10/11/2023
- Worst 👎👎
🪙கார்த்தி கேரியர்ல நல்ல படம், சுமாரான படங்கள்னு ரெண்டா பிரிக்கலாம்.. but Worst படங்கள்னு ரொம்ப கம்மியா தான் சொல்ல முடியும்.. ஒன்னு ரெண்டு தான் அப்படி இருக்கும்.. தேவ், Alex Pandian, காற்று வெளியிடை மாதிரி ரொம்ப ரேரா தான் அது அமையும்..
🪙அப்படி ரொம்ப Rare ah ஒரு தடவை பார்க்கிறதே பெரிய விஷயம்ங்கிற டைப்ல அமைஞ்சிருக்க ஒர்ஸ்ட் படம் தான் இந்த #ஜப்பான்
🪙ஸ்டார்டிங்ல ஒரு கொள்ளை காட்சியும் அதோட விசாரணையும் மட்டும் விறுவிறுப்பா தொடங்குச்சு.. அப்புறம் புஸ்-னு மொத்தமா கவுந்திடுச்சு.. இண்டர்வல் பிளாக் மட்டும் பர்ஸ்ட் ஹாப்ல ஓகேவா இருந்து செகண்ட் ஆப்ல அங்கங்க பரவால்லாம போச்சு.. And Final act okayish..
🪙கார்த்தியும் கார்த்தியோட ஒன்லைனர்ஸ் மட்டும் படத்துல பாசிட்டிவ் மத்தது எல்லாமே ஷப்பா ரகம் தான்🥴🥴.
🪙டீசர்லயே பார்க்க முடியாத டயலாக் டெலிவரியை படம் பூரா பேசி... குறைஞ்சது அந்த வாய்ஸ் மாடுலேஷனாவது நார்மலா இருந்திருக்கலாம்..
🪙மோசமான படங்கள்ல வழக்கம் போல ஒர்ஸ்ட் ஹீரோயின் போர்சன், லாஜிக் மிஸ்டேக், நீண்ட இழுவை திரைக்கதை இதை எல்லாம் தாண்டி ஒன்னு ரெண்டு டெக்னிக்கல் விஷயங்கள் படத்துல பாஸிட்டிவா கொண்டு போகும்
இதுல அதுவும் மிஸ்ஸிங்..
🪙 ஜி.வி.பி. BGM- pucca OP. எடிட்டிங்- சமீபத்துல வந்த ஒர்ஸ்ட் எடிட்டிங்னு இந்த படத்துக்கு அவார்டு தரலாம்
🪙இதுக்கு மேல குறை சொல்லனும்னா சொல்லிட்டே இருக்கலாம்.. இருந்தாலும் இதோட STOP பண்ணிக்குவோம்..
🪙பேவரைட் ஆக்டர்ஸ் லிஸ்ட்ல இருக்க ஆள்.. 25வது படத்தை எப்படி எதிர்பார்த்து இருப்போம். ஆனா மாட்டுனது ராஜூமுருகன் படம்.
🪙கார்த்தியோட லேண்ட்மார்க் படமான 25வது படத்துல இப்படி ஒரு கொடுமையை ஏன் பண்ணீங்கன்னு ராஜுமுருகனை கேட்க முடியாது. 25வது படத்தை கொண்டு போய் வம்படியா ஏன் ராஜூமுருகனுக்கு கொடுத்தீங்கன்னு வேணா கார்த்தியை கேட்கலாம். 😩
🪙மொத்தத்துல கார்த்திகாக வேணா எப்படி இருந்தாலும் ஒரு தடவை பார்ப்பேன்னு நினைக்கிறவங்க மட்டும் பார்க்கலாம்.