03/04/2026
இன்று புனித வெள்ளி..🙏👇
******
கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்கள்; இன்றைய தினத்தை புனித வெள்ளியாக அனுஷ்டிக்கிறார்கள்.
இயேசுவின் பாடுகள், மரணம், என்பவற்றையும் இன்றைய நாளில் தியானிக்கிறார்கள்.
இன்றைய தினத்தில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் உண்ணா நோண்பிருந்து இறைவேண்டலில் ஈடுபடுகிறார்கள்.
தவக்காலத்தின் இன்றைய, இறுதி திருச்சிலுவைப் பாதையிலும் அடியார்கள் கலந்து கொள்கிறார்கள்.
தவக்காலம் என்பது, 40 நாட்களை உள்ளடக்கியதாகும். இது சாம்பல் புதன் என அழைக்கப்படும் திருநீற்று புதனுடன் ஆரம்பமானது.
தவக்காலத்தின், புனித வாரம், கடந்த குருத்தோலை ஜாயிறுடன் ஆரம்பமானது. நேற்றைய தினம் புனித வியாழன் ஆகும்.
இந்த தினத்தில்தான் இயேசு நாதர் தனது அப்போஸ்தலர்கள் 12 பேரின் கால்களை கழுவி தமது இறுதி இரவுணவை உண்டதாக வரலாறு கூறுகிறது.
அதேவேளை, நற்கருணை, குருத்துவம் என்பனவும் இதே தினத்திலேயே உருவானது என்பது அடியார்களின் நம்பிக்கையாகும்.
மனுக்குலத்தை பாவங்களிலிருந்து மீட்க உலகில் அவதரித்தவர் இயேசுபிரான் என்பது கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்களின் விசுவாசமாக இருக்கிறது.
புனித வார வழிபாடுகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதணைகளை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்களுக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#புனிதவெள்ளி #புனிதவியாழன் #அடியார்கள்
#குருத்தோலை #உயிர்த்தஞாயிறு #குருத்தோலைஜாயிறு #கத்தோலிக்க #கிறிஸ்தவ #இயேசுபிரான் #நம்பிக்கை #இயேசுவின்பாடுகள்