சாதிக்க நினைத்தால் சாதிக்கலாம், கவிதை
கவிதையின் தலைப்பு
சாதிக்க நினைத்தால் சாதிக்கலாம் ...
சாதிக்க நினைத்தால் சாதிக்கலாம்
சபதம் எடுத்து வென்றிடலாம்
தேட முயன்றால் தேடலாம்-நீ
தெளிவு பெற்று வாழலாம்
மறக்க நினைத்தால் மறக்கலாம்
மகிழ்ச்சியில் உள்ளம் சிறக்கலாம்
மழலைப் போல் சிரிக்கலாம்-நீ
மகத்துவமாய் வாழ்ந்திடலாம்
ஆள நினைத்தால் ஆளலாம்
அச்சமின்றி வீறு நடை போடலாம்
அமிர்தம் கொண்டு உண்ணலாம்-நீ
ஆனந்தமாய் வாழ்ந்திடலாம்
வறுமை பல ஒழித்திடலாம்
வலிமையோடு வாழ்ந்திடலாம்
வரலாறு படைத்து வாழலாம்-நீ
வான் உயர செல்லலாம்
உயர நினைத்தால் உயிரலாம்
உன்னத வளர்ச்சியை கணலாம்
உதவி செய்ய முயலலாம் --நீ
உலகம் வியக்க வாழலாம்
எழுச்சிக் கொண்டு எழுந்திடலாம்-
எல்லோரையும் நேசிக்கலாம்
வெல்ல நினைத்தால் வெல்லலாம் - நீ
வெற்றிகள் படைத்து உயர்ந்திடலாம்
-கவிதாசன் சிவா
இறுதி ஊர்வலம், கவிதை
கவிதையின் தலைப்பு
இருதி ஊர்வலம்..
பூ உலகிற்கு நாம் ஒரு சுற்றுலா வந்தோம்
பூதங்கள் ஐந்திலும் முழுமதி கண்டோம்
பூத உடல் முடிவில் பூமியில் விதைப்போம் -ஆனாலும்
பூ உலகிற்கு தொடர்ந்து புது பிறவி எடுப்போம்
கரைத் தொடும் அலைகள் கலங்குவதில்லை
காதல் காமம் இல்லாத உயிர்களும் இல்லை
கதிரவன் உதயத்தில் இருளும் நிலைப்பதில்லை
காலனை ஜெயித்த மனிதரும் எவருமில்லை
புவியில் புதிய உயிர்கள் இல்லாமல் நாள் ஒன்று இல்லை
பூத உடல் புதைக்காமல் நாள் ஒன்றும் இல்லை
புகழ்ச்சிக்கு மயங்காதோர் எவரும் இல்லை
புரிந்த மனிதர்கள் யாவரும் கலங்குவதில்லை
அன்பாய் அரவணைத்த கைகளும் எங்கே!
ஆறுதல் சொல்லிய உறவுகளும் எங்கே!
அனைத்தும் சொன்ன நண்பனும் எங்கே!
அதிகாரம் செய்த அனைவரும் எங்கே!
பூங்காற்று புதியதாய் அரவணைக்கும் போதும்
சந்திரன் சற்ஒளி சகஜமாய் தொடரும் போதும்
செவியில் செ
கடலும் கடற்கரையும், கவிதை
கவிதையின் தலைப்பு
கடலும் கடற்கரையும்
அலைகள் மோதி கரையை கடக்கும்
அழகான காட்சி மனதை மயக்கும்
அற்புதமான காற்று கவர்ந்து இழுக்கும்
அமைதியான தருணம் மனதை மயக்கும்
கரையின் மீது காதல் கொண்டு
அலை அலையாய் தொடுகிறாய்
கடற்காற்றின் உப்பு சுவையால்-நீ
கன்னமெல்லாம் முத்தமிடுகிறாய்
நதிகள் அனைத்தையும்
நற் சுவையாய் உண்கிறாய்
கரையின் காதலியை முத்தமிட்டு-நீ
நாணம் கொண்டு சிரிக்கிறாய்
கரையின் மணல் பரப்பில்
காலடி பதித்தது காவியமாய் மனதில்
கதிரவனை கடலில் செங்கதிராய்
காலையில் பார்த்தது ஓவியமாய் மனதில்
நெருடலாய் கடற்காற்று கடந்து செல்ல
நெற்றியில் தென்றல் போல் முத்தமிடுகிறாய்
நெய்தல் மக்கள் மீன்பிடிக்க செல்ல
நெஞ்சமெல்லாம் நினைவு களை பதிக்கிறாய்
- கவிதாசன் சிவா
வலி தாங்க முடியல, கவிதை
கவிதையின் தலைப்பு
வலி தங்க முடியல
பாசம் வைக்காதே! --என்று
படைச்ச அவ சொல்லலையே!
