HellFire Club

HellFire Club The Hellfire Club channel was launched to foster healthy, serious discussions and opinions on the arts, including cinema, books, and animation

சிரித்தமுகக்காரன் - ஜப்பானிய சிறுகதை - தமிழில் புதுமைப்பித்தன் ❣️🔥 #புதுமைப்பித்தன்
05/04/2026

சிரித்தமுகக்காரன் - ஜப்பானிய சிறுகதை - தமிழில் புதுமைப்பித்தன் ❣️🔥

#புதுமைப்பித்தன்

Must Watch and Share Your Thoughts 🌼 Share Your Friends, Subscribe Our Channel 💗Link in First Comment...
20/03/2026

Must Watch and Share Your Thoughts 🌼 Share Your Friends, Subscribe Our Channel 💗

Link in First Comment...

மூத்தோன் வியாசனின் கரம் பிடித்து மகாபாரதம் என்னும் பெருங்கடலில் நீந்துவோம்..Link in First Comment...
15/03/2026

மூத்தோன் வியாசனின் கரம் பிடித்து மகாபாரதம் என்னும் பெருங்கடலில் நீந்துவோம்..

Link in First Comment...

04/03/2026

என் மீசை
வெள்ளி மயிரை
பிடுங்கும் வேளை
நான் இமை மூடும்
கணத்தில் அவன்தரும்
அவசர முத்தம்
அதிசயம்!

- மரக்கா

16.09.2022
யாமம்: 10.01

#மரக்கா

Triangle of Sadness – ஒரு அரசியல் ஹேங்க் ஓவர்!கார்ல் மாடலிங் துறையில் சாதிக்க விரும்புபவன். யாயா ஏற்கனவே மாடலிங் உலகில் ...
03/06/2023

Triangle of Sadness – ஒரு அரசியல் ஹேங்க் ஓவர்!

கார்ல் மாடலிங் துறையில் சாதிக்க விரும்புபவன். யாயா ஏற்கனவே மாடலிங் உலகில் பிரபல மாடலாக, இன்ப்ளூயன்ஸராக இருப்பவள். இருவருக்கும் இடையே காதல் இருந்தாலும் யாயா அளவிற்கு சம்பாதிக்க முடியவில்லை, அவளது உதவியில் வாழ வேண்டியிருக்கிறது என்ற தாழ்வு மனப்பான்மை கார்ல் மனதில்..

இந்நிலையில் பெரும் பணக்காரர்கள் செல்லும் சொகுசு Yacht ரக கப்பலில் அவர்களும் பயணிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அந்த கப்பலின் ஆடம்பரம், செல்வந்தர்களின் அலப்பறை முதல் பாதி. பின்னர் கடல் கொள்ளையர்கள் வீசிய கையெறி குண்டில் கப்பல் மூழ்கி மீதியுள்ளவர்கள் ஒரு ஐலேண்டில் கரை ஒதுங்குகிறார்கள். அங்கு நடக்கும் கதை மீதி.

Carl & Yaya, The Yacht, The Island என மூன்று சாப்ட்டர்களாக விரியும் கதை முதலாளித்துவத்தை தங்கு தடையின்றி ட்ரோல் செய்துள்ளது. அங்கங்கே கொஞ்சம் ரஷ்யாவையும், கம்யூனிசத்தையும் கூட.

Yacht உள்ளே செல்வந்தர்கள் வரும் முன்னே அங்குள்ள சிப்பந்திகள் பேசிக் கொண்டிருக்கும் காட்சியில், ‘வரும் பணக்காரர்களிடம் நோ என்ற வார்த்தையையே யாரும் சொல்லக்கூடாது’ என்று பேசிக் கொள்வதுடன் அவர்களிடம் இருந்து பணத்தை பெறுவதுதான் தங்களது அதி உன்னத கொள்கையாக பேசிக் கொள்வார்கள்.

