ஹைடெக் அன்பழகன் திமுக கவுன்சிலர்

  • Home
  • India
  • Dharapuram
  • ஹைடெக் அன்பழகன் திமுக கவுன்சிலர்

ஹைடெக் அன்பழகன் திமுக கவுன்சிலர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஹைடெக் அன்பழகன் திமுக கவுன்சிலர், Art, dharapuram, Dharapuram.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை   அணி...
03/06/2026

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பொழுது…

இன்று எனது 3-வது வார்டுக்கு உட்பட்ட பழையூர் மற்றும் காட்டூர் பகுதிகளில் பழுதடைந்த நிலையில் இருந்த போர்வெல்  மோட்டார் பொத...
29/05/2026

இன்று எனது 3-வது வார்டுக்கு உட்பட்ட பழையூர் மற்றும் காட்டூர் பகுதிகளில் பழுதடைந்த நிலையில் இருந்த போர்வெல் மோட்டார் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உடனடியாக சரி செய்யப்பட்டு, தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. உடன் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் ...
05/05/2026

கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.

15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.

தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.

ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.

உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.

19/04/2026

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் திருமதி.T. இந்திராணி அவர்கள் நகரக் கழக செயலாளர் Er.முருகானந்தம் BE,MC., அவர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு பொறுப்பாளர்கள் , கூட்டணி கட்சியினர் மற்றும் கழக உடன்பிறப்புக்களுடன் தாராபுரம் நகரத்தில் இன்று வாக்கு சேகரித்த பொழுது...

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #வெல்வோம்_ஒன்றாக #தமிழ்நாடு_தலைகுனியாது

ஐந்தாண்டுகளில் திராவிட மாடல் அரசு நிகழ்த்திய மகத்தான சாதனைகள் தொடர மீண்டும் கழகத்தை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராக உள்ள...
17/04/2026

ஐந்தாண்டுகளில் திராவிட மாடல் அரசு நிகழ்த்திய மகத்தான சாதனைகள் தொடர மீண்டும் கழகத்தை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராக உள்ள நிலையில் தொடர்ந்து அவர்களை சந்தித்து வருகிறோம்.

அந்த வகையில் காங்கேயம் தொகுதியில் போட்டியிடும் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் M.P.Saminathan அவர்களுக்கும், தாராபுரம் வெற்றி வேட்பாளர் மருத்துவர்.இந்திராணி அவர்களுக்கும் ஆதரவாக இன்றைய தினம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.

தென் மாநிலங்களை வஞ்சிக்கும் பாசிசவாதிகளின் சதி திட்டங்களையும் அவர்களின் தமிழ்நாட்டு சேவகர்களின் நயவஞ்சகத்தையும் எடுத்துரைத்தோம்.

சுயமரியாதை - மாநில உரிமையை காக்க மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்.

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் திருமதி.T. இந்திராணி அவர...
16/04/2026

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் திருமதி.T. இந்திராணி அவர்களுக்கு நகரக் கழக செயலாளர் திரு முருகானந்தம் அவர்களின் தலைமையில் , நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புக்களுடன் தாராபுரம் நகரம் 25-வது வார்டில் இன்று வாக்கு சேகரித்த பொழுது...

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #வெல்வோம்_ஒன்றாக #தமிழ்நாடு_தலைகுனியாது

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் திருமதி.T. இந்திராணி அவர...
16/04/2026

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் திருமதி.T. இந்திராணி அவர்களுக்கு நகரக் கழக செயலாளர் திரு முருகானந்தம் அவர்களின் தலைமையில் , நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புக்களுடன் தாராபுரம் நகரம் 30-வது வார்டில் வாக்கு சேகரித்த பொழுது...

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #வெல்வோம்_ஒன்றாக #தமிழ்நாடு_தலைகுனியாது

தீ பரவட்டும்!தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்க...
16/04/2026

தீ பரவட்டும்!

தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.

இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்!

கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள்

Address

Dharapuram
Dharapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஹைடெக் அன்பழகன் திமுக கவுன்சிலர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category