பழி சொல்லுக்கு ஆளாக்கி-என்னை
பழியிடுவார் என்று தெரியலையே!
எங்கே! நான் சென்றாலும்
என்ன செய்வது என்று புரியலையே! எப்போதும் எதிர்மறை சிந்தனை
என்னை விட்டு விலகலையே!
கனவுகளை சுமக்க வைச்சி
கண்ணாடியா! நொறுங்க வைச்சா! காலனிடம் உயிரை காப்பாற்றி
கண்ணீர் கொண்டு துடிக்க வைச்சா!
அன்புக்காக அடிமைப்படுத்தி
ஆயுள் முழுவதும் அழவைச்சா!
அதிகமாக பாசம் வைக்க வைத்து
அனு அனுவாய் சிதைக்க வைச்சா!
நினைத்து நினைத்து நிமிடம்
நிமிடம் தொடர்ந்து ஏங்கவைச்சா!
நிழல் போல பின் தொடர்ந்து
நித்தம் நித்தம் துடிக்கவைச்சா!
உதவி எதுவும் கிடைக்கமா?
ஊர் ஊரா சுத்த வைச்சா!
உறக்கமே! இல்லாம..
ஊளி போல தேய வைச்சா!
அன்பு காட்ட அம்மாவும்மில்ல! அனைத்தும் சொல்ல அப்பனுமில்ல! அணைத்து கொள்ள அவளுமில்ல! ஆறுதல்
மழை, கவிதை
கவிதையின் தலைப்பு
மழை
மழையே! நீ வரும் போதெல்லாம்
மண் வாசனை மணக்கிறதே!
மாரியே! நீ பொழியும் போதெல்லாம்
மனசெல்லாம் குளிர்கின்றதே!
விழி மூடி திறக்கும் முன்பே!
விழுந்த இடம் தெரியாமல் மறைகின்றாள்
வீசும் காற்றில் சாரலாய் மழையாய்
விந்தைகள் செய்து வியக்க வைக்கிறாள்
சிப்பிக்குள் இருக்கும் முத்துப்போல்
சிறு துளியாய் விழுகின்றாள்
சிறகடிக்கும் பறவையை போல்
சிரித்து கொண்டே! பொழிகின்றாள்
கருமேகங்களின் வான் மகளாய்
காப்பாற்ற வருகின்றாள்
காடுகளையும் புல்வெளிகளையும்
காதல் கொண்டு காண வருகின்றாள்
வெளிர் வான் மகளின் மேடையிலே!
வெள்ளி தோரணமாய் விழுகின்றாள்
வெப்பத்தை தணித்து குளிர்ச்சியிலே!
வேகமாய் பொழிய வருகின்றாள்
அருவியை பெருக்கி
ஆறாய் பாய்கிறாள்
அணைகளிடம் தங்கி
அனைவருக்கும் உதவுகிறாள்
மலைகளையும் மரங்களையும் குளிர்வித்து
மண்ணின் வளங்களை
ஒகேனக்கல் அருவி,கவிதை
கவிதையின் தலைப்பு
ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் அருவியே!
ஓங்கி உயர்ந்தாய்
ஓவியத்தின் அழகே!
ஒலி எழுப்பி சிரித்தாய்.
காவிரி தாயின் மடியில்
கனிவாய் உறங்கினாய்
கருங்கள் பாறைகளில்
கதறிக் கொண்டாய்
தமிழ்நாட்டுக்கு முதன் முதலாக தருமபுரிக்கு வருகை தருகிறாய் தந்தையைப் போல தருமபுரிக்கு
தாகம் தீர்க்க உதவுகிறாய்
வெண்ணிற ஆடை அணிந்து
வெள்ளி போல் ஜொலிக்கிறாய்
வெளிர் நுரையாய் மிதந்து
வெட்கம் கொண்டு மறைகிறாய்
அருவியின் அழகு ஆனந்தத்தை
அள்ளிக் கொடுக்கும் காவியம்
அழகில் ஐந்தருவி துள்ளல் ஆண்டவனையும் மயக்கும் ஓவியம்
ஓ' வென்று இசை முழக்கம் இட்டே!
