sai sethu kavithaigal

sai sethu kavithaigal kavithaigal

05/05/2023

வயது முதிா்ச்சியால் சில குணநலன்கள்
மாறுவது இயல்புதான்.
பொறுமையின்மை, முன் கோபம் ஏற்படுவது இயற்கைதான்.
ஆயினும் பெற்றோரை மதிக்க
தவறாதே.
அவா்களை பேணிக்காக்க தயங்காதே.

்்்்்்்்்்்்்்சாய்சேது.்்்்்்்்்்்்

14/04/2023

சிதைந்த கனவுகள்
*******∆∆∆*********

மூவரசம்பட்டு

‌‌தீர்த்தவாரி திருக்குளமே!
ஏனிந்த சீற்றம்? உன்னில் மாற்றம்?

இறைத்தொண்டாற்றும் ஆன்மீக இளைஞர்களை பறித்தாய்!
அவரை பெற்றவரை பரிதவிக்க வைத்தாய்!

செடி வளரும்போது வேரை பிடுங்கி னாய் !
அவர்தம் கனவுகளை சிதைத்து விட்டாய் !

தண்ணீரை தேக்கி வைத்திருக்கும் குளமே!
கண்ணீரை நிரப்பி கரையில் நிற்கின்றோம்.

அப்பரையும் சுந்தரரையும் இப்போது தேடுகின்றேன்;
ஆவி பிரிந்தாலும், உயிர்த்தெழவைக்கும் நாயன்மாரன்றோ.

இறைவனிடம் இனி, மேல் முறையீடு செய்வேன் !
இது போன்ற பேரிழப்பு இனி எப்போதும் வேண்டாமென்று.

___ சாய் சேது____
∆∆∆************∆∆∆

14/04/2023

*********************************

கவிதை படைப்பு
சாய் சேது
*****""**"*"****

உயிரே!
உன் இதழ்களில் புன்னகையை
பார்க்கும்போது நான் வானில்
சிறகடிக்கிறேன்;

உன் கண்களில் நீர் காணும்போது
நான் தடுமாறித் தவிக்கிறேன்.

நீ மௌனமாய் இருக்கும் வேளையில்
நானொரு காவியத்தை படிக்கிறேன்;
நீ பேசத் தொடங்கும் போதில் நானொரு நாவலை படைக்கிறேன்.

உனது பார்வைக்கு தென்றல் காற்றையும் திரும்ப வைக்கும் காந்தம்
உண்டு;
உனது மொழிக்கு இறுதி மூச்சையும் தொடர வைக்கும் சக்தியுண்டு.

உன்னைப் பற்றிய நினைவுகளின் தாக்கம் இதயத்தில் முற்றுகை இடுவது உண்மைதான்;
உன்னைச் சுற்றிய கனவுகளின் ஓட்டம் குதிரையின் வேகத்தை விட கூடுதல் தான்.

இயற்கையை பொலிவிழக்கச் செய்யும் ஆற்றல் உனது தோற்றத்திற்கு உண்டு;
இலக்கியங்களை பின்னுக்குத் தள்ளும் சக்தி உனது வார்த்தைகளுக்கு உண்டு.

உன்னிடம் நான் கொண்ட உள்ளுணர்வு வந்து போகும் வழித்துணை நட்பல்ல;
என்னிடம் நம்பிக்கையை ஊட்டி
வளர்க்கும் வாழ்வுத் துணையின்றி
வேறல்ல .

*"""""*"'''''*''''"""*"''''"'"*"'"'''""*""""""*"""'''"*

Address

Ottai Pillayar Kovil Street
Chennai
600092

Alerts

Be the first to know and let us send you an email when sai sethu kavithaigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to sai sethu kavithaigal:

Share

Category