அதற்கு ஏற்றார்போல ஒரு ரஷ்ய செல்வந்தரின் ஆசைக்காக எல்லா கப்பல் சிப்பந்திகளையும் கடலில் சர்ஃபிங் டைவ் அடிக்க செய்வார்கள். கப்பலின் கீழ் தளத்தில் எஞ்சின் வேலை பார்ப்பவன் உட்பட. இந்த செல்வந்தர்களில் உர ஆலை நடத்துபவர், கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்து விற்கும் ஆயுத வியாபாரி என பலர் இருப்பார்கள். அந்த ஆயுத வியாபாரி தயாரித்து விற்ற குண்டை வீசிதான் கடல் கொள்ளையர்கள் அந்த கப்பலையே அளிப்பார்கள். இதெல்லாம் படத்தின் சிறந்த ட்ரோல் காட்சிகள்.

The Yacht சாப்ட்டரில் ஒரு வாந்தி காட்சி வரும். அருமையான மேக்கிங் அது கேப்டன் டின்னரில் கப்பல் பயங்கரமாக குலுங்க தொடங்க எல்லாம் ஆங்காங்கே வாந்தி எடுக்க தொடங்குவார்கள். கொஞ்ச நேரத்தில் கப்பலே வாந்தி மயமாகிவிடும். அவ்வளவு நேரமும் சுத்தம், ஆடம்பரம் என பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் கலீஜாகி போய் கிடப்பார்கள்.

கப்பல் விபத்திற்கு பின் தப்பித்த சில பணக்காரர்கள் மட்டும் ஐலேண்டில் தஞ்சமடைவார்கள். அதில் கப்பல் பணிப்பெண் ஒருத்தியும் உயிர் பிழைத்திருப்பாள். இந்த பணக்காரர்களுக்கு மீன்களை பிடிக்கவோ, நெருப்பு மூட்டவோ தெரியாது. ஆனால் அந்த பணிப்பெண்ணுக்கு தெரியும். இதனால் உணவுக்கு அவர்கள் இந்த பணிப்பெண்ணை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்த இடத்திலிருந்து அதிகாரம் செல்வந்தர்களிடமிருந்து பணிப்பெண்ணுக்கு மாறும்.

அவள் தன் அதிகாரத்தை கொண்டு அவர்களை கட்டுப்படுத்துவது ஒரு தனி இன்பத்தை அவளுக்கு தருகிறது. கூட்டத்தில் அழகான இளம் வாலிபனான கார்ல் கூட ஒரு மீன் துண்டிற்காக அவளுக்கு சகல தேவைகளையும் பூர்த்தி செய்ய தயாராகிறான். தனது காதலி யாயாவின் முன்னரே அவளுக்கு அடிமை சேவகம் புரிகிறான். தன்னிடம் காசு இருக்கிறது என்ற மிதப்பில் பணியாளர்களை கடலில் சர்பிங் டைவ் அடிக்க சொன்னவர்கள், தற்போது தங்கள் உணவு, இருப்பிடத்திற்காக தங்களிடம் உள்ள உயர்ரக கடிகாரங்கள், நகைகளை கூட தர போட்டி போடுகிறார்கள்.

அதுவரை அந்த அதிகாரத்தை அனுபவித்திராத அந்த பணிப்பெண் தொடர்ந்து அந்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவே நினைக்கிறாள். அவளை பொறுத்தவரை அவர்கள் அந்த தீவிலிருந்து தப்பிக்காமல் இருக்க வேண்டும். தொடர்ந்து இவர்கள் தனது அதிகாரத்தின் கீழ் தன் கட்டளைகளுக்கு கீழ்படிந்து இருக்க வேண்டும் என்பதே எண்ணம். அப்போது அவர்கள் இருக்கும் பகுதியிலிருந்து சிறிது தூரம் தாண்டி சென்றபோதுதான் தெரிகிறது. அந்த தீவே ஒரு சுற்றுலா தளம். அங்கு ஒரு ரெசார்ட் கூட இருக்கிறது. ஆனால் இதை கண்டறிந்தது யாயாவும், அந்த பணிப்பெண்ணும் மட்டும்தான்.

