20/09/2024
நாட்டுப்புறப் பாடல்கள் - புத்தகத் தொகுப்பு குறித்த அறிவிப்பு👇
வாலு பதிப்பகத்தின் நீங்களும் பாடலாசிரியர்தான் எனும் கருப்பொருளில் உருவான உணர்வின் சந்தங்கள் - பகுதி 1, பகுதி - 2 ஆகிய பாடல் புத்தகங்களின் வெற்றியை அடுத்து, *நாட்டுப்புறப் பாடல்கள்* எனும் தலைப்பில் பாடல்களை தொகுக்க இருக்கிறது உங்கள் அபிமான வாலு பதிப்பகம். இது வாலு பதிப்பகத்தின் பதிமூன்றாவது புத்தகம் ஆகும்.
நாட்டுப்புறப் பாடல்கள் என்றால்... தாலாட்டுப்பாட்டு, முளைப்பாரிப்பாட்டு, கும்மிப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, நடைப்பாட்டு, ஏற்றப்பாட்டு, வண்டிப்பாட்டு, நடவுப்பாட்டு, நெற்குத்திப்பாட்டு, காதல் பாட்டு, சோகப்பாட்டு, கதைப்பாட்டு, விளையாட்டுப் பாட்டு என பல வகைமைகள் இருக்கின்றன.
உங்களுக்குள்ளும் பாடல் எழுதும் திறமைக்கு ஒரு சவால். நாட்டுப்புற பாடல் வடிவில் காதல், வீரம், சோகம், தத்துவம், விளையாட்டு, நையாண்டி எனஉங்கள் விருப்பம் போல் எழுதலாம்.
எழுத முடியவில்லை எனில் உங்கள் வீட்டில் உள்ள மூத்தோர்களிடமோ அல்லது ஊரில் உள்ள மூத்தோர்களிடம் நாட்டுப்புறப் பாடலைப் பாடக்கேட்டு, அதை பதிவு செய்து பாடலாக எழுதிக்கொடுக்கலாம். அதை ஆடியோவாகவோ, வீடியோவாகவா எடுத்த அனுப்பலாம். மற்றவர்கள் பாடுகிறார்கள் எனில் அவரது பெயர், ஊர் அவசியம் குறிப்பிடுங்கள்.
இது வாலு பதிப்பகத்தின் கனவு திட்டம். தமிழகம் முழுக்க இருக்கின்ற நாட்டுப்புற பாடல்களை தொகுத்து வெளியிட வேண்டும் என்ற இத்திட்டத்தை செயல்படுத்தி, அதை புத்தக வடிவில் வெளியிட வாலு பதிப்பகமும்... அப்பாடல்களை வீடியோவாக வெளியிட வாலு டிவியும் காத்திருக்கிறது.
வரும் தீபாவளி அன்று (அக்டோபர் 31, 2024) கறுப்பு வெள்ளையில், ISBN எண்ணுடன் இப்புத்தகம் வெளியிடப்படும். புத்தகத்தில் பாடல் எழுதுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
*பாடல்கள் 20 முதல் 24 வரிகளில் இருக்க வேண்டும். ஒரு பக்கத்திற்கு 24 வரிகள்தான். அதற்குமேல் வரிகள் நீண்டால் அது இரண்டாவது பக்கமாக கணக்கில் கொள்ளப்படும்.*
நாட்டுப்புறப் பாடலுக்கு பல்லவி, சரணம் கணக்கெல்லாம் கிடையாது. நீங்கள் எழுதுவதே பாடல்... பாடுவதே ராகம்.
இணையத்தில் இருந்து பாடல்களை எடுத்து அனுப்பக்கூடாது. உங்களின் சொந்த படைப்பாக இருக்கலாம். அல்லது நீங்கள் மற்றவர்களிடம் தொகுத்த பாடல்களாகவும் இருக்கலாம். அவரவர் எழுதும் பாடல்களுக்கு அவரவரே பொறுப்பு.
தேர்வுக்குழு இப்பாடல்களைத் தேர்வு செய்யும். பாடல்களை திருத்தவோ, சுருக்கவோ பதிப்பாசிரியருக்கு உரிமை உண்டு. பாடல் தேர்வில் ஆசிரியரின் முடிவே இறுதியானது.
உங்களது பாடல்களுடன் பெயர் ஊர் மட்டும் பதிவு செய்தால் போதும். உங்கள் பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய ரசீதினை குழுவில் பகிரவேண்டும். தனிப்பட்ட முறையில் பதிப்பாசிரியருக்கு பணம் செலுத்திய ரசீது, தங்களது ஒளிப்படம், பின்கோடுடன் கூடிய முழு முகவரி, அலைபேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும்.
பாடல்களை இதற்கென தனியே உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்யவும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தமிழ் யுனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்.
*ஒரு பக்கத்திற்கு ஒரு பாடல் பிரசுரமாகும். 1 பக்கத்திற்கான கட்டணம் ரூ. 700 (சான்றிதழ்+தபால் செலவு உட்பட). இரண்டு பக்கங்கள் எனில் ரூ.1400. வெளிநாட்டினருக்கு கட்டணம் வேறுபடும். ஒருவர் எத்தனை பாடல்கள் வேண்டுமானாலும் எழுதலாம். எத்தனை பாடல்கள் எழுதுகிறீர்களோ அத்தனை புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.*
அறிவிப்புகள் அனைத்தும் வாட்ஸப் குழுவில் வெளியிடப்படும். பாடலாசிரியர்களுக்கு வாலு பதிப்பகத்தின் பாராட்டுச் சான்றிதழ் புத்தகத்துடன் சேர்த்து தபால் மூலம் அனுப்பப்படும். நேரில் பெற விரும்புவோர் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
படைப்பாளிகள் விரைவாக உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்க வேண்டும்.
வீடியோ எடுக்கும் முறை
தெளிவான முறையில், லேண்டஸ்கேப்பில் உங்களது பாடலை பாடி, அதை வீடியோவாக எடுத்து அனுப்பி வைக்கவேண்டும். பாடல் நீங்கள் எழுதி, நீங்களே பாடலாம் அல்லது மற்றவர்களைக்கூட பாட வைத்து அனுப்பலாம். வீடியோ எவ்வித இரைச்சலின்றி இருக்க வேண்டும். அந்த வீடியோவை வாலு டிவியில் ஒளிபரப்புவோம். அந்த வீடியோ இணைப்பை QR கோடாக மாற்றி, புத்தகத்தில் உங்கள் பாடலுக்கு கீழ் வைக்கப்படும். வீடியோ தரமாக இருந்தால் மட்டுமே தேர்வு செய்யப்படும். உங்கள் பாடலை ஆடியோ வடிவிலும் அனுப்பி வைக்கலாம். ஆடியோ, வீடியோ பாடி அனுப்புவது கட்டாயமில்லை. உங்களின் விருப்பம்தான்.
பாடல்களை அனுப்ப கடைசி தேதி: 20.10.2024
ஆடியோ அல்லது வீடியோக்களை அனுப்பக் கடைசி தேதி: 20.10.2024
தொடர்புக்கு:
மோ.கணேசன், 9444296929
குழுவில் இணைய
https://chat.whatsapp.com/FmSpB0eKzJK5h9ySvg4lAQ
வாலு டிவியில் ஒளிபரப்பான பாடல் இணைப்பு
https://www.youtube.com/watch?v=wlr165MdLPo
ஆசிரியர் தின வாழ்த்துப்பாடலை வழங்குவதில் வாலு டிவி பெருமிதம் கொள்கிறது. அதிலும் இப்பாடலை வீடியோ வடிவில் கொடு.....