25/08/2021
திருச்செந்தூர் ஒரு முக்கிய குரு ஸ்தலம் ..!!
திருச்செந்தூர் கோவிலின் மூலஸ்தான மூர்த்தியான ஸ்ரீ பாலசுப்பிரமணியருடன் சேர்ந்தே குருபகவானும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்.
இங்கே குருபகவான் யந்திர ரூபமாகவும், காயத்ரீ மந்திர ரூபமாகவும், நித்யவாஸம் செய்து ஸ்ரீபாலசுப்பிரமணியரை வந்து தரிசிப்போரின் கஷ்டங்களை நீக்கி குரு அருள் புரிகிறார்.
திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தபோது அவருக்கு அருகில் இருந்து ஆலோசனைகள் வழங்கி முருகனை வெற்றி வேலனாக்கியவர் குருபகவான்...!!
அதனால்தான் திருச்செந்தூர் முதன்மை குரு ஸ்தலமாக அறியப்படுகிறது.
ஜோதிடத்தில் குரு பகவானே புத்திரகாரகன் என்றும் , தனகாரகன் என்றும் அறியப்படுகிறது.
புத்திர பாக்கியம் , தனம் வேண்டுவோர் கண்டிப்பாக வழிபட வேண்டிய முதன்மை ஸ்தலம் திருச்செந்தூர் முருக பெருமான் தான்..!!
மூலவர் தரிசனம் செய்த பின்னர் மறக்காமல் கோவில் யானைக்கு கரும்பு வாங்கி தாருங்கள்.
குருவுக்கு உண்டான அருமையான பரிகாரம் இது..!!
சுய ஜாதகத்தில் குரு பகவான் , நீசம் , பகை, மறைவு ஸ்தானங்களில் இருப்பவர்கள் இங்கு வந்து முருகனை வழிபட கண்டிப்பாக குருபகவான் அருள்கிட்டும்.