Ch/Sri Vadivambigai Hindu College

Ch/Sri Vadivambigai Hindu College school fb page

🙏🕉️ அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலய வருஷாபிஷேகம் 🕉️🙏 இறை அருளும் பக்தி ஒளியும் சூழ்ந்த புனித தருணம் ஸ்ரீ வடிவாம்பிகை இ...
23/05/2026

🙏🕉️ அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலய வருஷாபிஷேகம் 🕉️🙏
 இறை அருளும் பக்தி ஒளியும் சூழ்ந்த புனித தருணம் 

ஸ்ரீ வடிவாம்பிகை இந்துக் கல்லூரியின் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலய வருடாந்த வருஷாபிஷேக மகோற்சவம் 20.05.2026 அன்று மிகுந்த ஆன்மீக சிறப்புடனும் பக்தி உணர்வுடனும் நடைபெற்றது.

வேத மந்திர ஓசைகள் முழங்க, அபிஷேக ஆராதனைகள் சிறப்புற இடம்பெற்றுஅதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து இறை அருளைப் பெற்றனர்.

🌺 மலர் அலங்காரங்களால் மிளிர்ந்த ஆலய சூழலும்
🪔 தீபாராதனையின் தெய்வீக ஒளியும்
🎶 பக்தி நிறைந்த ஆன்மீக உணர்வையும் பரப்பின.

இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகம், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
🙏 “வினாயக பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறோம்.”

📢🏆🏆🏆இவ்வருடம்  எமதுசிலா/ வலயக்கல்வி பணிமனையில் வலயமட்ட தமிழ் தினப் போட்டிகள்   பிரதிக்கல்வி பணிப்பாளர் J.Hanitha (D.D.E)...
15/05/2026

📢🏆🏆🏆
இவ்வருடம் எமது
சிலா/ வலயக்கல்வி பணிமனையில் வலயமட்ட தமிழ் தினப் போட்டிகள் பிரதிக்கல்வி பணிப்பாளர் J.Hanitha (D.D.E) அம்மையார் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

👉 இம்முறை நடாத்தப்பட்ட தனி,குழு போட்டிகளில் பங்கு பற்றிய எமது பாடசாலை மாணவர்கள் பல போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்..

👉அதுமட்டுமல்லாது எமது மாணவர்கள் பங்கு பற்றிய சகல போட்டிகளிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம்
சிலாபம் வலயத்தில் இம்முறை போட்டிகளில் பங்கு பற்றிய 11 பாடசாலைகளில் எமது பாடசாலை முதலாம் இடத்தை பெற்றுள்ளமை மிகவும் பெருமைக்குரியது.

👉போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் உட்பட அயராத உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.🙏🙏

💥சிலாஸ்ரீ வடிவாம்பிகை  இந்துக் கல்லூரியில்  புதியதோர் செயற்றிட்டம்💥💥" உரிய முறையில் குப்பைகளை அகற்றுவதற்கான  பொறிமுறையை ...
08/04/2026

💥சிலாஸ்ரீ வடிவாம்பிகை இந்துக் கல்லூரியில் புதியதோர் செயற்றிட்டம்💥

💥" உரிய முறையில் குப்பைகளை அகற்றுவதற்கான பொறிமுறையை ஏற்படுத்தல்"💥

2024-2026 உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களினால் உயர்தரத்திற்கு பொறுப்பான ஆசிரியர் திருமதி k. மோகனமதி அவர்களின் முயற்சியினூடாக பாடசாலையின் அதிபர் திரு G. சசிகுமார் அவர்களின் வழிகாட்டலின் கீழ்
சூழல் நேயம் கொண்ட புதியதோர் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது..

பாடசாலையை சுத்தமான இடமாக வைத்திருப்பதற்காக மாணவர்களினால் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் போடாது அவற்றை உரிய முறையில் அகற்றுவதற்காக அதற்கென விசேடமான ஒரு பை(bag) தயாரிக்கப்பட்டு உயர்தரமாணவர்களினால் பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது..

இதன் பிரதான நோக்கம் எமது சூழலை சுத்தமாக வைத்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதுடன் பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை அகற்றுவதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

🌞பொங்கல் விழா 🌞 சிலா  /ஸ்ரீ  வடிவாம்பிகை இந்துக் கல்லூரியில் 2026/01/26 அன்று  பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட...
07/04/2026

🌞பொங்கல் விழா 🌞

சிலா /ஸ்ரீ வடிவாம்பிகை இந்துக் கல்லூரியில் 2026/01/26 அன்று பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அனைத்து வகுப்புகளுக்கிடையிலும் பொங்கல் வைக்கும் போட்டியும் இடம்பெற்றது.

