Ceylon Times Network

Ceylon Times Network உலகம் சொல்லும் செய்திகள் உடனுக்குடன்...
(2)

போலந்தில் கூடுதலாக 5000 அமெரிக்க வீரர்கள் நிறுத்தம்ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக அற...
23/05/2026

போலந்தில் கூடுதலாக 5000 அமெரிக்க வீரர்கள் நிறுத்தம்

ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக அறிவித்த சில வாரங்களிலேயே, போலந்து நாட்டுக்குக் கூடுதலாக 5,000 வீரா்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தாா்.

இதுதொடா்பாக ட்ரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘அண்மையில் போலந்து ஜனாதிபதியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கரோல் நவ்ராக்கியின் வெற்றி மற்றும் அவருடனான சுமுகமான உறவின் அடிப்படையில், அந்நாட்டுக்குக் கூடுதலாக 5,000 அமெரிக்க வீரா்களை அனுப்ப முடிவெடுத்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டாா்.

ஈரான் போரில் ஐரோப்பிய நாடுகள் போதிய ஆதரவு அளிக்கவில்லை என்றும், பாதுகாப்புச் செலவினங்களை நேட்டோ நாடுகள் சரியாகப் பகிா்ந்துகொள்வதில்லை என்றும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறாா்.

குறிப்பாக, ஈரான் போரில் அமெரிக்காவுக்குப் போதிய வியூகம் இல்லை என ஜொ்மனி பிரதமா் ஃப்ரைட்ரிச் மொ்ஸ் விமா்சித்ததைத் தொடா்ந்து, அந்நாட்டில் இருந்து 5,000 படை வீரா்களைத் திரும்பப் பெற ட்ரம்ப் உத்தரவிட்டாா். அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினா்கள் கட்சி சாா்பின்றி இதை எதிா்த்தனா்

ட்ரம்ப்பின் உத்தரவையடுத்து, போலந்துக்குச் செல்லவிருந்த சுமாா் 4,000 வீரா்கள் அடங்கிய அமெரிக்க படையினரின் பயணம் கடந்த வாரம் திடீரென இரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவின் இந்நடவடிக்கை அதிா்ச்சியளிப்பதாக போலந்து அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், ட்ரம்ப்பின் இத் திடீா் அறிவிப்பு, ஸ்வீடனில் நடைபெற்று வரும் நேட்டோ வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் விவாதப் பொருளானது. ட்ரம்ப்பின் அறிவிப்பைப் போலந்து, நேட்டோ நாடுகள் வரவேற்றாலும், அமெரிக்காவின் இந்த அடுத்தடுத்த நிலைப்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக ஸ்வீடன் கவலை தெரிவித்தது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ இதை மறுத்ததுடன், உலகளாவிய பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்ப படைகளை மாற்றியமைப்பது வழக்கமான ஒன்றுதான் என்று விளக்கமளித்தாா்.

தற்போது ஐரோப்பாவில் சுமாா் 80,000 அமெரிக்க வீரா்கள் உள்ளனா். அமெரிக்க விதிகளின்படி, நேட்டோ நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் ஐரோப்பாவில் உள்ள படைகளின் எண்ணிக்கையை 76,000க்குக்கீழ் குறைக்கக் கூடாது.

ட்ரம்ப்பின் முந்தைய படைக்குறைப்பு உத்தரவு இந்த வரம்பை மீறும் வகையில் அமைந்திருந்த நிலையில், தற்போது போலந்துக்கு கூடுதல் படைகளை அனுப்புவதன் மூலம் அந்த எண்ணிக்கை சமன் செய்ய ட்ரம்ப் நிா்வாகம் கருதுகிறது.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் லெபனானில் 10 பேர் உயிரிழப்புஇஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தற்காலிக போர்நிறுத...
23/05/2026

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் லெபனானில் 10 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இருதரப்பு எல்லைகளில் மோதல் நீடித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தெற்கு லெபனான் பகுதியில் நேற்று இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுமி மற்றும் 6 மருத்துவ உதவியாளர்கள் உட்பட 10 பேர் கொடூரமாக உயிரிழந்தனர்.

தெற்கு லெபனானில் உள்ள ஹனுயே கிராமத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் இஸ்லாமிய சுகாதார சங்கத்தைச் சேர்ந்த 4 மருத்துவ உதவியாளர்கள் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, டயர் மாகாணத்தில் உள்ள டெய்ர் குவானன் அல் நஹ்ர் கிராமத்தில் இஸ்ரேல் மற்றொரு வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் சிரியாவைச் சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் ஹிஸ்புல்லாவின் நட்பு அமைப்பான அமல் இயக்கத்தைச் சேர்ந்த 2 மருத்துவ உதவியாளர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெ...
23/05/2026

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் தெரனியாகலை, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, அயகம, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு வெளியேறுவதற்கான 'சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்கை பகுதிகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பகுதிக்கும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, ஹொரணை, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, கிரியெல்ல, எலபாத, கலவனை, நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் மீரிகம மற்றும் திவுலபிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த மற்றும் மத்துகம, கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ ஆகிய பகுதிக்கும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுஅமெரிக்காவுக்குள் தற்காலிக விசாக்கள் மூலம் நுழைந்த வெ...
23/05/2026

தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடு

அமெரிக்காவுக்குள் தற்காலிக விசாக்கள் மூலம் நுழைந்த வெளிநாட்டுப் பிரஜைகள் அங்கு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பிக் சென்றே விண்ணப்பிக்க வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சட்டப்பூர்வ குடிவரவு முறைமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் குடிவரவு விதிகளைக் கடுமையாக்கவும், நீண்ட காலக் குடியுரிமைக்கான வழிகளை முடக்கவும் மேற்கொண்டு வரும் பரந்த அளவிலான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம், சில மாணவர்கள் கலாசாரப் பரிமாற்ற வருகையாளர்கள், ஊடகவியலாளர்களின் விசா காலத்தை ட்ரம்ப் நிர்வாகம் குறைத்திருந்ததோடு, ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் தற்போது வரை 100,000 இற்கும் அதிக விசாக்களை வெளியுறவுத்துறை இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இந்தியா பயணம்அமெரிக்க வெளிவிவகார துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நான்கு நாள் பயணமாக இந்தியா சென...
23/05/2026

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இந்தியா பயணம்

அமெரிக்க வெளிவிவகார துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நான்கு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.

கொல்கத்தாவுக்கு சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா நிறுவிய கருணை பணியாளர் அமைப்பின் தலைமையகத்தை அவர் பார்வையிட்டார்.

பின்னர், கொல்கத்தாவின் புகழ்பெற்ற விக்டோரியா நினைவகத்திற்கும் சென்றார்.இந்த உயர்மட்ட வருகையை முன்னிட்டு, கருணை பணியாளர் அமைப்பின் தலைமையகம் மற்றும் விக்டோரியா நினைவகம் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்க் ரூபியோ, டெல்லியில் பிரதமர் மோடியையும் இன்று சந்தித்து பேசுகிறார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

மத்தியகிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச்சூழலால் சர்வதேச அளவில் எரிவாயு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்தியா மசகு எண்ணெய் கொள்முதலுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வரும் சூழலில், அமைச்சரின் இந்தியா பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சீரற்ற காலநிலை - 7,700க்கும் மேற்பட்டோர் பாதிப்புநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை...
23/05/2026

சீரற்ற காலநிலை - 7,700க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

58 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் 6 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை (23) முடிவடைந்த 24 மணி நேரத்தில், கம்பஹா மாவட்டத்தின் அலவல பகுதியில் அதிகபட்சமாக 137.8 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொடவில் 117.4 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த பகுதியிலிருந்து 12 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மலேஷிய பிரதமர் வாழ்த்துதமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தொலைபேசி வாயிலாக பேசிய மலேசிய பிரதமர் அன...
23/05/2026

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மலேஷிய பிரதமர் வாழ்த்து

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தொலைபேசி வாயிலாக பேசிய மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மலேசிய பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: -

இன்று எனது நண்பர் முதலமைச்சர் விஜய்யுடன் உரையாடி சமீபத்திய விவரங்களைப் பகிர்ந்து கொண்டேன். தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஏற்றுள்ள இந்தப் பெரும் பொறுப்புக்காக மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டேன்.

வரும் செப்டெம்பர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ள இந்தியா வருவது குறித்தும், வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாட்டுக்கு வருகை தருவேன் எனவும் விஜய்யிடம் தெரிவித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற அதிரடி ஆட்டநாயகனின் புதிய சாதனை சௌதப்பிரிக்க வீரர் Heinrich Klaasen இந்த ஆண்டு Indian Pr...
23/05/2026

சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற அதிரடி ஆட்டநாயகனின் புதிய சாதனை

சௌதப்பிரிக்க வீரர் Heinrich Klaasen இந்த ஆண்டு Indian Premier League தொடரில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நான்காவது இடம் அல்லது அதற்கு கீழ் பேட்டிங் செய்யும் வீரர்களில், ஒரே T20 தொடரில் 600 ஓட்டங்களை கடந்த முதல் வீரராக அவர் உருவெடுத்துள்ளார். மேலும், அவருக்கு இன்னும் மூன்று போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் அவர் 1000 ஓட்டங்களை கடக்க கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள Rishabh Pant, 2018 IPL தொடரில் 579 ரன்களை 175.98 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார்.

ஆனால் இந்த IPL தொடரில் Klaasenனின் முழு அதிரடி ஆட்டத்தை இன்னும் ரசிகர்கள் முழுமையாக காணவில்லை என்று சிலர் கருதுகின்றனர்.

இதற்கான முக்கிய காரணம், Klaasen மிகவும் சக்திவாய்ந்த மேல் வரிசை பேட்ஸ்மேன்களுக்கு பின்னர் களமிறங்குவதும், அனுபவமற்ற கீழ் வரிசை அணியினருக்கு முன் ஓவர்கள் முடியும் வரை விக்கெட் இழக்காமல் விளையாட வேண்டிய சூழலும் ஆகும்.

