே நிருபர்:
அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. ஆனால், அவை ஏன் மீறப்படுகின்றன?
இந்திய வெளி உறவுத்துறை அதிகாரி:
அப்படி மீறப்பட்டால் மக்கள்
கோர்ட்டுக்கு போகலாம்.

நார்வே நிருபர்:
தங்களது அடிப்படை உரிமைகளுக்காக மக்கள் ஏன் கோர்ட் வாசப்படி ஏற வேண்டும்?
இந்திய வெளி உறவுத்துறை அதிகாரி:
இந்த பிரஸ் மீட் நான் நடத்துவது. எதை கேட்க வேண்டும், கேட்க கூடாது என்று நான்தான் முடிவு செய்வேன்.

நார்வே நிருபர்:
உங்கள் பிரதமர் எப்போதுதான் நிருபர்களை சந்திப்பார்?
இந்திய வெளி உறவுத்துறை அதிகாரி:
அடுத்த கேள்வி?

என்று சொல்லி விட்டு ஓடி போய் விட்டார் இந்திய வெளி உறவுத்துறை அதிகாரி!!!!

😂

கரீபியன் – உலகின் அழகிய தீவுக்கூட்டங்களின் வரலாறும் சிறப்பும்கரீபியன் (Caribbean) என்பது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரி...
20/05/2026

கரீபியன் – உலகின் அழகிய தீவுக்கூட்டங்களின் வரலாறும் சிறப்பும்

கரீபியன் (Caribbean) என்பது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா இடையே அமைந்துள்ள மிகப்பெரிய கடல் பகுதியும், அதைச் சுற்றிய ஆயிரக்கணக்கான தீவுகளின் தொகுப்பும் ஆகும். இந்த பகுதி உலகளவில் சுற்றுலா, கலாச்சாரம், இசை, கடற்கரை மற்றும் பல இன மக்கள் வாழும் தனித்துவமான சமூக அமைப்புக்காக மிகவும் பிரபலமானது.

கரீபியன் பகுதியில் சுமார் 7000க்கும் மேற்பட்ட தீவுகள், சிறு தீவுகள் மற்றும் பவளப்பாறைத் தீவுகள் உள்ளன. இதில் 13 நாடுகள் சுயாட்சி நாடுகளாக உள்ளன. முக்கிய நாடுகள் கியூபா, ஜமைக்கா, ஹைட்டி, டொமினிகன் ரிபப்ளிக், டிரினிடாட் மற்றும் டொபாகோ போன்றவை.

கரீபியன் தீவுகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமித் தட்டுகள் மோதியதாலும், எரிமலை வெடிப்புகளாலும், கடலடிப் புவிச்சரிவுகளாலும் உருவானவை. Caribbean Plate, North American Plate மற்றும் South American Plate ஆகிய புவித் தட்டுகளின் இயக்கம் இந்த தீவுகளின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியது.

இந்த பகுதி இரண்டு முக்கிய தீவுக் குழுக்களாக பிரிக்கப்படுகிறது. Greater Antilles எனப்படும் பெரிய தீவுகள் குழுவில் கியூபா, ஜமைக்கா, ஹைட்டி, டொமினிகன் ரிபப்ளிக் மற்றும் பியூர்டோ ரிகோ உள்ளன. Lesser Antilles பகுதியில் சிறிய எரிமலை மற்றும் பவளப்பாறைத் தீவுகள் அதிகம் காணப்படுகின்றன.

கரீபியன் உலகின் மிக அழகான கடற்கரைப் பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நீல நிற கடல், வெள்ளை மணற்கரைகள், மழைக்காடுகள், பவளப்பாறைகள் மற்றும் வெப்பமண்டல காலநிலை ஆகியவை இதன் முக்கிய இயற்கை சிறப்புகள். உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருடந்தோறும் இங்கு வருகிறார்கள்.

கரீபியன் பொருளாதாரத்தில் சுற்றுலா மிகப்பெரிய வருவாய் மூலமாக உள்ளது. அதோடு சர்க்கரை உற்பத்தி, ரம் தயாரிப்பு, மீன்பிடி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களும் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக டிரினிடாட் மற்றும் டொபாகோ எண்ணெய் வளத்திற்காக அறியப்படுகிறது.

