Aruvi Pathippagam

Aruvi Pathippagam S.S.K, திரு.

அருவிப் பதிப்பகம் ஒரு பார்வை

• 2002 டிசம்பர் 23ஆம் நாள் அருவிப் பதிப்பகம் தன் நூல் பதிப்புப் பணியைத் தொடங்கியது
• 2003 மார்ச் 15 அன்று ‘கரு’ கவிச் சாரல் எனும் நூல் அறிமுக விழாவை சென்னை அண்ணாசாலை, ஆனந்த் திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. திருவாவடுதுரை ஆதினம் தவத்திரு முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் விழாத் தலைமையேற்று நூல் திறனாய்வுரை ஆற்றினார். புலவர் இலமா. தமிழ்நாவன், பெ.சி.பட், இளம்பாரி உ. கரு

ணாகரன், தொழிலதிபர்கள் திரு. G. மாணிக்கவாசகன், திரு. ஜேக்கப் செரியன், திரு. ஜானகிராமன் பங்கேற்றுச் சிறப்பித்தனர். முதல் விழாவிலேயே இந்தித் தேர்வில் முதல் வகுப்பில் தேறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
• தலைநகர்த் தமிழ்ச் சங்க கட்டடப் பணிக்கு ரூ.1,000/- நன்கொடை வழங்கப்பட்டது
• ‘கரு’ கவிச் சாரல் - நூல் திறனாய்வுப் போட்டியை சென்னை அடையாறு, புனித லூயிஸ் பார்வைத்திறன் குறை மாணவர்களிடையே நடத்தியது. நூல் திறனாய்வுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், பங்கேற்றோர்க்கு ஆறுதல் பரிசுகளும் 2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் புனித லூயிஸ் கல்லூரி அரங்கில் தாளாளர் சகோ. Y. ஜோசப் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது
• தமிழ்வழிக் கல்வியில் பயின்ற சென்னை பள்ளிக்கரணை அரசுப் பள்ளியைச் சேர்ந்த X & XII 2 மாணவர்களின் 2003-2004ஆம் கல்வி ஆண்டிற்கான தனிப் பயிற்சிக் கட்டணத்தை பதிப்பகம் ஏற்றுக்கொண்டது. அரசுப் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற அவர்களுக்கு ஊக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
• 2003ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அரசுப் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் சென்னை – அடையாறு புனித லூயிஸ் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது

• 2004-2005இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்வழிக் கல்வியில் பி.காம் பட்டப் படிப்பு பயின்ற மாணவன் மற்றும் சென்னை பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவன் இருவரின் தனிப் பயிற்சிக் கட்டணத்தை பதிப்பகம் ஏற்றது. அனைத்துப் பாடங்களிலும் தேரிய அம் மாணவனுக்கு ஊக்கப் பரிசும் வழங்கியது.
• 2005-2006இல் மேற்சொன்ன மாணவர்களுக்கான தனிப் பயிற்சிக் கட்டணத்தை பதிப்பகம் ஏற்றுக்கொண்டது
• சேலம் குகைப் பகுதியின் ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயில் திருப்பணிக்கு ரூ.3,000/- நன்கொடை வழங்கியது
• சென்னை வண்டலூரில் நடைபெற்ற தலைநகர்த் தமிழ்ச் சங்கக் கட்டட கால்கோள் விழாவில் நினைவுப் பரிசுகள் வழங்கியது
• 123 ஆண்டுகளாக இயங்கி வரும் சென்னை – அடையாறு, செயின்ட் பேட்ரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி Talent Show Time – Cultural Week ’06 விழாவில் நூலகத்திற்கு நூல்கள் வழங்கப்பட்டன
• 15.8.2007 அன்று தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழு வேளச்சேரி கிளை நூலகம் 60ஆம் சுதந்தர தின வைரவிழாவை முன்னிட்டு வேளச்சேரியின் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரை, கவிதை, பாட்டு, வினாடி வினாப் போட்டிகளை பல்வேறு பிரிவுகளில் நடத்தியது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை வென்றவர்களுக்கு பதிப்பகம் ரூ.3,060/- மதிப்பிற்குரிய பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தது
• சேலம் குகை சைனீகர் சமூக சங்கத்தில்:
2006ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சேலம் குகை சைனீகர் சமூக சங்க பேரவைக் கூட்டத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
+2, X, B.E., D.E.E.E இல் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு ஊக்கப் பரிசுகள்
23.7.06 பரிசுகள் மதிப்பு ரூ.550
22.7.07 பரிசுகள் மதிப்பு ரூ.650
05.7.09 பரிசுகள் மதிப்பு ரூ.625
04.01.09 ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவிற்கு ரூ.3,000/- நன்கொடை வழங்கியது


• 20.5.2007 பவள விழா நாயகர் திரு. S.S.K அவர்களுக்கு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ‘எழுஞாயிறு’ விருது வழங்கப்பட்டது
• அடையாறு திருக்குறள் இயக்கத்தின் ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் பதிப்பகம் சார்பாக வழங்கப்பட்டன
• CMK சைனீகர் சமூக சங்கத்தில்:
26.7.2008 அன்று 5ஆம் ஆண்டு விழாவிற்கு ரூ. 2,000/- நன்கொடை வழங்கப்பட்டது
16.8.2009 அன்று 6ஆம் ஆண்டு விழாவிற்கு ரூ.2,000/- நன்கொடை வழங்கப்படது
கல்வி அறக்கட்டளைக்கு ரூ.3,000/- நன்கொடை வழங்கப்பட்டது
• இராசிபுரம் சைனீகர் சமூக சங்கப் பொன்விழா 21.9.2008 மற்றும் CMKSS மகளிர் நற்பணி மன்ற ஆண்டு விழாவில் சங்க நிர்வாகிகளுக்கு பதிப்பக நூல்கள் வழங்கப்பட்டன
• பதிப்புப் பணியோடு சமூகப் பணியும் புரியும் அருவிப் பதிப்பகத்திற்கு 11.10.2009 அன்று சென்னை ஜெர்மன் ஹால் அரங்கில் ‘ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ நிருவாக இயக்குநர் திரு.எம்.முரளி அவர்கள் ‘சிறந்த பதிப்பகம்’ என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தார்

05/08/2026

#டோரதி

கோலிவுட் சாரல்
05/08/2026

கோலிவுட் சாரல்

05/08/2026

அறிமுகச் சாரல்
05/08/2026

அறிமுகச் சாரல்

திரைச் சாரல்
05/08/2026

திரைச் சாரல்

05/08/2026

#சிந்தனைச்சாரல்

குறள் கொடுக்கும் குரல்
05/08/2026

குறள் கொடுக்கும் குரல்

பயிலரங்கச் சாரல்
05/08/2026

பயிலரங்கச் சாரல்

Address

6, II Cross Street , Periyar Nagar, Pallikaranai
Chennai
600100

Telephone

9841789128

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aruvi Pathippagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Aruvi Pathippagam:

Shortcuts

Share