Isra Educational and Cultural Centre-Kalkudah

Isra Educational and Cultural Centre-Kalkudah This is the official facebook of Isra Education and cultural Centre-Kalkudah

பெண்களுக்கான தஜ்வீத் பாடநெறிகாலம்: 06 மாதங்கள்பிரதி சனிக்கிழமை பி.ப 4.00 - 5.30 வரைவளவாளர்:மெளலவியா M.Y.I.ஜாரியா (ஸஹ்ராவ...
30/10/2017

பெண்களுக்கான தஜ்வீத் பாடநெறி

காலம்: 06 மாதங்கள்

பிரதி சனிக்கிழமை பி.ப 4.00 - 5.30 வரை

வளவாளர்:
மெளலவியா M.Y.I.ஜாரியா (ஸஹ்ராவியா)

இடம்:
இஸ்ரா கல்வி கலாசார நிலையம்.
ஓட்டமாவடி.

✅வயது வரையறைகள் கிடையாது.
✅வரையறுக்கபட்டவர்களே சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதால் முற்பதிவு செய்து கொள்ளவும்.
✅ பாடநெறி கட்டணம் 3000/=

பாடநெறி முடிவில் பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும்.

குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
(சூரா முஸம்மில் : 04)

பதிவுகளுக்கு:
0652257164, 0778526888

முடிவுத்திகதி:
10.11.2017

ஏற்பாடு:
பெண்கள் பிரிவு
இஸ்ரா கல்வி, கலாசார நிலையம்
ஓட்டமாவடி.

25/08/2017
10/05/2017

ஹதீஸ்துறை மேதை இமாம் அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பிறகும் அறிவு அமர்வொன்றை (ஹலகா) நடாத்தி வந்தார்.

நிறையப் பேர் அந்த அமர்வில் கலந்து கொள்ளும் போது,தனது உள்ளம் மகிழ்ச்சியடைவதாகவும், குறைந்த எண்ணிக்கையினரை காண்கின்ற போது,கவலையால் தனது உள்ளம் சுருங்கிவிடுவதாகவும் உணர்ந்து கொண்ட இமாம் அப்துர் ரஹ்மான்; தனது நிலையை பிஷ்ர் இப்னு மன்ஸூர் என்ற இன்னொரு இமாமிடம் முறையிடுகின்றார்..

இதனை கேட்ட பிஷ்ர் இப்னு மன்ஸூர் அவர்கள் பின்வருமாறு அறிவுரை வழங்குகின்றார்கள்.

"நீர் நடாத்துகின்ற அந்த அமர்வு #மோசமான அமர்வு. அதனை விட்டும் ஒதுங்கிச் சென்று விடு.திரும்பவும் அதற்கு சமூகமளிக்காதே! ஏனெனில்,அல்லாஹ்வுக்காக நீர் அதனை செய்யவில்லை"

ஆட்கள் நிறையப் பேர் சேர்ந்திருக்கின்றார்கள் என்பது தஃவாவின் வெற்றிக்கான அளவீடும் அல்ல.குறிகாட்டியும் அல்ல. எண்ணிக்கை,பிரமாண்டம்,நிறைந்த கைதட்டல்கள் எம்மில் தாக்கம் செலுத்திவிடக் கூடாது.

21/04/2017
13/04/2017

காபிலா தஅவிய்யா - 2017
தஃவா நிகழ்ச்சிகள்

காலம்: 14.04.2017 (வெள்ளிக் கிழமை)

பொதுத்தலைப்பு:
"றமழானுக்கு தயாராவோம்" (தக்வா,ஆன்மீகம்,தௌபா)

ஜும்ஆ பயான்கள்
----------------------------------

* முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல்.
வாழைச்சேனை
அஷ்ஷெய்ஹ்.எம்.எல்.எம்.இர்ஷாத் (யெமனி)

* முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல். ஓட்டமாவடி
அஷ்ஷெய்க் ஏ.எம்.அக்ரம் (நளீமி)
பணிப்பாளர்
அல் மனார் அறிவியற் கல்லூரி

* மீரா ஜும்ஆ பள்ளிவாயல்
T.M.M.அன்ஸார் (நளீமி)
உதவி பிரதேச செயலாளர்

பொது பயான்கள்
---------------------------------

* இஸ்ரா பள்ளிவாயல்
-அஸரின் பின் பெண்களுக்கு-
By MTM.றியாஸ் (நளீமி),
இஷாவின் பின் ஆண்களுக்கு-
By MLM.இர்ஷாத் (யெமனி)

* மஸ்ஜிது உம்மு நூர் வளாகம்.
பக்ரு கிராம வீட்டுத் திட்டம். மாஞ்சோலை
- இஷாவின் பின் ஆண்களுக்கும் பெண்களுக்கும்
By ELM.ருஸ்லி(நளீமி)

அனைவரும் கலந்து பயன்பெறுங்கள்

ஏற்பாடு-
தஃவா பகுதி,
இஸ்ரா கல்வி கலாசார நிலையம்
(ஜமாஅதுஸ் ஸலாமா-கல்குடா)

31/08/2016

. السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
🕋துல் ஹஜ்ஜின் முதல் 10 நாட்கள்🕋
++++++++++++++++++++++
ஜமாஅதுஸ் ஸலாமாவின் அனுசரணையுடன் இஸ்ரா கல்வி, கலாசார நிலையம் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு சொற்பொழிவு நிகழ்வுகள்.