கரீபியன் கலாச்சாரம் உலகிலேயே மிகவும் கலப்பு கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பியர்கள், இந்தியர்கள், சீனர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆகியோரின் கலவையால் உருவான தனித்துவமான சமூக அமைப்பு இங்கு உள்ளது.

இசை உலகில் கரீபியனின் தாக்கம் மிகப்பெரியது. Reggae, Calypso, Soca, Dancehall போன்ற இசை வகைகள் இங்கிருந்து உலகம் முழுவதும் பரவின. ஜமைக்காவைச் சேர்ந்த Bob Marley உலகப் புகழ்பெற்ற Reggae இசை கலைஞராக கருதப்படுகிறார்.

கரீபியன் பகுதியில் சுமார் 4.5 கோடி மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலான மக்கள் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அடிமை வாணிக காலத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து அழைத்து செல்லப்பட்ட மக்களின் சந்ததியினரே இன்றைய மக்களின் பெரும்பகுதியை உருவாக்குகின்றனர்.

இந்தியர்களின் வரலாறும் கரீபியனில் முக்கியமானது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய தொழிலாளர்கள் சர்க்கரைத் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்து செல்லப்பட்டனர். இன்று டிரினிடாட் மற்றும் டொபாகோ, கயானா போன்ற பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழ்கின்றனர். இந்து கோவில்கள், தீபாவளி விழா, இந்திய உணவுகள் மற்றும் இந்திய மரபுகள் இன்னும் அங்கு காணப்படுகின்றன.

கரீபியன் பகுதியில் பல மொழிகள் பேசப்படுகின்றன. ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, டச்சு மற்றும் Creole மொழிகள் முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தீவிலும் தனித்துவமான மொழி மற்றும் கலாச்சார அடையாளம் காணப்படுகிறது.

கியூபா கரீபியனின் மிகப்பெரிய தீவு நாடாகும். பழமையான அமெரிக்க கார்கள், சிகார் மற்றும் கம்யூனிச அரசியல் அமைப்புக்காக பிரபலமானது. ஜமைக்கா Reggae இசைக்கும், உலகின் அதிவேக ஓட்ட வீரரான Usain Bolt-க்கும் புகழ்பெற்றது. ஹைட்டி உலகின் முதல் கருப்பின குடியரசாக வரலாற்றில் இடம்பிடித்தது. டிரினிடாட் மற்றும் டொபாகோ இந்திய கலாச்சார தாக்கத்திற்கும் Carnival விழாவிற்கும் பிரபலமானது.

கரீபியன் பகுதி இயற்கை பேரழிவுகளுக்கும் பெயர் பெற்றது. Hurricanes, நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இருப்பினும் அதன் இயற்கை அழகும் கலாச்சார வளமும் உலக மக்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

மொத்தத்தில் கரீபியன் என்பது வெறும் கடற்கரை சுற்றுலா பகுதி மட்டுமல்ல; பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் இணைந்து வாழும் உலகின் மிக வித்தியாசமான மற்றும் அழகான பகுதிகளில் ஒன்றாகும்.

இந்திக்காரனும் மதராசியும்...பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என...
20/05/2026

இந்திக்காரனும் மதராசியும்...

பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா?

பணி நிமித்தமாக அல்லது படிப்பிற்காக தமிழ் நாட்டிற்கு பலதரப்பட்ட வயதினரும் வருகிறார்கள். இதில் பலர் இங்கயே தங்கி விடுகிறார்கள். அப்படி புதிதாய் சென்னை அல்லது தமிழகம் வருவோரிடம், தமிழ்நாடும் தமிழர்களையும் பற்றி கேட்டதற்கு என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

வட இந்தியர்களிடம் தமிழை பற்றியும், தமிழ்நாடு பற்றியும் கேட்டதற்கு:

தமிழ் நாட்டில் வெயில் அதிகம். அதுவும் சென்னையில் ரொம்ப அதிகம்.

