Aaha Rasigan

Aaha Rasigan This is the page for music lovers especially Tamil songs

17/04/2023

Spb in sigaram❤️🎶

16/04/2023

இன்னொரு கல்லூரி காமெடி..

மூன்றாம் வருட இறுதியில் விடுதியில் செம போர் கைபேசி பிரபலமாகிகொண்டிருந்த சமயம் நானும் ஒரு நோக்கியா 3310 வை வாங்கி வைத்துகொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்னேக் கேம் விளையாடி கொண்டிருப்பேன்

அப்போது ஒரு லோக்கல் PCO வில் ஒரு பெண் தன் தோழியோடு பேசிக்கொண்டிருக்கையில் அவளுக்கே தெரியாமல் அவள் டயல் செய்த நம்பரை மனதிற்குள் ஏத்தினேன்

ரூமிர்க்கு வந்ததும் தைரியத்தை வரவழைத்து கொண்டு ஒரு மிஸ்டு கால் கொடுத்தேன் கொஞ்ச நேரத்தில் லேண்ட் லைனில் இருந்து ஒரு கால் வந்தது எடுத்து யார் என்றேன் ஒரு அழகிய பெண் குரல் நீங்க யாரு? என்றது
அமைதியாக இருந்தேன் ஹலோ இப்போ மிஸ்டு கால் நீங்கதானே குடுத்தீங்க என்றாள்

ஆமா ஆமா ஹேய் என்ன தெரியலயா என்றேன். தெரியலயே என்றாள்! எப்புடி தெரியும் என நினைத்துகொண்டு அதுகுள்ள என் குரல மறந்துடல்ல போ நான் போன கட் பன்றன் என்று கட் பன்னிட்டு மூச்சு வாங்கினேன்

மீண்டும் கால் வந்தது இப்போது கொஞ்சம் பயம் விலகியிருந்தது சாரி மறந்துட்டன் ப்ளீஸ் யாருன்னு சொல்லுங்க என்ற குரல் என்னை கரைக்க, நானோ சரி உனக்கு மூனு சாய்ஸ் தரேன் கண்டுபிடி என்றேன்

சிவா என்றாள் இல்லை என்றேன் பிறகு ஏதோ ஒரு பெயர் சொல்ல இல்லை என்றேன் சிரிய சிந்தனக்கு பிறகு வாசு என்றாள் என் பெயரை கொஞ்சம் ஒட்டி இருந்ததாலும் அவளுக்கு வேறு சாய்ஸ் இல்லாததாலும் அதையே ஃபிக்ஸ் செய்து கொண்டேன்

ஒரு வாரம் நல்லாதான் போச்சு அதுகுள்ள நிஜ வாசுவை அவள் நேரில் பார்த்துவிட என் ஆட்டம் கலைந்தது
மீண்டும் போன் செய்து இனி எனக்கு கால் பன்னாதன்னு சொல்லதான் கால் பன்னேன் என்றாள் அததான் இதுக்கு முன்னடியே சொல்லிட்டியே என்றேன், சரி என் நம்பர் எப்புடி கிடைச்சது என்றாள்

போதுமே எனக்கு பேச்சை வளர்க்க அவளே வாய்ப்பளித்தாள் சரி உருட்டுவோம் என்று
போட்டேன் ஒரு பிட்டு, போன் வாங்கினதும் சர்ச்க்கு போனேன், ஜீசஸ் நான் ஒரே ஒரு நம்பர்க்குதான் போன் செய்வேன்அது என் தேவதையாக இருக்கனும்னு வேண்டிகிட்டு குத்துமதிப்பாக கால் செய்தேன் உனக்கு வந்துட்டு என்றதும் அவ அவுட்டு

அப்புறம் ஒரு வாரம் ரொமாண்டிக்கா போச்சு சரி நீ பாக்க எப்டி இருப்ப என்றேன் சில பேரு சொல்றாங்க குஷ்பு மாதிரி இருக்கன்னு சில பேர் சொல்றாங்க கிரன் மாதிரி இருக்கன்னு சில பேரு சொல்றாங்க மும்தாஜ் மாதிரி இருக்கன்னு என்று என் ஆவலை அதிகப்படுத்தினாள்

அவளை அவளுக்கே தெரியாமல் பார்த்தாக வேண்டுமென்று எங்கே செல்கிறாள் என பேசி தெரிந்து கொண்டு நேரில் சென்று பார்த்தால்! இப்போ நான் அவுட்டு. 100 கிலோவை தாண்டிய ஒரு உருவம் ஸ்கூட்டரை நசுக்கியபடி வர கன்ஃபார்ம் செய்ய போன் அடித்தால் அட எடுக்குறா அவளேதான்!!

அங்க புடுச்ச ஓட்டம் விடுதியில்தான் முடிந்தது
100 மிஸ்டு கால் கடைசியாக வேறு வழியே இல்லாமல் எடுத்தேன் ஏன் போன் எடுக்கல என்றாள்
குஷ்பு மாதிரி கிரன் மாதிரி மும்தாஜ் மாதிரி இருப்பேன்னு சொன்னியே ஆனா மூனுபேரும் சேர்ந்த மாதிரி இருப்பேன்னு சொல்லலியே என்றேன்

ஏய் என்ன பாத்துட்டியா காச் மூச் என கத்திகொண்டிருந்தாள்!!
அதன் பிறகு நடந்தது இன்னொரு பதிவில்…

07/04/2023

Hi Friends just started a page for music 🎵🎶
Join and celebrate the songs and our creators ❤️😇🎊💙🎶💜

Address

Kotturpuram
Chennai
600085

Alerts

Be the first to know and let us send you an email when Aaha Rasigan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Aaha Rasigan:

Share

Category