Digital Aruppukottai

Digital Aruppukottai அருப்புக்கோட்டை சுற்றுவட்டார செய்திகள்
(3)

06/07/2026

படிக்கும் போது வேலை பார்த்த பார்த்த அனுபவம் இருக்கா நண்பர்களே...

05/07/2026

மஹாலட்சுமி பேக்ஸ் அருப்புக்கோட்டை மதுரை ரோடு கல்குறிச்சி தோனுகால்

இந்திய ராணுவத்தின் 'லடாக் ஸ்கவுட்' கர்ணலாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த விஜயகுமார் (40) தேர்வு; வத்திரா...
23/06/2026

இந்திய ராணுவத்தின் 'லடாக் ஸ்கவுட்' கர்ணலாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த விஜயகுமார் (40) தேர்வு; வத்திராயிருப்பை சேர்ந்தவர் ராணுவத்தில் மிக பெரிய பதவியில் அமர்ந்தது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

| | | | #அருப்புக்கோட்டை

மக்களின் சேவையே எங்கள் நோக்கம்!நான்காம் ஆண்டு வெற்றிப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் பைரவா டிவி, அரசு சார்ந்த நிகழ்ச்சி...
21/06/2026

மக்களின் சேவையே எங்கள் நோக்கம்!

நான்காம் ஆண்டு வெற்றிப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் பைரவா டிவி,

அரசு சார்ந்த நிகழ்ச்சிகள், பொதுமக்கள் நல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சமூக சேவை நிகழ்வுகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் முக்கிய அறிவிப்புகள் ஆகியவை பைரவா டிவியில் இலவசமாக ஒளிபரப்பு / விளம்பரம் செய்யப்படும்.

மக்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும், அரசு துறைகளுக்கும் ஒரு பாலமாக செயல்படுவது எங்கள் பெருமை.
"உண்மையான செய்தி... மக்களுக்கான சேவை..."

இவண்:
பைரவா டிவி நிர்வாகம்
4ஆம் ஆண்டு வெற்றிப் பயணத்திற்கு நன்றியுடன்...

APK best ride taxi
19/06/2026

APK best ride taxi

சாஸ்தா பலகாரம் பண்ணை பால் காந்திநகர் சூடான டீயும், சுவையான பலகாரமும் சேர்ந்திடும் வேளையில்,சோர்வுகள் எல்லாம் மறைந்து மகி...
17/06/2026

சாஸ்தா பலகாரம் பண்ணை பால்
காந்திநகர்

சூடான டீயும், சுவையான பலகாரமும் சேர்ந்திடும் வேளையில்,
சோர்வுகள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சி மலர்கிறது மனதில்.

காலை முதல் இரவு வரை கூட்டம் குறையாத காரணம்,
தரம் காக்கும் சேவையும், சுவை காக்கும் நேர்மையும்!

சாஸ்தா பலகாரம் என்ற பெயர் கேட்டாலே நாவில் சுவை ஊறும்,
அருப்புக்கோட்டை மக்களின் அன்பில் என்றும் உயர்ந்து நிற்கும்!

"சுவையின் சின்னம் – சாஸ்தா பலகாரம்,
தரத்தின் முகவரி – பண்ணை பால் கடை!"

சாஸ்தா பலகாரம் பண்ணை பால் கடை
காந்திநகர் மேம்பாலம் அருகே

#டிஜிட்டல்_அருப்புக்கோட்டை

17/06/2026

தொழில் செய்ய தரமான கட்டிடம் வாடகைக்கு அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவில் வீதியில்

17/06/2026

1500 ரூ முதல் கேமரா CCTV WIFI Camera Tamil Agency ஆத்திபட்டி
9566999722

கல்வி வியாபாரமா? பள்ளிகளின் சுயரூபம்!​அருப்புக்கோட்டையில் அரங்கேறிய கொடுமை – தட்டிக்கேட்ட  நுகர்வோர் அமைப்பு!​வாங்கி முட...
11/06/2026

கல்வி வியாபாரமா? பள்ளிகளின் சுயரூபம்!
​அருப்புக்கோட்டையில் அரங்கேறிய கொடுமை – தட்டிக்கேட்ட
நுகர்வோர் அமைப்பு!

​வாங்கி முடிக்கும் வரை பணம்... பொதுத்தேர்வு என்று வந்தால் துரோகமா?
​அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படித்து வந்த ஒரு மாணவிக்கு, 10-ஆம் வகுப்பு சேர்க்கையின் போது பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. "நீ எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தால் ஃபெயில் ஆகிவிடுவாய், அதனால் வேறு பள்ளிக்குச் செல்" என்று கூறி, கட்டாயப்படுத்தி மாற்றுச்சான்றிதழ் (TC) கொடுத்து வெளியேற்றியுள்ளனர்!