உணவு பதார்த்தங்கள் காரமாக இருக்கும். உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. எல்லா ஓட்டல்களிலும் இட்லி, சாம்பார் வடை மட்டுமே பிரதானமாய் கிடைக்கும். வட இந்திய உணவு வகைகள் கிடைப்பது அரிது.

தமிழர்கள் கருப்பாக, அழுக்காக தான் இருப்பார்கள்.

தமிழர்கள் எல்லோரும் மூன்று வேளையும் வாழையிலை போட்டு தான் சாப்பிடுவார்கள்.

பெரும்பாலும் லுங்கி அல்லது வேஷ்டி தான் கட்டுவார்கள்.

தமிழ் மக்கள் பெரும்பாலானோர் நெற்றியில் (சிவலிங்கம் நெற்றியில் இருப்பது போல) திருநீறு வைத்திருப்பார்கள்.

தமிழ்நாட்டில் யாருக்கும் இந்தி பேச தெரியாது. இந்தியை மொழியை எதிர்த்தவர்கள்; இன்றும் எதிர்ப்பவர்கள். எல்லோருமே தமிழ் மட்டும்தான் பேசுவார்கள்.

தமிழ் மொழி பேச/கற்க மிகவும் கஷ்டமானது.

அனைவரும் விஜய், அஜித் ரசிகர்களாகவே இருப்பார்கள்.

தென் மாநிலங்களில் உள்ளவர்கள் எல்லோருமே மதராசிகள் தான்.

மலையாளமும், தமிழும் கிட்டத்தட்ட ஒன்று.

பிறமொழி பேசும் மக்களுக்கு தமிழர்கள் உதவ மாட்டார்கள்.

ஆட்டோக்காரர்கள் வழிப்பறியாக பணம் வசூலிப்பார்கள்.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் நீண்டகாலமாக பிரச்சனை நடக்கிறது. அனைவரும் பிரபாகரன் ஆதரவாளர்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடம்.

அதே போல நாமும் வடநாட்டினரை பற்றி என்னன்ன நினைத்துள்ளோம் என்பதை ஒரு சிலரிடம் கேட்ட போது, இந்த பதில்களெல்லாம் வந்து விழுந்தது.

வடஇந்தியாவில் எல்லா மாநிலத்தவரும் இந்தி மட்டுமே பேசுவார்கள். இந்திக்காரர்கள் எல்லோருமே வட்டிக்கடை 'சேட்'.

எல்லோருமே வெள்ளைவெள்ளேறென்று மைதாமாவு போல இருப்பார்கள்.

இளைஞர்கள் பலர் மேற்கத்திய கலாச்சராத்தைதான் பின்பற்றுவார்கள்.

மூன்று வேளையும் சப்பாத்தியையம், ரொட்டியையும் மட்டுமே சாப்பிடுவார்கள்.

அவர்கள் ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் கலப்படம் செய்து பேசுவார்கள்.

திருமணத்திகாக பெரும் தொகையை செலவு செய்வார்கள்.

எல்லோருமே பான் பீடா/ குட்கா போடுவார்கள்; பீடாவை வாயில் போட்டு குதப்பி, கண்ட இடங்களில் துப்பி கொள்வார்கள்.

பெரும்பாலானோர் குடிப்பழக்கம் உடையவர்கள்.

பீஹார், ஒரிசா ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் படிப்பில் பின்தங்கியவர்கள்.



இது போல இன்னும் நிறைய இருக்கிறது. இதில் நாம் நினைப்பதும் சரி, மற்றவர்கள் நம்மைப்பற்றி நினைப்பதும் சரி, அனைத்துமே உண்மை கிடையாது. ஆனால் ஒரு சில விஷயங்கள் ஒத்து போகலாம்.

இது பொதுவாக எல்லா வடமாநிலத்தவரும் தமிழ்நாட்டை பற்றியும், தமிழ் மக்களை பற்றி நினைக்கும் விஷயங்கள்தான். இவை எல்லாமே நம் சினிமாக்களில் மிகைப்படுத்தப்பட்டு காட்டப்படுபவை. இன்னும் சில, மக்களின் மேம்போக்கான எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் இவை.