ஓடியே! ஒகேனக்கல் வருகின்றாய்
ஒவ்வொரு நாளும் மக்களுடன் மகிழ்ந்து
ஒலி எழுப்பி நீர்வீழ்ச்சியில் சிரிக்கின்றாய்
அருவியின் அழகை கண்டு ரசிப்போம் அற்புதமான காற்றை சுவாசிப்போம் வலை ஒளியில் கவிதை பார்ப்ப
இவள் பேரண்டத்தின் பேரழகி, கவிதை
கவிதையின் தலைப்பு
இவள் பேரண்டத்தின் பேரழகி
செந்நிற மேனியை பார்த்து-அந்த செவ்வானமும் சிதைந்து போகும் செவ்விதழ் உதட்டை கண்டு
செம்பருத்தி மலரும் வாடிப்போகும்
மேனகையும் மென்மையை பார்த்து மேகமாய் கலைந்து சேன்றாள்
ஊர்வசியும் அவளை பார்த்து ஊரைவிட்டே ஓடிவிட்டாள்
கன்ன குழி அழகை பார்த்து
கங்கைக்கே! வழிமறக்கும்-அவள்
கரு விழி கருமையை கண்டு
கம்பனுக்கே! கவிமறக்கும்
இந்திரனும் அவள் இடையை பார்க்க இறங்கியே..! வந்து விட்டான்
மன்மதனும் முன்னழகை கண்டு மயங்கியே..! போய்விட்டான்
முப்பாட்டன் வள்ளுவனும் அடிகள் எழுத முயற்சி செய்து முடியாமல் தவித்தாரோ! பேரண்டமே அவளின் பேரழகைப் பார்த்து பேச முடியாமல் பேதழித்து நின்றாரோ!
புருவஅழகை பார்த்து ரசிக்க-சந்திரன் பூலோகம் வந்து இறங்கிவிட்டான்
நளின நடையை பார்த்து விட
நாகேந்திரனும் ஆட தொடங்கிவிட்டான்
ஒட்
என்னால முடியல, கவிதை
கவிதையின் தலைப்பு
என்னால முடியல...
கண்ணுல கண்ணீர் வந்ததால
கண் இமையே மூடவே! முடியல
காப்பாத்திக்க போராடவும் முடியல காலன்கிட்ட போகவும் தோனல காரணமும் எதுவும் தெரியல...
தமக்கையின் துரோகத்தால
தகவல் எதுவும் கிடைக்கல தன்னந்தனியா வாழவும் முடியல தனிமையாய் இருக்க முடியல ...
சாப்பிடவே! தோனல
சாப்பாடு முழுசா சாப்பிட முடியல
சபதம் எடுத்து வாழவும் தோனல
சாம்பு தொழிலும் செய்ய முடியல...
யாருன்னு யாரும் கேட்கல
யாருன்னு கேட்க நாதியில்ல
யானை பலமும் இல்ல
யாசகர் கிட்ட சேரவும் தோனல...
ஆண்டவன் ஆசியும் கிடைக்கல
அதற்கு தகுதியும் இல்ல
ஆண்டவன் அநீதி இழைச்சதுனால
அன்பு காட்ட யாருமில்ல
தூக்கம் இரவுல வரல
தூக்கம் வந்தா தூங்க முடியல
தூய்மையா எப்போது இருக்க முடியல துறவி போல வாழவும் முடியல...
இனிமையா பேச முடியல
இருப்பிடத்துக்கு போக முடியல
இதை யாரிடமும் சொல்ல தெரிய
யாரோ ஒருத்தி,கவிதை
கவிதையின் தலைப்பு
யாரோ ஓருத்தி
என்னை எட்டிப் பார்த்த ஒரு பார்வை
எழிலின் வடிவாக ஒரு பாவை
அடுத்த நாள் சேதாரம் இல்லாத சிலையாய்
அன்று முதல்பாவையின் மீது அலையாய்
கடந்து அவள் போகயில் பூரிப்பு
கடை கண் பார்வையிலே சில்லிர்ப்பு
நான் ரசித்த ஓவியத்தின் உயிர் வடிவம்
அவள் இயற்கையின் எழில் வடிவம்...
