Speaking Prism Page

Speaking Prism Page Speaking Prism , a YouTube Channel & also a page deals with Social issues , Provides Awareness ,Satir

குட் நைட் - Good Night   வழக்கமான வரும் ஹீரோ , ஹீரோயின்,காதல் காமெடி, வில்லன், பேய், விவசாயம் என்ற உப்புமாக்களுக்கு நடுவ...
23/07/2023

குட் நைட் - Good Night

வழக்கமான வரும் ஹீரோ , ஹீரோயின்,காதல் காமெடி, வில்லன், பேய், விவசாயம் என்ற உப்புமாக்களுக்கு நடுவில் ஒரு wholesome experience.

படம் ஆரம்பித்த முதல் நொடியில் இருந்து கடைசி போடும் Title Card வரையும் தரம். சுருட்டி போட்ட ஜட்டி, அரியரை புறணி சொல்லும் அம்மா, வாடா போடா என கணவனை அழைக்கும் மனைவி, நெரிசலான வீட்டில் பகலில் நடக்கும் ரொமான்ஸ், இயல்பான காதல், கெட்ட வார்த்தை பேசும் அக்கா இப்படி எல்லாம் யதார்த்தமாகமும் வித்தியாசமாகவும் இருந்தது பலம்.

இப்படி அக்கா - தம்பி , மாமா - மச்சான் கிடைப்பதெல்லாம் வரம்.

கிளைக்கதையாக வரும் பாலாஜி சக்திவேல் கேரக்டர் கூட அப்ளாஸ்.

எல்லோரும் குறை இருக்கும், அதுக்காகலாம் விட்டுட்டு escape ஆகி ஓடிற முடியாது.வாழனும்.
டாட். இன்னும் படம் பாக்கலனா இப்பவே U Turn போட்டு போய் பாத்துருங்க‌. Weekend ல Family ஓட ஒன்னா சேர்த்து பாக்க பக்கா Package.

# LatePost.

30/06/2023
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் "தேவர் மகன்" படத்தை பற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்த கருத்துக்கள் விவாத பொருளாக...
23/06/2023

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் "தேவர் மகன்" படத்தை பற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்த கருத்துக்கள் விவாத பொருளாகியுள்ளது.

மாரி பக்குவமா softஆ பேசுனாரு. கமல் கன்னிஸ் இதுக்கே இப்படினா..மாரி இதே contextஅ ஒரு கடிதமா எழுதிருப்பாரு...படிச்சா செத்துருவீங்க போல...

எல்லாரும் சொல்றதுதான்...தேவர் மகன் செம படம்.. screenplay class...அதுனால படத்துல உள்ள பிற்போக்குத்தனம் , சாதிய பெருமை பற்றி பேசாம இருக்க நானும் கமல் கன்னி இல்லையே...ஆண்டவர் எது பண்ணாலும் சரி தான் mode இங்க இல்ல.

தேவர் மகன் படத்தை பத்தி நம்மள போஸ்ட் போட்ருக்கோம்... பாருங்க.

இப்ப மாரி மேல் வர்ற விமர்சனத்துல பாதி சாதி வன்மம் , பார்ப்பனிய ஆதரவிலிருந்து வருகிறது.
கூட சங்கீஸ், சாதி சங்கம் எல்லாம் சேருது...செம்மல்ல...

அப்படித்தான் பேசுவோம்... கேளுங்க..... ஆண்டவரின் கலையை மதிக்கிறோம்.
சாதிய வன்மத்தை அல்ல.
அவரது முற்போக்கு வேசங்கள் அம்பலப்பட்டு நாளாகிறது.

பல சாதி கலவரம் நடக்க காரணமாக இருந்த தேவர் மகனை விட , எல்லாரையும் யோசிக்க வச்ச பரியேறும் பெருமாள் தான் நல்ல படம்.

இந்த பர்னிச்சரை உடைத்தற்காகவே மாரிக்கு முத்தங்கள்.

ஏன் ?சீட்டு ...சீட்டு...னு கேக்குற நடத்துனர்கள் இருக்காங்க...Simple. யாருக்கு எப்படி எது வசதியோ அப்படியே வார்த்தைகள பயன்...
22/06/2023

ஏன் ?

சீட்டு ...சீட்டு...னு கேக்குற நடத்துனர்கள் இருக்காங்க...
Simple. யாருக்கு எப்படி எது வசதியோ அப்படியே வார்த்தைகள பயன்படுத்தட்டும். வேல நடக்கனும்.. அவ்ளோதான்.
அப்பறம் இப்படி பேசுனா தமிழ் மொழிய காப்பாத்த முடியனும்னு உருட்ட வேண்டாம். தமிழ் வாழும்.

உண்மையில், இந்த சமுதாயத்துக்கு நல்லது பண்ணனும்னு ஐயா நினைச்சா...அப்பாவி இளைஞர்களுக்கு சாதி வெறி ஊட்டாம...தப்பா வழிநடத்தாம...படிக்க சொல்லுங்கயா....அவனுக இட ஒதுக்கீடு வேணாம்னு பேசிட்டு திரியுறானுக...