தமிழ் படங்களில் மலையாளிகளை டீக்கடை சேட்டன்களாகவும், அவர்கள் வீட்டு பெண்களை இன்றும் முண்டு கட்டி, துண்டு போர்த்திய பெண்களாய் காட்டுவதும், தெலுங்கர்களை பின் குடுமி வைத்து நெற்றியில் பெரிய நாமம் போட்டவர்களாகவும், பெண் துப்புரவு தொழிலாளர்களளை தெலுங்கு பேசுபவர்களாகவே காட்டுவதும், படித்த இந்தி பேசுபவர்களை உயர் தட்டு மக்களாகவும், படிக்காத இந்தி மக்களை அடியாட்கள் போல காட்டுவதும் உண்டு. இன்னும் ஒரே மாதிரியாக (stereotypical) மற்ற மாநில மக்களை காட்டுவது மக்களின் ஒருவித தவறான கண்ணோட்டதையே குறிக்கிறது.

இந்தியில் பாலிவுட் பாதுஷாவின் படத்தில், தமிழ் மக்கள் எப்படியெல்லாம் இருக்கமாட்டார்களோ அப்படி தான் காட்டுவார். நூடுல்ஸில் தயிர் ஊற்றி சாப்பிடுவது, இளநீரில் லசி கலந்து சாப்பிடுவது, தமிழ்நாடு ஆண்கள் பட்டையான தங்க பர்டாரில் வெள்ளை வேட்டியணிந்து (கேரளா ஸ்டைலில்) அங்கவஸ்த்திரம் போட்டிருப்பார்கள், சிலோனுக்கு பெட்ரோல் கடத்துவதால் கடலில் சுட்டு கொள்ளப்படுகிறார்கள் என காட்டியுள்ளார். இன்னும் சில படங்களில் ஆங்கிலத்தை தப்பாகதான் பேசுவார்கள், யாருக்குமே இந்தியில் பேச/பதில் சொல்ல தெரியாது என பல செயற்கையான விஷயங்களை நம் செய்வது போல சொல்லியிருப்பார்கள்.

சினிமாக்கள் மூலமாகத்தான் நாம் பல விஷயங்களையும், மற்ற கலாச்சாரங்களையும் பற்றி தெரிந்து கொள்கிறோம். அதை சொல்லும் போதும், காட்சிப்படுத்தும் போதும் எதார்த்தத்தை காட்டினாலே போதும். அதை தமிழ் சமூகமும், மற்ற சமூகமும் திரையில் சரியாக செய்தாலே, நமக்குள் வடக்கு தெற்கு என்ற கலாச்சார இடைவெளி இல்லமல் போகும்.

18 லட்சம் கொடுத்து Thar வாங்காதீர்கள்!🚨• 1 எருமை = ₹1 லட்சம்→ 18 எருமைகள் = ₹18 லட்சம்• 1 எருமை தரும் பால் = 10 கிலோ→ 18...
20/05/2026

18 லட்சம் கொடுத்து Thar வாங்காதீர்கள்!🚨

• 1 எருமை = ₹1 லட்சம்
→ 18 எருமைகள் = ₹18 லட்சம்

• 1 எருமை தரும் பால் = 10 கிலோ
→ 18 எருமைகள் தரும் பால் = 180 கிலோ

• 1 கிலோ பால் விலை = ₹70
→ ஒரு நாள் வருமானம் = ₹12,600

• ஒரு மாத வருமானம் = ₹3,78,000

• செலவு = ₹70,000

• சேமிப்பு = ₹3,08,000

போங்க... எருமை வாங்குங்க!
இப்படிப்பட்ட இன்னும் பல ஸ்மார்ட் ஐடியாக்களுக்கு பின்தொடருங்கள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய பஞ்சு அருணாசலத்தின் கட்டுரை.​'எண்'ணுக்குப் பெருமை தந்த மன்னவன் நடிகர் திலகம் சிவாஜி க...
20/05/2026

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய பஞ்சு அருணாசலத்தின் கட்டுரை.
​'எண்'ணுக்குப் பெருமை தந்த மன்னவன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இப்படி கூறுகிறார் பஞ்சு அருணாசலம்.

