நானும் இன்ன பிறவும்

  • Home
  • India
  • Erode
  • நானும் இன்ன பிறவும்

நானும் இன்ன பிறவும் பரமேஸ்வரிசண்முகம்.. கவிதைகள்

22/06/2026
20/06/2026

🙅‍♀️ #கெஞ்சலும் #கொஞ்சலும்

#கெஞ்சல்—
காதல் மண்டபத்தில்
இதயம் மண்டியிடும்
மௌனத் தொழுகை...

#கொஞ்சல்—
அந்த தொழுகைக்குப் பதிலாய்
மலரும்
மொழியற்ற ஆசீர்வாதம்.

ஒரு சொல் கெஞ்சினால்
உயிர் நெகிழும்;
பார்வைகள் கொஞ்சினால்
உலகம் நெகிழும்.,

#காதலில்
கெஞ்சலும் கொஞ்சலும்
இரண்டு சொற்கள் அல்ல—
ஒரே இதயத்தின்
இரு இனிய துடிப்புகள்.

#பரமேஸ்வரிசண்முகம்

20/06/2026

“எத்தனை முகங்கள்
நம்மைக் கடந்து சென்றாலும்,
மனம் மட்டும்
ஒரு பெயரின் அருகில்
நிலை கொள்கிறது…
காற்று பல திசைகளில் இருந்து வந்தாலும்
உன் நினைவுகளுக்கே
ஜன்னல் திறக்கிறது,,
சிலர் வாழ்க்கையில்
வந்து செல்கிறார்கள்,
சிலர் மட்டுமே
வாழ்க்கையை மாற்றிச் செல்கிறார்கள்.
#பரமேஸ்வரிசண்முகம்

20/06/2026

#நீயும் #நானும்

நீயும் நானும்
எப்போதும் இப்படித்தான்..
நேசத்தையும் பாசத்தையும்
மாறிமாறி வழங்கியபடி..
கூடவோ குறைவோ
அது ஒரு புறம் இருக்கட்டும்...

ஒவ்வொரு பிரிவிற்குப் பின்னான கூடுகையில்
இத்தனை நாட்களாகச்
சேமித்து வைத்ததைப்
புதிதாகப் பங்கு போடவேண்டும்...
பிரிவிற்கான காரணங்களை மறந்தும்
விளங்கங்களை எதிர்பாராமல்,,

அதுதான் பெரியஅயற்சி
எனக்கும் உனக்கும் இப்போது.

#பரமேஸ்வரிசண்முகம்

20/06/2026

#கூடு #விட்டுக் #கூடு #பாயும் #காதல்

கூடு விட்டுக் கூடு பாயும்
பறவையல்ல காதல்...
ஒரு இதயத்திலிருந்து
மற்றோர் இதயத்திற்குச்
சிறகின்றிப் பறக்கும்
பறவை..
கண்கள் எழுதும் கடிதங்களை
மௌனம் வாசிக்கும்,,
சொல்லாத சொற்களுக்கெல்லாம்
புது அர்த்தம் காணும் ...
தொலைவுகள் மறந்து
தொடர்ந்து துரத்தும்,,
காலங்கள் மாறினாலும்
காரணம் கேட்க மறுக்கும்,,.
ஒரு கூடு காலியான போதும்
மற்றொரு கூட்டில் குடியேறாமல்,
அதே நினைவின் கிளைகளில்
தன் உயிரைத் தொங்க விடும்...
உண்மையான காதல்
கூடு விட்டுக் கூடு பாய்வதில்லை...
ஒருமுறை கூடு கட்டிய இதயத்தில்
ஆயுள் முழுவதும்
பாடிக்கொண்டே இருக்கும்
ஒரு நிரந்தரப் பறவை. ❤️
#பரமேஸ்வரிசண்முகம்

20/06/2026

என்னோடு தான்
இருந்தாக வேண்டுமென
யாரையும்
வற்புறுத்துவதில்லை...
என்னை விட்டு விட்டுப்
போய் விடாதே!!
எனக் கெஞ்சுவதும் இல்லை...
எந்த நிர்பந்தமோ
ஆக்ரமிப்போ
அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளோ
ஏதுமில்லை...
தன்மானத்தை இழக்காமல்
சுயத்தைத் தொலைக்காமல்
நான் நானாக
வாழ்ந்தாலே
போதுமெனக்கு.
#பரமேஸ்வரிசண்முகம்.

21/03/2026

#🙅‍♀️இது #போதும் #எனக்கு

உன் நேரத்தைத் திட்ட மிட்டுத் திருடும் திருடிதான்
பொறுத்துக் கொள்,,,
உன் அன்றாடத்தின் குறுக்கீட்டு
இம்சைதான்
அனுசரித்துக் கொள்,,
தூக்கம் வராத இரவுகளில்
உன்னையும் தூங்க விடாத செல்லப் பிசாசு தான்
அரவணைத்துக் கொள்,,
என்னை விட்டுப் போய்விடாதே
என்பதான
கெஞ்சலில் குழந்தை தான்
புரிந்து கொள்..
நிழலாய் பின் தொடருகையில்
கரிசனையுடன்
அருகழைத்துக் விரல் பிடித்துக்
கூட்டிக் கொள்,,
இது போதும் எனக்கு
இதுவெல்லாம் போதும் எனக்கு.
#பரமேஸ்வரிசண்முகம்

🙅‍♀️

21/03/2026

🙅‍♀️ # காதல் ஒரு வரம்

காதல் ஒரு வரம்—
கேட்காமல் கிடைத்த
காலத்தின் கருணை,
இரவுகள் துயில் மறந்த
மௌன மொழி.
சிதறும் கனவுகளின்
சேமிப்புக் கிடங்கு,
வலிகளுக்கு
விளக்கம் கேட்காத
அழகிய புரிதல்...
பாழ்வெளியில்
முளைத்த பசுமை.
மொத்தத்தில்
இளமையின்
இரகசியம்.
#பரமேஸ்வரிசண்முகம்

21/03/2026

ஆமாம்
என அங்கீகரித்து ஏற்பதற்கும்
ஓ..
என வியப்புற்று விக்கிப்பதற்கும்.,
ஆதி மூலச்சொற்கள் அத்தனையையும்
ஆரத்தி கரைத்துச் சுற்றுகிறாய்..
சொக்கி நிற்கையில்
தூரப் போனது
திருஷ்டிகளோடு
அடங்கிக் கிடந்த
ஆற்றாமைகளும்..
பூப்பல்லக்கில் பவனி கிளம்பும் தேவதைக்குப்
பூந்தோட்டக்காவல் காரன்
நீயானதில்
மிடுக்காய் நடக்கிறதென்
கவிஊர்வலம்.
#பரமேஸ்வரிசண்முகம்

Address

Erode
Erode
638316

Website

Alerts

Be the first to know and let us send you an email when நானும் இன்ன பிறவும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category