"நன்றி மறவாமை" தமிழர்களின் பண்பாடாகும்.
எனவே சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக கொண்டாடப்படும் இப் பொங்கல் விழாவில் எமது சம்பிரதாயங்களை எடுத்துக்காட்டும் வகையில் அழகாக கோலமிட்டு ,வாழை மரம் நட்டு ,தோரணங்களால் அலங்கரித்து, அனைவரையும் களிப்பூட்டும் வகையில்இப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நமது பாரம்பரியத்தை கொண்டாடும் இந்த பொங்கல் விழாவிலே அனைவரினது மனங்களும் மகிழ்ச்சியால் நிரம்பட்டும்.🙏

🏆 2026 கால் கோள் விழா🏆எமது பாடசாலையில் 2026 இற்கான புதிய தரம் ஒன்று மாணவர்களை உள்வாங்கும் கால்கோள் விழாவும்,தரம் 6 இற்கா...
06/04/2026

🏆 2026 கால் கோள் விழா🏆

எமது பாடசாலையில் 2026 இற்கான புதிய தரம் ஒன்று மாணவர்களை உள்வாங்கும் கால்கோள் விழாவும்,
தரம் 6 இற்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவினை சிறப்பிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றிகள்🙏

❤️சிலா/ ஸ்ரீ வடிவாம்பிகை இந்துக் கல்லூரி எனும் எம் தாயகத்திலே 2026/01/08 அன்று  மார்கழி மாதக் குளிரில் மனுமகன்  அவதரித்த...
06/04/2026

❤️சிலா/ ஸ்ரீ வடிவாம்பிகை இந்துக் கல்லூரி எனும் எம் தாயகத்திலே 2026/01/08 அன்று

மார்கழி மாதக் குளிரில் மனுமகன் அவதரித்த மகிமையின் விழாவாகிய
🌲ஒளி விழா 🌲 எனும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் மதிப்பிற்குரிய திரு G .சசிகுமார் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது..

❤️அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிலாபம் வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி ஹனிதா அம்மையாரும் , பிரதம விருந்தினராக அருட்தந்தை Rev.Far.J நிர்மல் அடிகளாரும் கலந்து சிறப்பித்தார்கள்

❤️ இது
மதங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்க்கும் ஒரு விசேட நிகழ்வாகும். இதில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்து மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கலந்து சிறப்பித்தமை அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்..

🥇 அகில இலங்கை சிங்களப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம்! 🏆சிலாப/ஸ்ரீ வடிவாம்பிகை இந்துக்கல்லூரியின் தரம் 9 இல் கல்வி...
16/11/2025

🥇 அகில இலங்கை சிங்களப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம்! 🏆

சிலாப/ஸ்ரீ வடிவாம்பிகை இந்துக்கல்லூரியின் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவி கமலேந்திரன் தனீஷா அவர்கள் நேற்று (15.11.2025) நடைபெற்ற அகில இலங்கை இரண்டாம் மொழி சிங்களப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும், சிலாப வலயத்திற்கும், வடமேல் மாகாணத்திற்கும் பெரும் பெருமை தேடித் தந்துள்ளார்.

தனீஷா அவர்களின் இந்தச் சிறப்பான சாதனைக்காகப் பாடசாலைச் சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்! ✨👏

மேலும், மாணவியை அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்து வெற்றிக்கு வழிகாட்டிய சிங்கள மொழிப் பாட ஆசிரியர் திருமதி. வெரோனிகா த்ரிஷானி அவர்களுக்கும் எமது பாடசாலைச் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 🙏

இந்த வெற்றிக்குத் துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி!