​தினகரன் நாளிதழ் 27/01/1979-இல் நடிகர் திலகத்தின் 200-வது படக் காவியமான 'திரிசூலத்திற்கு' ஒரு சிறப்பு மலர் வெளியிட்டது. அந்தச் சிறப்பு மலரில் பஞ்சு அருணாசலம் எழுதிய கட்டுரை இது.

​100, 150, 175, 200 - இவை வெறும் எண்கள் அல்ல; திரையுலகில் பலருடைய லட்சியம். தன் படம் 100 நாட்கள் ஓடாதோ, 25 வாரங்கள் போகாதோ என்ற ஏக்கப் பெருமூச்சு பலரிடமும் உண்டு. ஆனால், பட எண்ணிக்கையாலேயே 100, 150, 175 என்று விரைந்து வெற்றி நடை கண்டு 200-ஐ அடைந்திருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இந்த எண்களுக்கே பெருமை சேர்த்த மன்னவன் அவர்.

​சிவாஜி நடித்த 200 படங்களிலும் அவரை மிஞ்சும் எந்த பாத்திரப் படைப்புகளும் அந்தந்தப் படங்களில் வந்ததில்லை எனும்படி கதைநாயகமான பாத்திரங்களிலேயே நடித்திருக்கிறார். அப்படி இப்படி என்று 50 படங்களைத் தள்ளிவிட்டாலும், மற்ற 150 படங்களிலும் தனித்தனி நபர்களை உலவவிட்டிருக்கிறார்.
​ஒரே ஒரு:
​குணசேகரனை
​மனோகரனை
​தூக்குத் தூக்கியை
​ரங்கனை
​தியாகராஜனை
​ரஹீமை
​ராஜசேகரனை
​வீரபாண்டிய கட்டப்பொம்மனை
​பரதனை
​உயர்ந்த மனிதனை
​வ.உ.சி-யை
​கர்ணனை
​மோட்டார் சுந்தரம் பிள்ளையை
​அப்பரை
​லாரன்ஸை
​பிரெஸ்டிஜ் பத்மநாபனை
​பாரிஸ்டர் ரஜினிகாந்தை
​எஸ்.பி. சௌத்ரியை
​மூக்கையா சேர்வையைத் தான் இதுவரை தமிழ்ப் பட உலகம் சந்தித்திருக்க முடியும்.

​இன்று எந்த ஒரு நடிகர் தன்னை கதாபாத்திரமாக்கி ஐக்கியப்படுத்திக் கொள்ளும் போதும், சிவாஜியின் நடிப்பு வரப்பை மிதிக்காமல் இருக்க முடியாது. அவரது ஜீவனான நடிப்பு நிழல் படாமல் ஒதுங்க இயலாது; அவ்வளவு மாறுபட்ட குணச்சித்திரங்களைக் காட்டிவிட்டவர் அவர்.
​தமிழ் சொற்களை எதுகை மோனைகளோடு அடிக்கிக் கொடுத்துவிட்டால், உணர்ச்சிகளை வார்த்தைகளில் ஒதுக்கிக் கொடுத்துவிட்டால், கை ஏற்ற இறக்கங்களோடு பொருள் நயம் பிசகாமல் பேசும் எவரிடமும் சிவாஜியின் வசன நடையின் வாடை வீசும். அப்படி ஒன்றை உருவாக்கிவிட்டவர் அவர்.
​ஆ, ஊ, ஏ என்று பொருளற்ற உயிர் எழுத்துக்களுக்கும் பொருள்படர்ந்த பெருமூச்சுகளின் உயிர்ப்பைத் தந்தவர் சிவாஜி. பேசத் திணறுவது போல், வார்த்தை வாயிலிருந்து வரத் தவிப்பது போல் இன்று யார் பேசினாலும் 'சிவாஜி பாணி' என்று சொல்லும் அளவிற்கு வளமான பரம்பரை படைத்தவர் அவர். இசைக்கேற்ப நடந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்.