தனது அதிகாரத்தை இழக்க விரும்பாத பணிப்பெண் யாயாவை கொல்ல முயல்கிறாள். கொன்றாளா என்பதை காட்டாமலே கதை முடிகிறது. படம் முழுவதும் முதலாளித்துவத்தின் கோர முகத்தின் மீதான பகடிகள். போர் அடிக்காமல் நிறைய இடங்களில் வெடித்து சிரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அதிகாரம் என்ற ஒன்றின் மீதான போட்டி அதிகாரத்தை தொடர்ந்து கிடைக்கும் அடக்குமுறைக்கான வாய்ப்பு, அது தரும் போதை என ரொம்ப தியரிட்டிக்கலாக விவாதிக்கும் கான்செப்ட்டை ஒரு சலிக்காத படமாக எடுத்து கலக்கி இருக்கிறார்கள். அதிகாரத்தை எதிர்த்து போராடுபவர்களும் அதிகாரம் கிடைத்த பின் சர்வதிகாரியாய் மாறிவிடுவதுதானே நிசர்சனமாய் இருக்கிறது. இப்போதைய அரசியல் சூழலில் அதிகாரத்தை பிடிப்பது என்பதே கீழிருந்து மேல் வரை எல்லா தரப்பினரின் மோதலாக இருக்கிறது. ஆனால் எவர் மேலே வந்தாலும் தனக்கு கீழ் இருப்பவரை மிதிக்கவே செய்வார்.

The Yacht சாப்ட்டரில் வாந்தி எடுத்து எல்லாடும் டயர்ட் ஆகி கிடக்கும்போது அதிகமாக குடித்த உர வியாபாரி கேப்டனின் அறிவிப்பு மைக் மூலமாக கப்பல் மூழ்க போவதாக அறிவிக்க, அனைவரும் அலறி லைப் ஜாக்கெட் போட்டுக் கொண்டு உயிருக்கு பயந்து கிடப்பார்கள். ஆனால் உர வியாபாரியும், கப்பல் கேப்டனும் சேர்ந்து கொண்டு குடி போதையில் முதலாளித்துவம், கம்யூனிசம் குறித்து தீவிர விவாதம் பண்ணிக் கொண்டிருப்பார்கள். எல்லாம் எல்லாருக்கும் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருக்கும்.

அதுபோல கேப்டன் டின்னரில் எல்லாரும் வாந்தி எடுத்து அந்த இடத்தை விட்டு போய் விட, அதுவரை பகட்டாக நின்று கொண்டிருந்த கேப்டன் சட்டையை கழற்றி வீசிவிட்டு, உர வியாபாரியுடன் அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருப்பான். அப்போது உர வியாபாரி “அமெரிக்காவுல நான் கம்யூனிஸ்ட்.. ஆனா ரஷ்யாவுல கேப்பிட்டலிஸ்” என அரசியல் காமெடிகளை அவிழ்த்து விட பதிலுக்கு கேப்டனும் “நாம் தூக்கில் ஏற்றும் கடைசி கேப்பிட்டலிஸ்ட் இந்த தூக்கு கயிறை செய்த வியாபாரிதான்னு மார்க்ஸ் சொல்லிருக்காரு” என பதிலுக்கு பேச ஒரு சமயம் இரண்டு பேரிடமும் ஜோக், கருத்துகள் தீர்ந்து போக, போனில் தேடி எடுத்து ஒருவரை ஒருவர் அட்டாக் செய்து கொண்டிருப்பார்கள். மொத்த படத்தில் அந்த The Yacht சாப்ட்டர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு சாப்ட்டர்.

Welcome Home (2020)இந்த படம் பத்தி பக்கம் பக்கமா எழுதலாம், ஆனால் சிம்பிளா முடிச்சிக்கலாம். ஆணாதிக்க, அதிகார மனநிலைக்கு எ...
26/11/2020

Welcome Home (2020)

இந்த படம் பத்தி பக்கம் பக்கமா எழுதலாம், ஆனால் சிம்பிளா முடிச்சிக்கலாம். ஆணாதிக்க, அதிகார மனநிலைக்கு எதிரான இன்னொரு திரைப்படம். சொல்ல வந்த விஷயத்தை தெளிவா, சொல்லியிருக்குற திரைப்படம். இந்த அமைப்புல ஆண்களை அம்மாக்கள் எப்புடி தவறா வளர்க்குறாங்க, ஆண்கள் பெண்களை எவ்வுளவு கொடூரம நடத்த அது வழிவகுக்குதுன்னு தெளிவா கதாபாத்திரங்கள் வாயிலா சொல்லியிருக்காங்க… இந்த படம் பார்த்து முடிக்கும்பொழுது உங்கள் மனசுல கேள்விகள் உருவாச்சுன்னா அதுக்கு விடை தேடி போவீங்க… அது ஒரு நல்லமாற்றம். இல்லைன்னா, அந்த பொம்பள புள்ளைங்க ஏன் சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டுபோச்சு, அதான் அந்த நிலைமைன்னு நினைச்சீங்கன்னா, இந்த படத்துல வர்ற ஒரு அப்பன் கதாபாத்திரத்துக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லைன்னுதான் நினைப்பேன்… அதான் உண்மையும்க்கூட…