அன்று என் பேனா பாவையை நிலா வானம் என்று கிறுக்கியது
அடுத்த நாள் அவளின் அப்பாவின் பேச்சு என்னை சுருக்கியது
அப்போது அவளை பற்றி என் ஆழ் மனதில் தோன்றியது
அடுத்த நாள் எனது என் பேனா அவளின் அழகை பற்றி எழுதியது
கன்ன குழி அழகிலே
களவு செய்து வென்றாய்
கடை கண் பார்வையிலே
காத்திருந்து கொன்றாய்
பார்வையே போதும் புள்ள
பசியும் கூட வந்ததில்ல
விழியழகை பார்க்கையிலே
வீட்டுக்கு போகவும் மனம் இல்ல
நான் பாவையை பற்றி எழுதிய முதல் கவிதையும் அதுதான்
நானே என் மனதில் பாவையை
என் தனிமையின் கண்ணீர், கவிதை
கவிதையின் தலைப்பு
என் தனிமையின் கண்ணீர்
ஊரை விட்டு வந்து நான்
ஊர் ஊரா சுத்துறேன்
உறக்கமே! இல்லாம
உருகி உருகி தேய்கிறேன்...
தனித்தனியா துயரங்களை
தமக்கையை போல தராதேன்னு கேட்கிறேன்
தனிமையே! என்னை சிறிது
தனியா விடுன்னு தவிக்கிறேன்...
எல்லாமே! ஏமாத்திட்டாங்க என்னடா! வாழ்க்கைன்னு துடிக்கிறேன்
எதுவுமே நிலையில்லைன்னு
என்னை நானே! தேத்துறேன்...
கயவர்களின் சூழ்ச்சியால
கண் கலங்கி நிற்கிறேன்.
காலனிடம் கையேந்தமா
கடவுள் கிட்ட வேண்டுறேன்
விதவைப் போல விழியோரம்
விழி நீரா! சிந்துறேன்
விரல் ஒடிந்த எழுத்தர் போல
விம்பி விம்பி அழுகிறேன்...
ஒவ்வொரு நாளும் நான்
ஒருயுகம் போல கடக்கிறேன்
ஒரு உதவியவது கிடைக்காதா- என்று
ஓடி ஓடி தேய்கிறேன்...
அம்பு இல்ல அரசன் போல
அனுதினமும் கொதிக்கிறேன் அடைக்கலம் இல்லா அகதி போல
அங்கும் இங்கும் சுத்துறேன்.
-கவிதாசன் சிவா
என் நண்பனே! எழுந்து நில். கவிதை
கவிதையின் தலைப்பு
என் நண்பனே! எழுந்து நில்!
வாடாத மலர்கள் எதுவுமில்லை
வலியில்ல வாழ்க்கை எதுவுமில்லை வழியில்ல ஊரும் எதுவுமில்லை வருத்தமில்ல மனிதரும் எவருமில்லை
- ஆகவே வாடிவிடாதே!
என் நண்பனே! எழுந்து நில்!
கண்ணீர் சிந்தாத விழி இல்லை
கதிரவன் இல்ல நாளில்லை
கடந்து போகாத துன்பம் எதுவுமில்லை கடக்க முடியாத பாதை எதுவுமில்லை
- ஆகவே கண்ணீர் சிந்தாதே!
என் நண்பனே! எழுந்து நில்!
விழாது நீர்வீழ்ச்சி எதுவுமில்லை
விழாமல் எழுச்சி எதுவுல்லை
தேடாமல் தேனீக்கள் எதுவுமில்லை தேடாமல் புதுமையும் இல்லை
-ஆகவே தோய்ந்துவிடாதே!
என் நண்பனே! எழுந்து நில்!
இலக்கு இன்றி உயர்வும் இல்லை இலக்கணம் இன்றி தமிழ் இல்லை
இரவு இல்ல பகலும் இல்லை
இன்பம் எப்போதும் நிரந்தரமில்லை
-ஆகவே இழந்து விடாதே!
நம்பிக்கையை நண்பனே! எழுந்து நில்!
துயரம் இல்லா வாழ்க்கை இல்லை துன்பமில்லா