​இப்படி எங்கும் எதிலும் சிவாஜியின் நடிப்புப் பள்ளி என்ற மறையாத மரபு ஏற்படுத்தி, இன்னும் அவரே கூட அதனோடு கடுமையாகப் போட்டியிட்டு தன்னை மாறுபடுத்திக் காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கும் வளர்ச்சி இருக்கிறதே... அந்தச் சாதனையை வேறு எங்கு கண்டோம்?
​தன் முழு கவனத்தையுமே படப்பிடிப்பில் ஈடுபடுத்தி, கேரக்டராக மாறும் இன்றைய நிலையிலும் சிவாஜி ஒருவர்தான். அமர்ந்த இடத்திலேயே மணிக்கணக்காக அமர்ந்து எவரிடமும் எதுவும் பேசாமல், விளக்கு வெப்பத்தில் வற்றிடும் விழிநீரைத் தொடர்ந்து வரவழைத்துக் கொண்டு நின்ற பல சோகமயமான காட்சிகள் இன்னும் இதனைச் சிறப்பாக விளக்குகிறது.
​இந்த முழுமையான ஈடுபாடு, ஆழமான சிந்தனை, தன் நடிப்பாற்றலால் கதாபாத்திரங்களுக்கு அமைத்துத் தரும் நெளிவு சுளிவுகள் - இவைதான் வசனத்தை அவர் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அரிய திறனைத் தருகிறது.

​கேமரா எப்படி எந்தக் கோணத்தில் இயங்கினாலும் தான் எப்படி இருக்க வேண்டும், எப்படித் திரையில் அது பிரதிபலிக்கும் என்பதை முழுமையாக உணர்ந்து அதற்கேற்ப தன்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். எந்த இயக்குநரானாலும், ஒளிப்பதிவாளர் ஆனாலும் அவர் விரும்புவதைச் செய்ய வந்திருக்கும் வேலையாள் தான் என்ற உணர்வு சிவாஜிக்கு எப்போதுமே உண்டு.
​நேர மேலாண்மை
​ஆறு மாதம் கழித்து அதே காட்சியில் இன்னொரு ஷாட் எடுப்பதாக இருந்தாலும் கூட, தன் நடையிலே, அசைவிலே கூட கொஞ்சமும் மாற்றமின்றித் தொடர்ச்சியை அப்படியே கொண்டுவர சிவாஜி ஒருவரால் தான் முடியும்.

​நேரத்தோடு செயல்படுவது அவருக்கு இருக்கும் இன்னொரு சிறப்பு. பல வேளைகளில் மேக்கப்புடன் வெளியே காத்திருக்கும் சிவாஜி, படத்தின் டைரக்டரை வரவேற்பதைக் கூடக் கண்டிருக்கிறோம். கொடுத்த நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள எந்தக் காலத்திலும் சிவாஜியின் நட்சத்திர அந்தஸ்து தடையாக இருந்ததில்லை.
​எத்தனையோ சொல்லலாம், எல்லாமே சொல்லியாகிவிட்டவை தான். ஆனால் அவர் வெற்றியைப் பற்றி நினைப்பவர்கள் கூட அவரைப் பின்பற்ற சிரமப்படுகிறார்கள். அப்படி தன்னை நடிப்பிற்கென அர்ப்பணித்துக் கொண்டதாலேயே அற்புதங்கள் பல படைக்க அவரால் முடிகிறது. அந்த அரிய சக்தி அவரிடம் அணையாது சுடர்விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
​நன்றி, வணக்கம்.

பொதுக்குழுவை கூட்டினாலும் லீதிமுகவினர் அதில் கலந்து கொள்ள முடியாது.தாங்கள் கலந்து கொள்ளவே முடியாத ஒரு பொதுக்குழுவை கூட்ட...
20/05/2026

பொதுக்குழுவை கூட்டினாலும் லீதிமுகவினர் அதில் கலந்து கொள்ள முடியாது.