எப்பவுமே அதிகாரம் என்பது ஒரு சீழ்பிடித்த மனநிலை. மத்தவங்களை துன்புறுத்து பார்க்குறதுல அதுக்கு அப்புடி ஒரு ஆனந்தம் கிடைக்கும். இந்த படத்துல வர்ற போலோ கேரக்டரை நல்லா பாருங்க. அதுதான் பல ஆண்களோட அடிப்படையான மனநிலை. குடும்ப வன்முறையோட அப்பட்டமான வெளிப்பாடுதான் போலோ கேரக்டர். நேஹாவின் அண்ணன் கதாபாத்திரமாகட்டும், அனுஜாவின் தந்தை மற்றும் மாப்பிள்ளை இருவருமே போலோவின் நகல்களே. இந்த அமைப்பு காலம் காலமாக பலிகொடுத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வடிவமாகவே ப்ரெர்னா கதாபாத்திரம் அமைந்துள்ளது.

இந்த கதாபாத்திரங்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு கதாபாத்திரமென்றால் அது கன்ஷியாம் என்னும் தந்தை கதாபாத்திரம்தான். நாம் செல்லும் பேருந்திலோ, ரயில்நிலையத்திலோ, நாம் தேநீர் அருந்தும் அதே இடத்தில் நம் அருகில் வெகு சாதாரணமாக நின்றுக் கொண்டிருக்கும் ஒரு ஆணின் பிரதி. பார்க்கும்பொழுது குழந்தை மாதிரி இருக்காரே என்று நினைக்கத் தோன்றும், ஆனால் அவர் குடும்பத்தில் என்னவாக இருக்கிறார். என்னவெல்லாம் செய்ய இந்த சமூகம் அவருக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது? அதன்வழி சமூகத்தில் உருவாகியிருக்கும் குரூரம் என்ன? பொதுவாக குடும்ப வன்முறைகளை ஆணின் பார்வையில் அணுகுவதே பெரும்பாலும் இங்குண்டு, ஆம்பளை அப்புடிதான் இருப்பான் என்னும் வார்த்தையோடு முடிந்துவிடுகிறது. ஆனால் அதன் வலி?

அடிப்படையில் இது ஒரு சர்வைவல் த்ரில்லர் திரைப்படம். ஆனால் அதன் மையம் பெண்களுக்கும் சமூகத்துக்குமான உறவுநிலை. எடுத்துக்கொண்ட கருத்தும், அது சொல்லப்பட்ட விதமும் படு அட்டகாசம். கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம் என்று தாராளமாக சொல்லலாம்.

https://youtu.be/YEOKSqBXO24😌😌😌😌😌
26/11/2020

https://youtu.be/YEOKSqBXO24

😌😌😌😌😌

ஆண்வழி சமூகத்தின் அதிகார வெறியாட்டம் இயற்கைக்கு எதிரானது, சமத்துவத்திற்கு எதிரானது.

KINGDOM - 2 (2020)அதிகாரம் மனிதகுலத்தின் சுவாரசியமான வரலாற்றுப்பிழை.  ஏன் இதை சுவாரசியம் என்கிறேன் எனில் நம்முடைய வாழ்வி...
23/10/2020

KINGDOM - 2 (2020)

அதிகாரம் மனிதகுலத்தின் சுவாரசியமான வரலாற்றுப்பிழை. ஏன் இதை சுவாரசியம் என்கிறேன் எனில் நம்முடைய வாழ்வின் பல்வேறு தவறுகளுக்கு அது காரணமென்பது நமக்கு தெரிந்தபொழுதிலும், நாம் எந்த சூழலிலும் அதிகார வெறியை நிறுத்தியதில்லை. இதில் அதிகாரம் என்பது உயர்பதவிகளில் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் தன் சக மனிதனின் மீதும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அதிகாரம் என்னும் அம்பினை எய்துகிறான். அதை தனது சாமர்த்தியம் எனவும், தன்னை இந்த குரூரமான அமைப்பில் தக்கவைத்துக் கொள்வதற்கான வழியாகவும் பார்க்கிறான். ஆனால் இந்த அமைப்பின் சீழ்பிடித்த அழுகியப்புண் அப்பகுதியே என்பதுதான் உண்மை ஆகும்.

