22/05/2025
மழையும் காதலும்
********************
கோடை காலம்
வெய்யில் அதிகம்.
ஆனாலும் மழை
பொழிய மறுக்கவில்லை.
வானம் கறுத்தது
காற்று குளிர்ந்தது.
கணப் பொழுதில்
கடும் மழை வந்தது.
எதிர் பாராத
இந்த மழையில்
நனைந்து போனவர்
பலருண்டு கண்டேன்.
காதலும் இந்த
மழையைப் போல்
வந்து போகிறது
நனைத்த படி இங்கே!
அதில் நனைந்தவர்
தோய்ந்து முழுகி
நீந்தி வந்ததாக நினைப்பு.
நனைந்தது மட்டுமே!
தோற்றுப் போகும்
காதலுக்கு இப்படி
நல்ல பெயரிருக்கும்.
மாற்றம் இதில் இல்லை.
அழுதிடும் காதலும்
அழுகிப் போகும்
மாம்பழமும் ஒன்றே
சுவைக்க முடியாது.
சோர்வை தூக்கி எறிந்து
வாழும் காதலும்
சவாலை எதிர்கொண்டு
நின்று கொள்ளும்.
தனக்கென்று ஒரு
தனிவழி கொள்ளும்.
தாகம் என்ற வழியில்
பசியாற்றத் தோன்றும்.
அடடா வந்தது
பெரும் மழை.
காலநிலை மாறியது
வானிலை கோபத்தால்.
காடிருந்தது நேற்று
கட்டிடக் காடாகி
கொதிக்கிறது இன்று.
காட்டுத் தீ கூடவே.
சாதியியல் அது போல
காதலை பற்றி
எரிந்து போகிறது.
என்று மாறுமோ இது.
ஆயிரம் ஆண்டுகளாக
தொடர்ந்து வருகிறது.
கொலைகள் நடந்தும்
கொஞ்சமும் மாறாது.
மழையும் மாறவில்லை
மதமும் மாறவில்லை
சாதியும் மாறவில்லை.
காதலும் கூட மாறவில்லை.
அங்கே ஊடாடி
வாழும் கோரமுகம்
மாறியதாக இல்லவே இல்லை.
மழையும் காதலும் கூட.
காற்றோடு கலந்து
மேனி வந்து மோதும்
ஈரமும் இருக்கின்றது
காதலில் காணலாம் எப்போதும்.
அனுபவித்து வாழ்ந்திட
வரம்புகள் கண்டு
கடந்திட நமக்கு வேண்டும்
தெரிந்திடத் தான் அறிவு.
பிரிந்து போகும் வரை
அறிந்து போகலாம்.
பிரிவை தவிர்த்து போக
தடைகள் அறிந்து போகலாம்.
மழையில் நனைந்து
கரங்கள் கோர்த்து
நீளமான பாதையில்
நடந்து பேசினால்
உடல் ஓடி ஆடை
நனைத்த மழையும்
காயும் தேகம் பட்டு
காதல் இதமாக வாழும்.
கனவுகள் நாளும்
வந்து போகும்.
மனதோடு மனது
கலந்து மகிழ்ந்திட.
வேற்றுமை விடுத்தொரு
வாழ்வு கிடைத்திங்கே
நாளை நலமாகும்
எண்ணம் ஈடேறும்.
காதலித்து கலியாணம்
செய்து விட்டுத் தான்
காதலை வைது கொண்டு
கோபம் காட்டுவார்கள்.
பாசத்துக்கு முன்னே
பரவசம் அடைந்து
பரபரப்பாகி தேடுவார்
காரணங்கள் பல.
காதலை அடியோடு
வெறுத்து நடப்பதாக
காட்டிய காட்சிகள்
காடாசி போன பின்னர்.
ஏமாற்றம் ஒன்று வந்திட
அதனால் கெடுத்தாரிங்கே
கொடுப்பதில்லை இழப்பு
மன்னிக்க கேட்டுத் தான்.
அவருக்கென்ன இங்கே
அவர் மனமொன்றும்
புண் பட்டதில்லை.
அவர் செயலால் இங்கே.
அதனால் அவர்
கடந்து போவார் அப்போது.
மழை போட்ட வெள்ளமாக
வம்பு செய்வது யாரோ?
நீரோடும் பாதையில்
கட்டிய மதிலும்
மாடி வீடும் சேர்ந்து
போட வைக்கும் வெள்ளம்.
மாரியில் மழையில் மூழ்கிய
நிலங்கள் மூழ்கிறது
கோடை மழையிலும்
இப்போது இங்கே கண்டேன்.
தானாய் பூக்கும்
காதல் பூவின் இதழுடைத்து
சேதம் செய்து போகும்
சொந்தம் படட்டும் பாடு.
வெந்த புண்ணில்
பாயும் வேலின் வலி
பட்டால் புரியும் நன்றே.
ஒருமுறை பட வேண்டும்.
மழையை மாற்றிய
வானிலை போல்
காலநிலையை மாற்றிய
வானிலை போல்.
காதலை மாற்றி
மடைபோட்டு வாழும்
மனிதரை என்னவென்பது.
மனிதருள் பூக்கும் பூ.
சிறுதுளி வெள்ளம்
காட்டாறாகி கடல் சேர
சின்ன சின்ன ஆசைகள்
சேர்த்து காதல் தோன்றும்.
சாகரம் போலாகிய
காதல் தேசத்தில்
வாழ்ந்திட பொருந்தும்
மழைக்கால தூறல்.
ஏற்றம் இறக்கம்
தேவையில்லை இங்கே.
வாழும் வகைக்கு வசதி
அது வேண்டும் கட்டாயம்.
இனியென்ன தடையுண்டு
காற்றில் பறந்து போக.
வாழ்வை காதலோடும் நீ
மழையோடும் வாழ்ந்து போ......... அன்புடன் நதுநசி
(W20.05.2025:1315)