10/01/2016
#சம்பளம் உயர்த்தி கேட்ட வேளையாளுக்கு பாஸ் வைத்த test.
பாஸ்:நீ ப்ளைட்ல போய்ட்டு இருக்க,அதில் 50 செங்கல் இருக்கு,அதில் ஒன்றை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எத்தனை இருக்கும்?
வேளையாள்: 49 இருக்கும்.
ஒரு யானைய எப்படி ஃப்ரிட்ஜூக்குள் வைப்பது?
ஃப்ரிட்ஜை திறக்கனும,யானைய உள்ள வைக்கனும்,ஃப்ரிட்ஜை மூடனும்.
ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜூக்குள் வைப்பது?
ஃப்ரிட்ஜை திறக்கனும்,யானைய வெளிய எடுக்கனும்,மானை உள்ள வைக்கனும்,ஃப்ரிட்ஜை மூடனும்.
அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள்.எல்லா விளங்கும் வந்துருச்சு,ஒன்னு மட்டும் வரல,அது என்ன?
மான்.ஏன்னா அது ஃப்ரிட்ஜூக்குள் இருக்கு.
முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும.என்ன பன்னுவாங்க?
தாராளமா கடக்கலாம்,எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு.
ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க.எப்படி?
குளத்தில் மூழ்கிருப்பாங்கா.
அதான் இல்ல,முதல்ல நீ ஃபிளைட்ல இருந்து ஒரு செங்கல்லை தூக்கி போட்டேல்ல, அது பாட்டி மண்டையில விழுந்திருச்சு.அதான் செத்துட்டாங்க,இப்படி கவனம் இல்லாமதான் நீ வேலை பார்த்துட்டு இருக்க,இதில் சம்பளம் வேற கூட கேக்கற.ஒழுங்கா கவனமா வேளைய பார்.இல்லன்னா சீட்டு கிழிஞ்சிறும்.
#நீதி:
பயபுள்ளைங்க கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, நாம எவ்ளோ உஷாரா இருந்தாலும் புஸ்வானமாக்கி ஓரமா உட்கார வைச்சிடுறானுக...