கிங்டம் முதல் பகுதி முடியும்பொழுது மனதிற்குள் புயலே வந்து முடிந்ததுபோல் இருக்கும். இனி என்ன நடக்கும்? லீ சாங் தலைமையிலான மக்கள் படை ஜாம்பிகளை அழித்ததா? அடுத்து என்னவெல்லாம் நடந்தது? முதல்பாகத்தின் சுவாரசியம் கொஞ்சமும் குறையாமல் இரண்டாம் பகுதிகளை இறக்கியிருக்கிருக்கிறார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பு கொஞ்சமும் குறையவில்லை.

இந்தக் கதையின் இடையே உரையாடலாக இரத்த உறவுகள் மட்டுமே ஆட்சியில் இருக்க வேண்டுமா? அது உருவாக்கும் இன்னல்கள் என்ன என்பதும் சிறிய உரையாடல்களாக நடந்துக் கொண்டே வருகிறது. அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அதை தக்கவைக்கவும் அல்லது அடுத்தநிலையை அடைய என்னவேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள். குயின் சோ தன் தந்தையை கொல்வது அதன் உச்சக்கட்டம் எனலாம். ஏனெனில் அரசி தன் இடத்தை தக்க வைப்பது என்பது மகன்வழி அரசு அதிகாரம் தன் கைவசம் வரும்பொழுதுதான். அதற்கு தன் தந்தையே தடையாக வருவார் எனில் கொல்வதில் தவறில்லை என அவரது அதிகார பசி நம்பவைக்கிறது. அதற்கு மேலான குரூரம் என்பது தான் அரசாள இயலாத நாடு, யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதற்காக அரசி எடுக்கும் முடிவுதான். அதிகாரம் எப்போது குரூர பசி கொண்டதுதானே.

ஆனால் இந்த சீரிஸின் முடிவு எந்த வகையில் எடுத்துக் கொள்வது என்பதில்தான் குழப்பங்கள் இருக்கிறது. பட்டத்து இளவரசர் லீ சோங் தன் நண்பனின் குழந்தையை தன் தம்பி என்று பட்டத்திற்கு கொண்டு வருகிறார். இது ஒருவகையில் இரத்த பந்தத்தை உடைத்து இன்னொருவரை அரியணைக்கு கொண்டு வருவது எனலாம். ஆனால் அது எதனால் நிகழ்கிறது என்பதுதான் சிக்கலே. ஏனெனில் அங்கு நிகழ்ந்த அதிகாரத்தின் வழியிலான தவறுகள் பற்றி எதுவும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்த முடிவை லீ சாங் எடுப்பதாக முடித்திருப்பது கதையின் மைய உரையாடலை மொத்தமாக முடித்துவிட்டது. அதாவது ஒரு தவறை மறைக்கவே இந்த முடிவை லீ சாங்க் எடுத்ததாக வருகிறதே தவிர, அரசமைப்பில் இருக்கும் இரத்த உறவுகளே ஆள வேண்டும் என்னும் கட்டமைப்பை உடைப்பதற்காக அல்ல.

கிங்டம் மூன்றாம் பாகத்திற்கான ஆரம்பத்துடனேயே முடிந்திருக்கிறது. குறிப்பாக ஜோம்பிகளை உருவாக்கிய அந்த செடியின் பின் உள்ள ரகசியம் என்ன என்பதே விறுவிறுப்பான கேள்வி. ஆகவே மூன்றாவது சீசனும் தாறுமாறாக இருக்குமென உறுதியாக நம்பலாம்… காத்திருப்போம்..

04/10/2020

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when HellFire Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share