02/08/2026
இன்றைய தினம் காலை, கன்னியாகுமரியில், We the Leaders Foundation சார்பில் "சுத்தமான, வளமான தமிழகத்தை உருவாக்குவோம்" இயக்கத்தை, கடற்கரை தூய்மைப் பணி நிகழ்வுடன் தொடங்கி வைத்தோம். ஏராளமான இளைஞர்களும், தன்னார்வலர்களும், தங்கள் குடும்பங்களுடன் உற்சாகமாக இணைந்தது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. மாற்றத்தின் முன்னோடிகளாக இன்றைய இளைஞர்கள் நிற்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.
இயற்கை நமக்குக் கிடைத்த செல்வம் அல்ல; வருங்கால தலைமுறையிடமிருந்து நாம் கடனாகப் பெற்றிருக்கும் பொறுப்பு. கடலைக் காப்பதும், நிலத்தைக் காப்பதும், மரங்களை வளர்ப்பதும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.
இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழலைக் காக்கும் பணிகளில் அனைவரும் இணைவோம். சிறிய செயல்களே பெரிய மாற்றங்களை உருவாக்கும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, அதை முழுமையாக வளர்க்க உறுதியேற்போம். நம் இயற்கையைப் பாதுகாப்போம்; நம் தமிழ்நாட்டை பசுமையாக்குவோம்.