​பெற்றோர்களின் 15 நாள் கண்ணீர் போராட்டம்!

விவரம் அறியாத அந்த ஏழைப் பெற்றோர்களும், மாணவியும் கடந்த 15 நாட்களாக அருப்புக்கோட்டையில் உள்ள அத்தனை பள்ளிகளுக்கும் (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட) ஏறி இறங்கியுள்ளனர். ஆனால், எந்த ஒரு பள்ளியும் அந்த மாணவியைச் சேர்க்க முன்வரவில்லை.

ஒரு குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாகி, நடுத்தெருவில் நின்ற அவலம்!
​களத்தில் இறங்கிய நுகர்வோர் அமைப்பு!

இந்த அநீதி குறித்து தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்புக்கு நண்பர் மூலம் தகவல் கிடைத்தது.

உடனடியாக நமது அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் களத்தில் இறங்கினர். எந்தப் பள்ளிகள் சேர்க்க மறுத்தார்களோ, அதே பள்ளிகளைத் தட்டிக்கேட்டு, அந்த மாணவியை இப்போது அரசுப் பள்ளியில் வெற்றிகரமாகச் சேர்த்து உள்ளார்கள்

​பள்ளி நிர்வாகங்களுக்கும், கல்வித்துறைக்கும் சில காரசாரமான கேள்விகள்:

​6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை நான்கு வருடங்கள் உங்களிடம் தான் அந்தப் மாணவி படித்தாள்.

அப்போதெல்லாம் அவளுக்குப் படிக்கத் தெரியவில்லை என்பது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?
​நான்கு வருடங்களாக அந்தப் பெற்றோரிடம் பணத்தை (Fees) வாங்கும் போது வராத பயம், பொதுத்தேர்வு (Public Exam) என்று வந்தவுடன் 100% தேர்ச்சி காட்ட வேண்டும் என்ற சுயநலத்திற்காக அந்தப் பிள்ளையைத் துரத்துகிறீர்களே... இதுதான் நீங்கள் கற்றுத்தரும் கல்வியா?

​ஒரு மாணவிக்கு எழுதப் படிக்கத் தெரியவில்லை என்றால், அது அந்த மாணவியின் தவறு அல்ல! நான்கு வருடங்களாக அவளுக்குக் கற்றுக்கொடுத்த உங்கள் பள்ளியின் தவறு,உங்கள் கற்பித்தல் தரம் அவ்வளவுதான் லட்சணமா?

​மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் (CEO) என்ன செய்து கொண்டிருக்கிறது? தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்களின் விளம்பரத்திற்காகவும், 100% ரிசல்ட்டுக்காகவும் மாணவர்களின் வாழ்க்கையை இப்படிச் சீரழிப்பதை ஏன் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்க்கிறீர்கள்?
​மக்களே விழித்துக் கொள்ளுங்கள்!
பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான், இது போன்ற கல்வி நிறுவனங்கள் எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் இப்படிப்பட்ட துரோகங்களைச் செய்யத் துணிகின்றன. இவர்களுக்கு இவ்வளவு தைரியத்தை யார் தருகிறார்கள்?
​நமது உரிமைகளைப் போராடிப் பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மக்கள் விழிப்புணர்வு அடைந்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும்! கல்வியின் பெயரால் நடக்கும் இந்த வியாபாரத்தை ஒடுக்க ஒன்றிணைவோம்!
​"கல்வி என்பது உரிமை... அது வியாபாரமல்ல!"

சில நாட்கள் முன்பு  காரியாபட்டி பகுதியில் பத்திரிகை சேகரிப்பு பணிக்காக சென்ற சன் தொலைக்காட்சி நிருபர் திரு.அருண் அவர்களி...
10/06/2026

சில நாட்கள் முன்பு காரியாபட்டி பகுதியில் பத்திரிகை சேகரிப்பு பணிக்காக சென்ற
சன் தொலைக்காட்சி நிருபர் திரு.அருண் அவர்களின் வீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள் அருண் அவருடைய குடும்பத்தினரை தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மக்கள் பிரச்சனைகளை கொண்டு செல்லும் விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
எனவே திரு.அருண் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

Address

ஆத்திபட்டி
Aruppukkottai
626161

Alerts

Be the first to know and let us send you an email when Digital Aruppukottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share