அவர் அணிக்குத் தேவையான நிலைத்து நின்று தன்மை மற்றும் குறைந்த பந்துகளில் அதிக ஓட்டங்களை வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். அதை அவர் சிறப்பாக செய்து வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிளாசன் சற்று மந்தமான காலத்தை சந்தித்திருந்தார். ஆனால் IPL-இல் உயர்தர பயிற்சிகளும், புதிய பொறுப்பும் அவரை மீண்டும் பழைய அதிரடி ஆட்டத்துக்கு கொண்டு வந்துள்ளன.

குறிப்பாக Royal Challengers Bengaluru அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில், கிளாசன் தனது பழைய அதிரடி ஆட்டத்தை ரசிகர்களுக்கு மீண்டும் காட்டினார். ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய அவர், பின்னர் வெறும் 15 பந்துகளில் 46 ரன்கள் குவித்து போட்டியின் போக்கையே மாற்றினார்.

Josh Hazlewood வீசிய ஓவரில் அதிரடி காட்டி பந்துவீச்சாளரை திணறடித்தார் அதுமட்டுமில்லாமல் Josh Hazlewoodன் முழு T20 வாழ்க்கையிலேயே மிகவும் அதிக ரன்கள் விட்ட ஓவராக கிளாசன் அந்த ஓவரை மாற்றினார்

மேலும், Suyash Sharma வீசிய பந்தை பின்னங்காலில் நின்றபடியே extra cover திசையில் அடித்த சிக்ஸ், கிளாசனின் அபார சக்தியை வெளிப்படுத்தியது. இது அவரை உலகின் மிகவும் அச்சுறுத்தலான நடுப்பகுதி T20 பேட்ஸ்மேன்களில் ஒருவராக மீண்டும் நிரூபித்துள்ளது.

பிளேஆஃப் சுற்று தொடங்கும் நேரத்தில் கிளாசன் தனது உச்ச ஆட்டத்துக்கு திரும்பியிருப்பது, எதிரணி அணிகளுக்கு பெரிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

இவரின் அதிரடியால் sunrises அணியானது 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

களுகங்கை தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கைகளுகங்கையின் ஆற்றுப்படுகைப் பகுதிகளில் பதிவான கடும் மழைவீழ்ச்சியால், அதன...
23/05/2026

களுகங்கை தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

களுகங்கையின் ஆற்றுப்படுகைப் பகுதிகளில் பதிவான கடும் மழைவீழ்ச்சியால், அதன் தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று முற்பகல் 8.30 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெடித்துச் சிதறிய நிலக்கரிச் சுரங்கம் - 82 பேர் உயிரிழப்புவட சீனாவின் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 8...
23/05/2026

வெடித்துச் சிதறிய நிலக்கரிச் சுரங்கம் - 82 பேர் உயிரிழப்பு

வட சீனாவின் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று (22) அந்நாட்டு நேரப்படி இரவு 7.29 இற்கு ஷாங்க்ஸியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் அந்நேரத்தில் 247 ஊழியர்கள் அங்கு பணியாற்றியுள்ளனர்.

குறித்த இடத்தில் மீட்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் – சஜித்எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய...
23/05/2026

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் – சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகரான இசபெல் கெத்தரின் மார்ட்டினுக்கும் (Isabelle Catherine Martin) இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நீடித்த இன நல்லிணக்கம் தொடர்பாகவும் இரு தரப்பினரும் இங்கு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாக காணப்படுகின்றது என்று குறிப்பிட்டு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தினார்.

இந்த இருதரப்பு சந்திப்பின்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினும் இலங்கை எதிர்கொள்ளும் பேரண்டப் பொருளாதார சவால்கள் குறித்தும், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுக்கு பின்னர் நாட்டை பாதித்த சமூக பொருளாதார சவால்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடினர்.

இலங்கையில் தற்சமயத்தில் தாக்கத்திற்குள்ளான மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு துரித நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் வாழ்வாதார மீட்சிக்கு முன்னுரிமை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், நாடாக மீண்டும் தலை நிமிர்வதற்கும், சேதமடைந்த சொத்துக்களை புனர்நிர்மாணம் செய்வதற்கும் உலகளாவிய ரீதியாக உதவிகள் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) தான் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் மீண்டும் இங்கு சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே, கனடாவின் வலுவான காலநிலை, நிதி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, காலநிலை- ஸ்மார்ட்- கமத்தொழிலை (climate-smart agriculture) வலுப்படுத்துதல், நிலைபேறான காணி பயன்பாடு மற்றும் நீரேந்து முகாமைத்துவத்தை மேம்படுத்தல் மற்றும் இலங்கையில் மிகவும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய வறண்ட காலநிலையைக் கொண்ட புவியியல் பகுதி முழுவதும் (உலர் வலயம்) இருக்கும் பெண் விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கனேடிய டொலர் 5 மில்லியன் வேலைத்திட்டமான “ஆக்ஸஸ் ஶ்ரீலங்கா” திட்டத்தை பாராட்டினார்.

(ஞான பிரசாந்தன்)

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Times Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Ceylon Times Network:

Share