தமிழ் மொழிய காப்பதுறத விட சாதி காப்பாத்தாம இருக்குறத முக்கியம். ரொம்ப complicate பண்ணிக்காதீங்க ஐயா.

அண்ணே கால் நடுங்குதுணே...பயப்படுறியா குமாரு...? நடுங்கத்தானே செய்யும்திமுக, அதிமுக விற்கு வாக்களிக்காத நடுநிலை வாக்காளர்...
18/06/2023

அண்ணே கால் நடுங்குதுணே...பயப்படுறியா குமாரு...? நடுங்கத்தானே செய்யும்
திமுக, அதிமுக விற்கு வாக்களிக்காத நடுநிலை வாக்காளர்களை ஏமாற்றி வாக்கு வங்கி வளர்க்கும் அண்ணனுக்கு, போட்டிக்கு ஆள் வந்தால் பதறத்தானே செய்யும்?

அண்ணே நீ ஒன்னும் பயப்படாதே...நீயும் சரி..உங்க தம்பி விஜயும் சரி ஆட்சிக்குலாம் வரமுடியாது.டாட்.

அதுசரி... அண்ணனுக்கு திரை பின்புலம் இல்லை...அண்ணன் நெய்தல் படை வீரன்...
எது எந்த ஊருலயா ?...போடா வந்தேறி...

இன்றைய ஹாட்‌ டாபிக் விஜய்.நியூஸ் சேனல்கள் கொடுக்கும் அதிக கவனம் தான் யோசிக்க வைக்கிறது. Same Script.MGR Formula. விஜயகாந...
17/06/2023

இன்றைய ஹாட்‌ டாபிக் விஜய்.

நியூஸ் சேனல்கள் கொடுக்கும் அதிக கவனம் தான் யோசிக்க வைக்கிறது. Same Script.
MGR Formula. விஜயகாந்த், ரஜினி, கமல் வரிசையில் இப்போது விஜய்.

மற்றவர்களை போல் இல்லாமல் அம்பேத்கர், பெரியார், காமராஜர் குறிப்பிட்டு பேசியது பாராட்டதக்கது என்றாலும் different script என்றே தோன்றுகிறது.காமராஜருக்கு அடுத்து ஒன்றுமே நடக்கவில்லையா என்ன?

விவரம் புரியாமல் விஜய் fans குதிக்க வேண்டாம். இது ஒன்றும் audio launch இல்லை அரசியல். Cool.

வரும் காலங்களில் எதுவும் சரியில்லை என ஷங்கர் பட பாணியில் வண்டி வந்து நிற்கும். விஜய் அல்ல விஜய் சேதுபதியே வந்தாலும் மக்களுக்கான அரசியலை, உண்மையை பேசினாலே நிற்க முடியும். இல்லையென்றால் கரைந்து போவார்கள். தமிழக மக்கள் அரசியல் தெளிவானவர்கள்.

யார் வேண்டுமானாலும் வரட்டும்.
களம் காணட்டும். Wait பண்ணி பாப்போம். Machine nikkatum

நம்ம கொடி பறக்குற‌ காலம் இங்க வந்தாச்சு...!வழக்கமான மாரி அசத்தியிருக்கிறார்.கல்பனாவின் சோக குரலும்...அதை தொடர்ந்து கீர்த...
13/06/2023

நம்ம கொடி பறக்குற‌ காலம் இங்க வந்தாச்சு...!

வழக்கமான மாரி அசத்தியிருக்கிறார்.

கல்பனாவின் சோக குரலும்...அதை தொடர்ந்து கீர்த்தியின் அந்த பார்வை...அந்த மேளம்....ரக்ஷிதா உள்ளிட்ட மூவரின் அதிரும் குரல்...கீர்த்தியின் துள்ளல், நடனம், நடுவில் வரும் கண் அடித்தல் 💚

ரகுமான் இசையில், யுகபாரதி யின் அற்புதமான வரிகளில் ஒரு டீரீட்.

நம்ம கொடி பறக்குற காலம் இப்ப வந்தாச்சு னு வரிகள் வரும்போது புல்லரிக்கிறது. எப்போதும் ஒடுக்கப்பட்டோரின் குரலாக மாரியின் படைப்புகள் இருக்கும்.போலவே இதுவும்.
இனிவரும் எல்லா பெண்களின் கலை நிகழ்ச்சிகளிலும் இடம்பெறும்.

மாமன்னன் ஆள்வான்.
மீண்டும் எதிர்பார்ப்பு எகிறிருகிறது.
வாழ்த்துக்கள் மாரி. குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

பேயுக்கும் பேயுக்கும் சண்ட 🤣
13/06/2023

பேயுக்கும் பேயுக்கும் சண்ட 🤣

Miss You Thalaiva 😍
03/06/2023

Miss You Thalaiva 😍

Happy Birthday Raja Sir💥
02/06/2023

Happy Birthday Raja Sir💥

Address

Near Kamarjar Statue
Alangudi
622301

Alerts

Be the first to know and let us send you an email when Speaking Prism Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Speaking Prism Page:

Share