தாங்கள் கலந்து கொள்ளவே முடியாத ஒரு பொதுக்குழுவை கூட்டுவதில் இவர்களுக்கு என்னவொரு ஆர்வம்???

இதையெல்லாம் விட தவெக அமைச்சரவையில் இதுவரை பங்கேற்க முடியாத ஆதங்கம் அவர்களது பேச்சில் அப்பட்டமாக தெரிகிறது.

ஒருவேளை தவெக 30+ அமைச்சர்களையும் நியமித்துவிட்டால் இவர்களின் கதி என்ன???

அடுத்த நாளே விஜயை திட்டி ஒப்பாரி வைப்பார்கள்.

தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு அன்பான ஒரு வேண்டுகோள்......

இவர்கள் கடந்து வந்த பாதை

மாண்புமிகு அம்மா அவர்களுக்காக தீச்சட்டி எடுத்து மண்சோறு சாப்பிட்டு அடிபிரதட்சணம் முதல் அங்க பிரதட்சணம் வரையும் 6அடி அலகு முதல் 50 அடி அலகு வரை குத்திக்கொண்டு உருண்டு பிரண்டு அழுதார்கள்....

அம்மா மறைவுக்கு அடுத்த நாளே சசிகலாவை சின்னம்மா கிடையாது எங்கம்மா என்று புரியாத பாஷையில் உளறி கொட்டியவர்கள்....

சசிகலாவை நீக்கிவிட்டு அது ஒரு கொலைகார குடும்பம் நாங்கள் பயத்தில் அதுபோல் சொன்னோம் என்று கூறியவர்கள்....

அம்மாவுக்கு அடுத்து எடப்பாடியார்தான் என்று பட்டி தொட்டியெல்லாம் உருண்டு புரண்டவர்கள்....

இன்றைக்கு அவரையும் எதிர்த்து உங்களிடத்தில் உங்கள் அரசில் அமைச்சராக பங்கேற்க துடிக்கிறார்கள்......

தயவு செய்து இவர்களை நம்பி விடாதீர்கள்.....

இவர்களின் மனநிலை எப்படிப்பட்டது தெரியுமா???

தன்னை பாலூட்டி சீராட்டி வளர்த்த அன்னையின் மார்பையே அறுத்தெரியக்கூடிய கொடூர குணம் படைத்தவர்கள்.

தீராப்பழிக்கு சொந்தக்காரர் ஆகிவிடாதீர்கள்.....

#மதிவாணன்_S

சத்தமில்லாமல் உயர்வது விலைகள் அல்ல… சாமானிய மக்களின் வாழ்க்கைச் சுமைதங்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் மட்டும் தான்...
20/05/2026

சத்தமில்லாமல் உயர்வது விலைகள் அல்ல… சாமானிய மக்களின் வாழ்க்கைச் சுமை

தங்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் மட்டும் தான் நம்ம கண்ணுக்கு தெரிகிறது.
ஆனால் உண்மையில் சத்தமில்லாமல் உயர்ந்து கொண்டிருப்பது சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவு.

நம்ம வீட்டுக்குள் தினமும் பயன்படுத்தும் சோப்பு, எண்ணெய், டிடர்ஜெண்ட், பால், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் இவையெல்லாம் யாருக்கும் பெரிதாக தெரியாமல் தினந்தோறும் விலை ஏறிக்கொண்டே இருக்கின்றன.

2026 மார்ச் மாதத்தில் 16 ரூபாய்க்கு வாங்கிய டிடர்ஜெண்ட் சோப், இன்று 22 ரூபாய்.
வெறும் இரண்டு மாதங்களில் 6 ரூபாய் உயர்வு.

இது ஒரு சோப்பின் கதை மட்டும் இல்லை.

சமையல் எண்ணெய், ஷாம்பு, காய்கறி, மசாலா பொருட்கள், மருந்து, பேருந்து கட்டணம் என அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்த உயர்வுகள் தனித்தனியாக பார்க்கும்போது பெரியதாக தெரியாமல் இருக்கலாம்.ஆனால் ஒரு நடுத்தர குடும்பம் தினமும் வாங்கும் அனைத்து பொருட்களின் கூடுதல் செலவையும் மாத இறுதியில் கணக்கிட்டுப் பார்த்தால், சம்பளத்தை விட செலவுதான் வேகமாக ஓடுகிறது என்பது புரியும்.

