MOKKA JOKE MA

MOKKA JOKE MA LIVING IN CHENNAI

12/07/2026
ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம்.. ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகளை வாங்க வந்தானாம்... ஒரு க...
30/01/2026

ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம்.. ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகளை வாங்க வந்தானாம்... ஒரு குரங்கை 100 ரூபாய்க்கு வாங்குவதாக அறிவிச்சனாம். அந்த ஊர் ஜனங்க எல்லாம் அவனை பைத்தியம்னு நினைச்சாங்களாம். யாராச்சும் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்க காசு கொடுத்து வாங்குவாங்களான்னு யோசிச்சாங்களாம். இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, குரங்களை பிடிச்சு வியாபாரிக்கிட்ட கொடுத்து , அவன் கொடுக்குறதா சொன்ன பணத்தை வாங்கிட்டாங்களாம்.
இந்த சேதி காட்டுத்தீ மாதிரி பரவ, நிறைய பேர் குரங்கு பிடிக்கிற வேலையில இறங்குனாங்களாம். கொஞ்ச நாள் கழிச்சு, அந்த வியாபாரி ஒரு குரங்குக்கு 200 ரூபாய் தருவதாக சொன்னானாம். அது வரை சோம்பேறித்தனமா வீட்டிலேயே இருந்தவங்களும் உடனே குரங்கு பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். பாக்கி இருக்கிற குரங்குகளை எல்லாம் 200 ருபாய்க்கு ஜனங்க வித்ததும், இனிமேல் வாங்குற குரங்குக்கு 500 ரூபாய் தரேன்னு சொன்னானாம் வியாபாரி..
ஜனங்களுக்கு தூக்கம் எல்லாம் போச்சு.. ஊருல மிஞ்சி இருக்குற அஞ்சாறு குரங்குகளையும் புடிச்சி வித்து, ஒரு குரங்குக்கு 500 ரூபாய் வாங்கினாங்களாம். வியாபாரி அடுத்து என்ன அறிவிப்பு விடப்போறான்னு மக்கள் ஆர்வமா காத்திருந்தாங்க...
ஒரு வாரம் ஊருக்கு போறதாவும், திரும்பி வந்ததும் ஒரு குரங்கை 1000 ரூபாய்க்கு வாங்கிக்கிறதாகவும் சொன்னான் வியாபாரி. தன் வேலைக்காரனை கூண்டில் இருக்கிற குரங்குகளை எல்லாம் பாத்து பராமரிக்க சொல்லிட்டு, தன்னோடு ஊருக்கு போனானாம் வியாபாரி. பிடிச்சு வித்து 1000 ரூபாய் வாங்குறத்துக்கு ஒரு குரங்குக்கூட எஞ்சி இல்லையேன்னு மக்களுக்கு கவலை.
அதை பார்த்த வியாபாரியோட வேலைக்காரன், ஜனங்களுக்கு ஒரு குரங்கை 700 ரூபாய்க்கு விக்கிறதாக சொன்னானாம். காட்டு தீ மாதிரி செய்தி பரவிச்சு. வியாபாரி 1000 ரூபாய்க்கு குரங்கு வாங்கினால், எப்படியும் தங்களுக்கு 300 ரூபாய் லாபம் கிடைக்கும்னு யோசிச்சாங்க ஊர் ஜனங்க அடுத்த நாள் கூண்டில அடைஞ்சு இருக்கிற குரங்குகள வாங்க பெரிய வரிசை காத்திருந்துச்சு.
ஒரு குரங்குக்கு 700 ரூபாய் என்று வியாபாரியோட வேலைக்காரன் வித்தான். பணக்காரங்க நிறைய குரங்குகளை வாங்க, ஏழைங்க கடனைஉடனை வாங்கி, கொஞ்சம் குரங்குகளை வாங்கினாங்களாம்.
குரங்குகளை எல்லாம் பத்திரமா பாத்துக்கிட்ட ஜனங்க, அந்த வியாபாரி மறுபடியும் எப்போ ஊருக்கு வருவான்னு காத்திருந்தாங்களாம். யாருமே வரல.. எல்லாரும் அந்த வியாபாரியோட வேலைக்காரனைப் போய் பாத்து விஷயத்தை கேக்க ஓடினாங்க. ஆனால் அவன் எப்பவோ ஊரை காலிப்பண்ணி ஓடிப் போயிருந்தான்.. அப்பதான் ஊர் ஜனங்க, ஒன்றுக்கும் பிரயோஜனப்படாத குரங்குகளை 700 ரூபாய் கொடுத்து வாங்கி, விற்க முடியாத நிலைமையில இருக்கோம்னு உணந்தாங்க.
இந்த வியாபாரத்துக்கு பேருதான் "ஜியோ ". முதலில் இலவச சேவை கொடுத்தான். பிறகு 500MB free data கொடுத்தான். எல்லோரும் YOUTUBE, Facebook, Twitter, whatsapp, Instagramனு பழகினதும் 24 நாளுக்கு 1 GB 199 ரூபாய் என்கிறான்.. சிலரை மாசத்துக்கு 400 ரூபாய் வரைக்கும் வாங்க வைக்கிறான்.. இதான் குரங்கு வியாபாரம்.. சும்மா இருந்த சிரங்கை சொரிஞ்சு விட்ட கதையா, நிம்மதியா இருந்த நம்மை இன்டர்நெட்டுக்கு அடிமையாக்கி, ஒழுங்கா நல்லபடியா சேவை கொடுத்துக்கிட்டிருந்த BSNL, IDEA, HUTCH, AIRCEL எல்லாரையும் கடன்காரனாக்கி தான் மட்டும் தான் இந்த தொழில்ல நிக்கமுடியும்னு ஆனதுக்கப்புறமா, தன் இஷ்டப்படி விலைய ஏத்துறான் பாருங்க அதுதான் இந்த குரங்கு வியாபாரம்..

இனிய காலை வணக்கம் 😁😁😁பழைய கதை... சிரிச்சு... வயிறு வலிச்சா நான் பொறுப்பல்ல...சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு ...
23/01/2026

இனிய காலை வணக்கம் 😁😁😁

பழைய கதை...
சிரிச்சு... வயிறு வலிச்சா நான் பொறுப்பல்ல...

சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து, "நீ என்ன பண்ணுவியோ தெரியாது. ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகணும்". என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு அருமையான யோசனை வந்தது. அதாவது, சொர்க்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்று கேட்க வேண்டும். யாருடைய இறந்த விதம் வித்தியாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது, அவனிடம் சொர்க்கத்தின் புதிய விதியை தேவதை கூற, அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான்.

"எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுவது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு.

ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு, பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல. என்னைப் பாத்ததும், 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா?' ன்னு கேட்டா.

நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன். நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான்.

எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி. அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன். அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான்.

நான் உடனே கிச்சனுக்குள்ள போய், பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து, பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு, அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு, அவன நசுக்கி கொன்னுட்டேன்.

இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்."

அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம்". என்றது.

அவன் போன சற்று நேரம் கழித்து, இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற, அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான்.

"நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம். அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன்.

நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க. திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன், பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி.

அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ்யை என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்".

அவன் பேசி முடித்ததும், தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டபட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது.

மூன்றாவதாக ஒருத்தன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது. அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான்.

"எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன்.
அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா. நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான். அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா.

நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...?

😂 😂 😂 😂 😂

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when MOKKA JOKE MA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share