தேசிய மட்டத் தமிழ் மொழி தினப் போட்டியில் பாவோதல் நிகழ்ச்சி 🏆​இன்று நடைபெற்ற தேசிய மட்டத் தமிழ் மொழி தினப் போட்டியில், பா...
05/10/2025

தேசிய மட்டத் தமிழ் மொழி தினப் போட்டியில் பாவோதல் நிகழ்ச்சி 🏆

​இன்று நடைபெற்ற தேசிய மட்டத் தமிழ் மொழி தினப் போட்டியில், பாவோதல் (பிரிவு மூன்று )நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டிய மாணவி
K. தனீஷாவுக்கு உளமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 🎉

​ அம் மாணவியின் இந்த மாபெரும் வெற்றிக்கு பயிற்சியளித்த ஆசிரியர்கள்
திருமதி.S. விஜயலக்ஷ்மி
திருமதி. M.அருந்ததி
ஆகியோருக்கு எமது விசேட நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏

​இவ் வெற்றியானது, எமது பாடசாலைக்கு மேலும் ஒரு பெருமையையும் புகழையும் சேர்த்துள்ளது என்பதில் நாம் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

வாணிவிழா 2025: சிலா/ஶ்ரீ வடிவாம்பிகை இந்துக்கல்லூரி! ​கடந்த 2025.10.02 அன்று எமது சிலா/ஶ்ரீ வடிவாம்பிகை இந்துக்கல்லூரியி...
04/10/2025

வாணிவிழா 2025:
சிலா/ஶ்ரீ வடிவாம்பிகை இந்துக்கல்லூரி!

​கடந்த 2025.10.02 அன்று எமது சிலா/ஶ்ரீ வடிவாம்பிகை இந்துக்கல்லூரியில் வாணிவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது
​விழாவை அலங்கரிக்கும் விதமாக, மாணவர்களின் மனதைக் கவரும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. அனைத்து மாணவர்களின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது! 👏👏

​இந்த இனிய வைபவத்தின் போது, எமது பாடசாலை ஆசிரியை மதிப்பிற்குரிய திருமதி கௌரீஸ்வரி அவர்கள், அனைத்து மாணவச் செல்வங்களுக்குமாக அன்னதானத்தை வழங்கிப் பேருதவி செய்தார். 🙏
​அன்னதானம் வழங்கி, வாணிவிழாவை மேலும் சிறப்புறச் செய்த திருமதி கௌரீஸ்வரி அவர்களுக்கு, கல்லூரிச் சமூகம் சார்பாக எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! 💐💐💐

🎉 சேவை நலன் பாராட்டலும், பிரியாவிடை நிகழ்வும்! 🎉​எமது சிலா/ஸ்ரீ வடிவாம்பிகை இந்துக் கல்லூரியில் அர்ப்பணிப்போடு சேவையாற்ற...
03/10/2025

🎉 சேவை நலன் பாராட்டலும், பிரியாவிடை நிகழ்வும்! 🎉

​எமது சிலா/ஸ்ரீ வடிவாம்பிகை இந்துக் கல்லூரியில் அர்ப்பணிப்போடு சேவையாற்றிய பெருமதிப்புக்குரிய ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்ட சேவை நலன் பாராட்டலும், பிரியாவிடை நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது!

​இடம்: சிலா/ஸ்ரீ வடிவாம்பிகை இந்துக் கல்லூரி
திகதி: 24.09.2025

​கல்லூரியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்விக்கும் அயராது பாடுபட்ட பின்வரும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டனர்:

💐​திருமதி. M. உதயகுமார் ஆசிரியை – அதிபராக, உப அதிபராக, உயர் தர ஆசிரியராகப் பணியாற்றியவர்.

💐​திருமதி. S.சந்திப்பிரியா ஆசிரியை – ஆரம்பப்பிரிவு ஆசிரியை.

💐​திருமதி. M. அருந்ததி ஆசிரியை – சங்கீதப் பாட ஆசிரியை.

💐​திருமதி. K.செல்வி ஆசிரியை – ஆங்கிலப் பாட ஆசிரியை.

​அவர்களின் அளப்பரிய சேவைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் எதிர்கால வாழ்கை செம்மையுற கல்லூரிச் சமூகம் வாழ்த்துகிறது! 🙏💐

பாடசாலையின் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக எமது பாடசாலை ஆசிரியர்களான K. மோகனமதி T.சோபிதா ...
11/09/2025

பாடசாலையின் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக எமது பாடசாலை ஆசிரியர்களான K. மோகனமதி T.சோபிதா இருவராலும் பாடசாலைக்கு White board அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அவர்களின் சேவைக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Address

Chilaw/Sri Vadivambiga Hindu College, Munneswarm,Chilaw
Chilaw
61000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ch/Sri Vadivambigai Hindu College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category