சம்பளம் மட்டும் அதே இடத்தில் நிற்கிறது.
ஆனால் செலவு மட்டும் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.

ஒரு நடுத்தர குடும்பம் இன்று மாத
சம்பளத்தை வாழ்க்கைக்காக செலவு செய்யவில்லை…
இந்த மாதத்தை எப்படி கடப்பது? என்பதற்காகவே போராடுகிறது.

ஒரு சாமானிய குடும்பம் இன்று ஆசைக்காக வாழவில்லை.
அடிப்படை தேவைகளுக்காகவே போராடுகிறது.

மாத சம்பளம் வரும் நாளில் கூட சந்தோஷம் இல்லை.
இந்த மாதம் எதை குறைக்கலாம்? என்ற பயம்தான் இருக்கிறது.

முன்னாடி ஹோட்டலுக்கு போவது ஆடம்பரம்.இன்று வீட்டுக்குள் சமைப்பதே செலவான விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது.

முன்னாடி குழந்தை கேட்டதை வாங்கிக் கொடுத்த பெற்றோர்,
இன்று கடையில் விலையை பார்த்து,
அடுத்த மாதம் வாங்கிக்கலாம்… என்று சொல்லி குழந்தையை இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.

முன்னாடி ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு கடைக்குப் போனால் இரண்டு பை பொருட்கள் வரும். இன்று அதே ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கவரே முழுமையாக நிரம்பவில்லை.

இதுதான் இன்றைய நடுத்தர குடும்பங்களின் உண்மை நிலை.

வீட்டு வாடகை உயர்வு…
மின்கட்டணம் உயர்வு…
பள்ளிக் கட்டணம் உயர்வு…
மருத்துவச் செலவு உயர்வு…
அதோடு அன்றாடப் பொருட்களின் விலை உயர்வு…

ஆனால் வருமானம் மட்டும் பழைய அளவிலேயே நின்றுகொண்டிருக்கிறது.

தங்கம் வாங்காத மக்கள் இருக்கலாம்.
ஆனால் சோப்பு வாங்காமல் யாராலும் வாழ முடியாது.

பெட்ரோல் போடாதவர்கள் இருக்கலாம்.
ஆனால் அரிசி, எண்ணெய், காய்கறி இல்லாமல் எந்த வீட்டும் இயங்காது.

இதனால் இன்று மக்கள் சேமிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
சிலர் நகை அடகு வைக்கிறார்கள்.
சிலர் கடன் வாங்குகிறார்கள்.
சிலர் தேவைகளை குறைத்துக் கொண்டு வாழ்க்கையை தள்ளிச் செல்கிறார்கள்.

தங்கம் விலை உயர்ந்தால் செய்தி வருகிறது.
பெட்ரோல் விலை உயர்ந்தால் விவாதம் வருகிறது.

ஆனால் சமையலறையில் தினமும் நடக்கும் இந்த அமைதியான விலை உயர்வுதான்
சாமானிய மக்களின் வாழ்க்கையை மெதுவாக நசுக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதார சுமை.

த.வெ.க எம்எல்ஏ க்களில் பலர் பொறியியல் ,டாக்டர் பட்டம் முடிக்காமல் பெயருக்கு பின் பட்டம் போட்டுள்ளார்கள்.  பலர் பத்தாம் க...
20/05/2026

த.வெ.க எம்எல்ஏ க்களில் பலர் பொறியியல் ,டாக்டர் பட்டம் முடிக்காமல் பெயருக்கு பின் பட்டம் போட்டுள்ளார்கள். பலர் பத்தாம் கிளாஸ், பன்னிரெண்டாம் கிளாஸ் படித்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தாண்டா அப்பவே சொன்னோம். தற்குறி கூட்டம்ன்னு.

Address

Erode

Alerts

Be the first to know and let us send you an email when Muganool Fm 91.5 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Muganool Fm 91.5:

Share