🗓(02.09.2016 வெள்ளிக்கிழமை)
〰〰〰〰〰〰〰〰〰
ஆண்களுக்கான விஷேட சொற்பொழிவுகள்
🕌ஹைராத் பள்ளிவாயல். வாழைச்சேனை
⏰இஷாத் தொழுகையின் பின்
〰〰〰〰〰〰〰〰〰
பெண்களுக்கான விஷேட சொற்பொழிவுகள்
1.அல்ஹிதாயா மகாவித்தியாலயம். மீராவோடை
2.இஸ்ரா கல்வி, கலாசார நிலையம். ஓட்டமாவடி
⏰பி.ப 4.00 மணிக்கு
➖➖➖➖➖➖➖➖
அனைவரையும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

13/01/2016

மாதாந்த பொது பயான் நிகழ்ச்சி

தலைப்பு:
"தனிமனித உருவாக்கம் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்"

காலம்:
15.01.2016
வெள்ளிக்கிழமை இஷாவுக்குப் பின்னர்.

இடம்:
மஸ்ஜிதுல் இஸ்ரா,
ஹுதா வீதி,
ஓட்டமாவடி.

நிகழ்த்துபவர்:
ஈ.எல்.ருஸ்லி (நளீமி)

ஏற்பாடு:
ஜமாஅதுஸ் ஸலாமா
கல்குடா பிராந்தியம்.

அனைவரும் கலந்து பயன்பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

26/10/2015

ஜமாஅதுஸ் ஸலாமாவின் கல்குடா கிளையான இஸ்ரா கல்வி, கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் விஷேட சொற்பொழிவு நிகழ்ச்சி

தலைப்பு:
"சமகால முஸ்லிம் உலகு"

நிகழ்த்துபவர்:
அஷ்ஷெய்க் ரவூப்ஸெய்ன்(m.phil)

காலமும் இடமும்:
30.10.2015 வெள்ளிக்கிழமை

#ஆண்களுக்கு
ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் இஷாவுக்குப் பின்னர்.

#பெண்களுக்கு
மீராவோடை அல்ஹிதாயா மஹாவித்தியால பிரதான மண்டபத்தில் பி.ப 4.00 மணிக்கு

எனவே இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

20/10/2015

பலஸ்தீன் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பில்.....!

பலஸ்தீன் எரிந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் அராஜகம் மீண்டும் வெளிப்பட்டு விட்டது. புனித பூமியில் யூத வெறியர்கள் தமது அட்டூளியங்களை மேடையேற்றி வருகிறார்கள். சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரையும் கல் நெஞ்சம் படைத்தவர்கள் இலக்கு வைக்கின்றார்கள்.
இது ஏழு தசாப்தங்களைத் தாண்டிய ஒரு அற்புதமான புனித போராட்டம். புனித பலஸ்தீனப் பூமியை மீட்டெடுப்பதற்கு பலஸ்தீனப் பூர்வீக குடிகள் ஆழ்ந்து விசுவாசிப்பது புனித போராட்டமே. இது வரை காலமும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள் அனைத்தும் பலஸ்தீன போராட்டத்திற்கு சாதகமாக அமையவில்லை. எதிரிகளையே பலப்படுத்தியது.
பலஸ்தீன் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பில் உள்ளது. அதனை மீட்பதற்காகப் உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். இக்கடமையில் நாம் எப்படிப் பங்கெடுக்கலாம்.
1. குறைந்த பட்சம் நாம் பலஸ்தீன் போராளிகளுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தல்
2. நடைபெறும் நிகழ்வுகளை சரியாக அறிந்து கொள்ளல்
3. பலஸ்தீனப் போராட்டம் ஒரு மனிதாபிமானப் போராட்டம் என்ற வகையில் மக்களுக்கு (முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள்) இதன் உண்மைத் தன்மையை விளக்கல்
4. யூதர்களின் நாசகாரச் செயற்பாடுகளையும், அவர்களால் நாட்டுக்கும், உலகிற்கும் ஏற்பட்ட, ஏற்படவுள்ள தீமைகள் பற்றி மக்களுக்கு (முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள்) விழிப்பூட்டல்.
5. இவை பற்றி பத்திரிகைகளில் எழுதுவதுடன் இது பற்றி எழுதப்பட்ட நூல்கள், ஆக்கங்களை மக்களுக்கு விநியோகித்தல்
6. இது தொடர்பான கருத்தரங்குகளை நடாத்தல்.

உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத்
தலைவர்
ஜமாத்தஸ் ஸலாமா
20.10.2015

Address

Hutha Road
Oddamavadi

Alerts

Be the first to know and let us send you an email when Isra Educational and Cultural Centre-Kalkudah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Isra Educational and Cultural Centre-Kalkudah:

Share